சாவர்க்கரின் கஷ்டங்களைக் குறைத்து மதிப் பிடக் கூடாது. அதேபோல், அவரது சரணாகதியையும், சமரசப்போக்கையும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அவரை, வீரராகப் புகழ்பவர்கள், அவரது முதல் பாதியை மட்டும் மிகைப்படுத்திக் கூறிவிட்டு, பிற்பாதியைப் பற்றி அவர்களால் மறுக்க முடியா விட்டாலும், கண்டுகொள்வதில்லை. தாஸ்குப்தா, இதனை மிகச் சரியாக முன்வைக்கிறார்:

“விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஓர் விடுதலைப் போராளி தான்.. ஆயினும் அவர் சிட்டகாங் எழுச் சியை முன்னெடுத்துச் சென்ற வீரம் செறிந்த புரட்சி யாளர்களைப் போல பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் இறந்திடவில்லை அல்லது கொண்ட கொள்கைக்காகத் தூக்குமேடை ஏறிய பகத்சிங் மற்றும் குதிர்ராம் போஸ் போன்றவருமல்ல.

சென்ற நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உணர்வுகள், பிற்காலத்தில் ஒரு தடவையல்ல பலமுறை மன்னிப்பு கோரக்கூடிய அளவிற்கு மிகவும் நொறுங்கிப் போய்விட்டன. அந்தமான் செல்லுலர் சிறையில் சித்திர வதைக்குள்ளாக்கப்பட்ட வேறு பல புரட்சியாளர்கள் இது போல் மன்னிப்புக் கோர கனவிலும் கருதிய தில்லை”.

ஆனால், வீர் சாவர்க்கர் செய்தார். காலனியாதிக்க ஒடுக்குமுறையாளர்களை ‘வல்லமை பொருந்திய கருணைவான்களே!’ என்று விளித்தார். பிரிட்டிஷா ருடன் மிகவும் கேட்டுகெட்ட முறையில் ஒத்துழைத்து, ஆர்.எஸ்.எஸ். பாரம்பர்யத்தைத் தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த இந்த இழிசெயல், மிகவும் கொந்தளிப்பான நாற்பதுகளில் அதிர்ச்சியான குறிப்புகளுடன் முடிவடைந்தது. அதனால்தான், அவரது தாசானு தாசனான முரளி மனோகர் ஜோஷி தன் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் (ICHR - Indian Council of Historical Research), சாவர்க்கர் பிரிட்டிஷாருடன் உடந்தையாக இருந்த விவரங்களை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டும் சுதந்திரப் போராட்ட நூல் வரிசைகளை (Towards Freedom Series) வெளியிடுவதற் குத் தடை செய்தார்.

சங் பரிவாரக் கும்பல், பிரட்டிஷ் ஆட்சியாளர் களுக்கு உடந்தையாக இருந்து செயல்படுவதற்கான விதைகள், இந்தப் ‘புரட்சியாளரால்’ 1911- 13களிலேயே விதைக்கப்பட்டுவிட்டது. 1939 அக்டோபர் 9 அன்று, வைஸ்ராய் லின்லித்தோ என்பவரிடம் சாவர்க்கர் அளித்துள்ள பதிவுகளிலிருந்து, அவர் எந்த அளவிற் குத் தரம் தாழ்ந்து, சென்றிருக்கிறார், பிரிட்டிஷாரிடம் தலைகுனிந்து செயல்படத் தயாராயிருக்கிறார் என்ப தைக் காட்டுகிறது. அதுவும் இது எப்போதென்றால், காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷாருக்கு எதிரான போராட் டங்களைப் புதுப்பிக்கும் முடிவோடு, முதல் கட்டமாக தான் ஆட்சி செய்த மாகாணங்களில் அமைச்சரவை யிலிருந்து வெளியேறத் தீர்மானித்த சமயத்தில்தான், சாவர்க்கர் இதுபோன்ற பிரிட்டிஷாரின் அடிமைச் சேவகனாகக் கூனிக்குறுகிச் செயலாற்ற முன்வந்திருக் கிறார்.

‘ஆயுள் காலத்திற்கு நாடு கடத்தப்பட்ட என் கதை’ (The Story of My Transportation for Life)) என்கிற சாவர்க் கரின் முதல் மராத்திப் பதிப்பு 1927இல் வெளியிடப் பட்டது. அந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது; 1947இல் தடை நீக்கப்பட்டது. இந்த நூல் முழுவதும் வகுப்புத் துவேஷமே நிறைந்திருந்தது. பிரிட்டிஷாரை அப்புறப்படுத்திட இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும் என்று 1857 குறித்து அவரது முந்தைய நூல் வாதிட்டது. அப்படிக் கூறிக் கொண்டி ருந்த சாவர்க்கரிடம் எப்பொழுது, எங்கே இந்த மாற்றம் ஏற்பட்டது? இதனை உண்மையில் அவரை நுணுகி ஆய்வு செய்தோமானால், அவரிடம் 1857 குறித்து அவர் எழுதிய நூலிலேயே நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தது போல, மதவெறிக் கண்ணோட்டம் இருந்ததைக் காண முடியும்.

சாவர்க்கர் அந்தமானில் இருந்தபோது, உலகத்தின் முன்னால் அவர் ஒரு ஹீரோவாகச் சித்தரித்துக் காட்டப்பட்டு கொண்டிருந்த அதே சமயத்தில், நடைமுறையில் அவர் பிரிட்டி ஷாரிடம் சரணாகதி அடைந்து விட்டதை எவரும் அறிந்திருக்கவில்லை. அவருடைய மதவெறிக் கண் ணோட்டமும் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர் கொண்டிருந்த வெறுப்பும் வெளி உலகத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. கட்டுப்பாட்டுணர்வில் நிலை குலைந்து போனதன் காரணமாகவே அவர் சரணாகதி அடைந்தார். 1911இலும் 1913இலும் அவர் பிரிட்டிஷா ருக்கு எழுதிய மனுக்கள் அவர் இறந்த பின், ஆவணக் காப்பகத்தில் தேடியபோதுதான் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தன. அவருக்குப் ‘புரட்சியாளர்’என்கிற சித்திரத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக, அவர் 1924இல் வெள்ளையர்களிடம் கொடுத்த உறுதி மொழியை, (அரசாங்கம் அதனைப் பிரசுரித்திருந்தது) மக்கள் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. ஆயினும், விசாரணைக் காலத்தில், அவர் அளித்த சான்றிதழோ அல்லது அவர் மதவெறிப் பிரச்சாரம் செய்ததற்காக, முஷ்டியில் அடிக்கப்பட்டபோது, முழுமையாக சரணாகதி அடைந்து அவ்வாறு குற்றம் செய்ததற்காக மிகவும் வருந்துவதாகவும் எழுதிக் கொடுத்ததோ வெளி உலகத்திற்குத் தெரிவிக்கப் படவில்லை. இருபதுகளின் மத்தியில்தான், அவருடைய மதவெறிக் கண்ணோட்டம் உலகிற்குத் தெரியத் தொடங்கியது.

சிறையில் மதவெறிப் பிரச்சாரம்

சிறையில் முஸ்லிம் வார்டர்கள் சாவர்க்கரைக் கொடுமைப்படுத்தியதால்தான், சாவர்க்கருக்கு மத வெறிக் கண்ணோட்டம் உருவானது என்றும் உறுதி யாகக் கூறிவிட முடியாது. மற்ற கைதிகள் அதுபோன்று எந்தவிதமான மாற்றம் எதனையும் அடைந்திட வில்லை. ‘அனைத்து அரசியல் கைதிகளும் தங்கள் வார்டர்களாக முஸ்லிம்களைப் பெற்றிருந்தார்கள்’என்றும், ‘இந்துக்கள் இரு விதத்தில் பாதிக்கப் பட்டார் கள். முதலில், அவர்கள் சக கைதிகளான முஸ்லிம் களால், அடுத்து அவர்களுடைய முஸ்லிம் வார்டர் களால். (பக். 90 - 91). அந்த நூலின் இரண்டாவது அத்தியாயம் முழுவதும், அந்தமான் ‘சுத்தி” இயக்கம் குறித்து எழுதியிருக்கிறார். இதில் அவருடைய மொழி மிகவும் இழிவான முறையிலேயே இருக்கிறது.

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகி றார்கள். முஸ்லிம்கள், இதற்காக யுத்தங்களைத் தொடுத் தார்கள். ஆண்கள், பெண்கள் அனைவரிடமும் வாளைக் கொடுத்து போர் புரிய வைத்தார்கள். வீடு களைத் தீக்கிரையாக்கினார்கள், சூறையாடினார்கள். - சுருக்கமாகச் சொல்வதானால் இந்துக்களை ஒட்டு மொத்தமாக மதமாற்றம் செய்வதற்காக ஜிகாத் பிர கடனம் செய்தார்கள்” (பக். 292 - 293).

‘இந்துக்களாகிய நாம் மற்றவர்கள் நம்மிடம் விளை யாடியது போல், நாம் அவர்களிடம் விளையாடாத தால், மட்டுமீறிய வகையில் பலவற்றை நாம் இழந் துள்ளோம்’என்று அவர் முறையிடுகிறார். (ப. 286). சாவர்க்கர் இவ்வாறு சிறைக்கு உள்ளும், ‘விளையாடு’கிறார், சிறைக்கு வெளியிலும், சிறைக்கு வெளியே வேலை பார்ப்பதற்காகச் செல்லும் கைதிகள் (கன்விக்ட் வார்டர்கள்) மூலம் ‘விளையாடுகிறார்’. சிறைக்குள்ளி ருந்து ‘சுத்தி’இயக்கம், அந்தமானில் குடியேறியிருந்த மக்கள் மத்தியிலும் பரவத் தொடங்கியது. (ப. 312). அவர் வந்தபின் இதற்கான பிரச்சாரம் தொடங்கி விட்டது.

“நான், என்னுடைய சுத்தி இயக்கத்தை 1913இல் தொடங்கி, அந்த ஆண்டிலேயே அது சார்பாக முதல் போராட்டத்தை நடத்தினேன். அன்றிலிருந்து 1920-24இலிருந்து இந்தியாவில் நான் சிறையிலிருந்த நாட்களில் இந்த வேலையைத் தொடர்ந்து செய்தேன். பின்னர் 1924இல் நான் விடுதலையான பிறகும், தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். நான் அதனை அனைவருக்கும் விடுதலை, நீதி, நடுநிலைமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு என் மனதில் கிறித்துவர்கள் மீதோ, முஸ்லிம்கள் மீதோ அல்லது மத நம்பிக்கையற்றவர்கள் மீதோ அல்லது ஆதிகாலக் காட்டுமிராண்டிகளாகத் தங்களைக் கருதிக் கொள்ப வர்கள் மீதோ எந்த வெறுப்பும் கிடையாது. அவர்களில் எவரையும் நான் ஏளனத்துடனோ அல்லது அவ மதிப்புடனோ பார்த்ததில்லை. ஓரினத்திற்கு எதிராக ஒடுக்கும் பாங்குடனும், வன்முறையுடனும் நடந்து கொள்கிறவர்களைத்தான் நானும் மூர்க்கத்தனமாக எதிர்க்கிறேன். ‘சுத்தி’இயக்கம், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு நிரந்தர ஒற்றுமைப் பாலத்தை எழுப்பிடும் எனவும், ஒட்டு மொத்தமாக இந்தியாவின் நலனுக்குச் சாதகமான ஒன்று என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்”. (ப. 326).

இது ஒரு விதண்டாவாதமேயாகும். இந்தப் பூமியில், சுத்தி என்று சொல்லப்படுகின்ற இயக்கமானது பல்வேறு இனத்தினருக்கிடையே ‘நிரந்தர ஒற்றுமை யை’க் கொண்டு வரும் என்று கூறுவது எப்படி? அவருக்கே வெளிச்சம்.

(எ.ஜி. நூரணி இயற்றிய ‘சவார்க்கரும் இந்துத்து வமும் - மகாத்மா காந்தி படுகொலையும்’நூலிலிருந்து.. (பக்கம் - 56 - 59)) தமிழில்: பாரதி புத்தகாலயம், சென்னை -18 பேசி: 044-24332424

Pin It