மதுரையில் 12.04.15 அன்று மகளிர் ஆயம் சார்பில் 'நியூட் ரினோ - ஒரு பேரழிவு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. தமிழ்நாடு இறையியல் கல்லூரி, பரட்டை அரங்கத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மகளிர் ஆயம் தமிழக ஒருங்கி ணைப்பாளர் தோழர் அருணா தலைமை தாங்கினார். தோழர் இளமதி வரவேற்றார். தோழர் மேரி நிகழ்வை ஒருங்கிணைத் தார்.

திரளான மாணவிகளும், இருபால் தமிழின உணர்வா ளர்களும் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் முதலில் பூவுலகின் நண்பர்கள் அமைப் பின் சார்பில் பொறியாளர் சுந்தர்ராஜன், நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தின் ஆபத்துகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கி னார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் நிறைவுரையாற்றினார். தோழர் சந்திரா நன்றி நவின்றார்.

இக்கருத்தரங்கில் தோழர் கி.வெ. ஆற்றிய உரையின் சுருக்கமான எழுத்துவடிவம் :

“நெருக்கடியான காலகட்டத்தில் நியூட்ரினோ பற்றி கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருக்கிற மகளிர் ஆயத்தின் தோழர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். எனக்கு முன்னதாக பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் அவர்கள் நியூட்ரினோ ஆய்வகம் பற்றிய அடிப்படையான அறிவியல் தரவுகளை, விரிவாகவும், செறிவாகவும் வழங்கியிருக்கிறார். அவர் சொல்லிய செய்திகள் தரவுகள் என்பதைவிட அதில் இருக்கக்கூடிய உண்மை யின் தவிப்பை, சத்திய ஆவேசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தை எதிர்ப்பதென்பது மண்ணை நேசிப்பவர்களின் மனப் பதைப்பு. இந்தத் திட்டம் ஏன் இங்கு வருகிறது என்பதையும், அதன் அமெரிக்கப் பின்னணி என்ன என்பதையும் அவர் விளக்கினார். அமெரிக்கப் பின்னணியில்லாமல் இந்தியாவே இத்திட்டத்தை செயல்படுத்துகிறது என்று வைத்துக் கொண்டு பார்த்தாலும் கூட இதில் இருக்கக் கூடிய சிக்கல்கள் என்ன என்பது குறித்தும் நாம் சிந்திக்கலாம்.

இதை எதிர்க்கிற முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய (12.04.2015) தமிழ் ’இந்து’ நாளேட்டில் திரு. இராமதுரை அவர்களும், ஏற்கெனவே திரு. பார்த்தசாரதி அவர்கள் தினமணிக் கதிரிலும், நியூட் ரினோ பற்றிய அடிப்படை அறிவியல் செய்திகளை எழுதியுள்ளார்கள். ஏன் இப்படி தொடர்ந்து இவர்கள் எழுதி வருகிறார்கள் என்றால் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை நேரடியாக சந்திக்க முடியாமல் இந்த ஆய்வகம் என்பது அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக் கானது, தவிர்க்க இயலாதது, அதிசயங்கள் நிறைந்தது, உலகத் தோற்றம் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள தேவையானது என்று பரப்புரை செய்கி றார்கள்.

இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் நியூட்ரினோ ஆய்வகம் குறித்து நேருக்கு நேராக வைக்கின்ற வினாக்களுக்கு பதில் சொல்லாமல் நியூட்ரினோ பற்றிய அடிப்படை அறிவியல் செய்திகளையே மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர்.

அறிவியல் பாடத்திட்டத்தில் சொல்ல வேண்டிய அடிப்படை செய்திகளை நியூட்ரினோ என்றால் என்ன? காஸ்மிக் கதிர்கள் என்றால் என்ன? அதில் எவ்வளவு நியூட்ரினோ துகள்கள் உள்ளன என்பவைப் பற்றி சொல்லி நியூட்ரினோ ஆய்வகத்தை நியாயப் படுத்துவதற்கு இவர்கள் முயல்கிறார்கள்.

திரு. இராமதுரை தனது கட்டுரையில் மின்னணு (எலெக்ட்ரான்) கண்டுபிடிக்கப்பட்டு, அதன் அறிவியல் உண்மைகளை ஆராய்ச்சி செய்ததால்தான் மின்ன ணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்_ எனும் ஒரு துறையே வளர்ந்தது. சமூகப் பயன்பாட்டிற்கு உரிய புதிய கருவிகள் வந்தன. அதுபோல நியூட்ரினோ பற்றி ஆய்வுகள் நடந்தால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். எனவே தடை செய்யாதீர்கள் என்று சொல்கிறார்.

நியூட்ரினோ ஆய்வு பற்றி, அதன் நோக்கம் பற்றி இவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்பதற்கான ஆதாரம் நுட்பமான சொற்களாக அவர்களின் ஆய்வறிக்கையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. திட்ட அதிகாரி இந்துமதி அவர்கள் உயர்நீதிமன்ற தடைக்குப் பின்னால் சிறுபிள்ளைத்தனமாக "நாங்களேதான் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று சொல்லியிருக்கின்றோமே” என்கிறார்.

இவர்கள் நேர்மையாக இன்னின்ன காரணங்களுக் காக இவ் ஆய்வை செய்கிறோம், இதன் விளைவுகள் இது என்று ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? அதற்குப் பதிலாக இத்திட்டத்தை எதிர்ப்பவர்களை திரு. வைகோ உட்பட இவர்கள் அறிவியலாளர்கள் இல்லை, இவர்கள் எதிர்ப்பதற்கு தகுதி இல்லை என்று சொல்வது ஏன்?

இது அறிவின் செருக்கு. நீண்ட காலமாக இந்தியாவில், தமிழ்நாட்டில் நிலவிவரும் போக்கு இது. பிறப்பிலேயே அறிவற்றவர்கள் என்று ஒதுக்கி வைப்பது காலம்காலமாக தொடர்கிறது. கல்லூரி மாணவர்கள் கேள்வி எழுப்பினாலும் நீ என்ன படித்திருக்கிறாய்? றிலீ.பீ. என்றாலும் கிstக்ஷீஷீஜீலீஹ்sவீநீs றிலீ.பீ.பண்ணியிருக் கிறாயா? இல்லையென்றால் உனக்கும் ஒன்றும் தெரியாது உட்கார் என்கிறார்கள்.

ஆனால் இவர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிப்பதற்காக அமர்த்திய சலீம் அலி நிறுவனம், தகுதிச் சான்று பெற்ற நிறுவனமல்ல. இதுபற்றி விரிவாக சுந்தர்ராஜன் எடுத்துக் கூறினார். கேள்வி எழுப்புபவர்கள் தகுதியற்றவர்கள் என்று பட்டம் சூட்டும் இவர்கள் நியமித்த நிறுவனம்தான் தகுதியற்ற நிறுவனம்.

ஆனால் அந்தத் துறையில் பல ஆய்வுகளைச் செய்திருக்கிற ஜெ.ஜெ. பெவலக்காவின் ஆய்வு அடிப்படையில் தான் நாம் கேள்வி எழுப்புகிறோம். நியூட்ரினோ ஆய்வில் இந்துமதிக்கெல்லாம் முன்னோடி அவர்.

நியூட்ரினோ ஆய்வில் கதிரியக்கம் வெளிப்படும். அது மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கும். தலைமுறை தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார். இதில் உள்ள ஆபத்துகளை எல்லாம் களைந்த பிறகுதான் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்துடையவர் ஜெ.ஜெ. பெவலக்கா. நம்மைப் போல் எதிர் தரப்பாளர் அல்ல. ஆனால் ஒரு ஆய்வாளராக உண்மையைப் பேசுகிறார்.

இந்துமதி போன்றவர்களோ பற்றற்று அறிவியலாக அணுகாமல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். ஊர் ஊராக சென்று இயற்கையாக வரக்கூடிய நியூட்ரினோ துகள்களைத்தான் ஆய்வு செய்யப் போகிறோம் என்கிறார்கள். ஆனால் இவர்களின் ஆய்வறிக்கையோ முதல் பத்தாண்டுகள் விண்வெளியி லிருந்து வரக்கூடிய துகள்களை ஆய்வு செய்யப் போவதாகவும் பிறகு 6,000 முதல் 11,000 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பிரான்சு, சப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நியூட்ரினோ தொழிற்சாலைகளிலிருந்து நியூட்ரினோ கற்றைகளை பெற்று ஆய்வு செய்யப் போவதாக தெரிவிக்கிறது.

முனைவர் இந்துமதியின் ஆய்வறிக்கை இதோ என் கையில் இருக்கிறது. அதிலே சொல்கிறார், 7,400 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து நியூட்ரினோத் தொழிற் சாலையிலிருந்து நியூட்ரினோ கற்றைகளைப் பெற்று பொட்டிபுரத்தில் ஆய்வு செய்யப் போகிறோம் என்கிறார் இந்துமதி.

இராமதுரை போன்றவர்கள் இது இயல்பான ஆய்வுதான், பாதிப்பு ஒன்றும் வந்துவிடாது, நியூட்ரினோ துகள்களை வடிகட்ட கடினப் பாறைகள் தேவை, எனவேதான் பொட்டிபுரத்தில் அமைக்கப் படுகிறது, எனவே எதிர்க்க வேண்டாம் என நெஞ் சாரப் பொய்யுரைக்கின்றனர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் செறிவூட்டப்பட்ட செனானில் நியூட்ரினோ ஆய்வு நடக்கிறது. இது வெறும் மணல் பாலை. அதுமட்டுமல்ல, நியூட்ரினோ ஆய்வுக்குப் படிமப்பாறை பயன்படாது என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

பொட்டிபுரத்தில் ஏன் அமைக்கிறார்கள் என்றால் அது பழைய மலை என்பதல்ல. இது பழைய இடம். நாம் பழைய இனம். அதனால் அழிப்பதற்கு வருகிறார்கள். ஏன் இமயமலைக்கு செல்லவில்லை என்றால் அது ரிசிகள் தோன்றிய புண்ணிய இடம்.

கடினப்பாறைதான் தேவை என்பதற்கு ஆய்வ றிக்கையில் ஒரு காரணம் கூட சொல்லப்படவில்லை. நாம் அறிவியலின் அடிப்படையில்தான் கேட்கிறோம். பதிலளிப்பதற்கு மாறாக இந்துமதி போன்றோர் நமக்கு கட்சி முத்திரை குத்தி நாம் கூச்சலெழுப்புவதாக பசப்புகின்றனர் .

நியூட்ரினோ துகளானது ஒளியின் வேகத்தில் அதாவது ஒரு விநாடிக்கு 3 இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் எந்தத் தடைகளையும் ஊடுருவி நேர்க்கோட்டில் பயணிக்கக் கூடியது. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்த ஆய்வின் ஊடாக கருந்துளை ஏற்பட்டு உலகம் அழியக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும், இந்த ஆய்வே அழிவை உண்டாக்கிவிடும், எனவே வேண்டாம் என்கிறார்.

அறிவியல் துறையில் இந்துமதியை விட ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உயர்ந்தவர்தான் என்பதை இந்துமதிகள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம். எதிர்க்கும் நமக்கில்லையென்றாலும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்க்கும், ஜெ.ஜெ.பெவலக்காவிற்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் நியூட்ரினோ பற்றிய ஆய்வானது பொருள் பற்றியதல்ல. வெளி (sஜீணீநீமீ) பற்றியது. வெளியை சுருக்கக்கூடிய அபாயம் உள்ளது .நியூட் ரினோ ஆய்வில் பலம்பொருந்திய நாடு வெளியை சுருக்குவதன் மூலம் மிகப்பெரிய ஆதிக்க வாய்ப்பைப் பெறுவார்கள். நியூட்ரினோ ஆய்வில் இவர்கள் ஆர்வம் காட்டுவதற்குரிய அரசியல் காரணம் இதுதான்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு மொண்டல் வழக்கு வாதுரையில், நியூட்ரினோ கதிர்வீச்சு அணுக் கதிர்வீச்சு போன்றதல்ல, வெப்பக் கதிர்வீச்சுதான் பயப்பட தேவையில்லை என்கிறார். கதிர்வீச்சின் அளவு 15னீsஸ் (விமீரீணீ sமீஸ்க்ஷீவீtமீ) இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது புகுசிமா அணு உலை வெடிப்பின் போது ஏற்பட்ட கதிர்வீச்சிற்கு சமமானது. இந்த ஆய்வுரையை ஆதாரத்தோடு இதுவரை மொண்டல் மறுக்க வில்லை; மறுக்க முடியாது.

எனவேதான் நாம் எதிர்க்கின்றோம்.

உலகத்திலேயே உயிர் பன்மயம் நிறைந்த பகுதி மேற்கு தொடர்ச்சி மலைதான். ஆய்வகத்திற்காக மலையை பிளக்கும் போது பல அரியவகை உயிரி னங்கள் அழிந்து போகும். உயிர் சங்கிலி அமைப்பில் ஏற்படும் அழிவு உடனடியாக இல்லாவிடினும் காலப்போக்கில் மனித அழிவிற்கும் வழிவகுக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வேண்டுமானால் கோவா வரை உள்ளதே, ஏன் தமிழ்நாட்டில் கொண்டு வந்து வைக்கிறீர்கள்?

மற்ற இடங்களில் புலிகள் உள்ளன, மரங்கள் உள்ளன என சொல்பவர்கள் தமிழர்கள் அழிந்தால் பரவாயில்லை என கருதுகின்றனர். மாநில அரசின் ஒத்துழைப்போடுதான் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இவர்களின் நோக்கம் நியூட்ரினோவை ஆராய்வதல்ல. நியூட்ரினோ ஆயுதங்கள் தயாரிப்பதே!

அணு ஆயுதங்களையே உருக்கி அழிக்கவல்ல மிகை ஆற்றல் உள்ள நியூட்ரினோ ஆயுதங்களைத் தயாரிக்கலாம் என அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அண்மையில் உறுதி செய்துள்ளார்.

எந்தத் திசையிலிருந்து வந்தது என்பதுகூட அறிய முடியாமல் பேரழிவை ஏற்படுத்தும் நியூட்ரினோ ஆயுதங்கள் உருவாக்கத்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்கா இதில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதன் உண்மையான காரணம் இதுதான்!

இராணுவ வல்லரசாக மாறக் கனவு காணும் இந்திய அரசு, நியூட்ரினோ ஆய்வில் ஆர்வம் காட்டுவதன் உண்மையான பின்னணியும் இதுதான்!

பாரதிய சனதாக் கட்சியானது, இதற்கு முன்னர் சனசங்கமாக இருந்த காலத்திலேயே அணு ஆயுத வல்லரசாக இந்தியா மாற வேண்டும் எனும் கொள்கை உள்ளவர்கள். இன்றைய வளர்ச்சி நிலைக்கு ஏற்றாற்போல் நியூட்ரினோ ஆயுத வல்லரசாக மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தமிழினத்தை அழித்துதான் இந்திய வல்லரசைக் கட்ட விரும்புகிறார்கள். இதுதான் ஆரிய ஆதிக்கத்தின் வரலாற்று வழிமுறை. ஏற்கெனவே, இத்துணைக் கண்டத்தில் தமிழினத்தை அழித்துதான் ஆரியம் வல்லரசைக் கட்டியது. அது இன்றும் தொடர்கிறது.

நேற்றைய ஆரியம்தான் இன்றைய இந்தியம். பாரதிய சனதாக் கட்சி ஆளுவதால் மட்டும் இது நிகழ்வதல்ல. இத்தாலிய கிறித்துவப் பெண்மணி சோனியா காந்தி நிழல் பிரதமராக இருந்த போதும் அதுதான் நிலை. ஏனெனில் நபர்களைச் சாராமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

“இந்தியா அதாவது பாரதம்” என்று அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டுக்குப் பெயர் குறிக்கிறது. “பாரதம்”, “பாரத்” எங்கிருந்து வந்தது? ஆரியப் புராணத்திலிருந்து வந்தது. இதற்கு ஆவணச் சான்று, புதைபொருள் சான்று ஏதுமில்லை. ஆனால், “பாரத்” என்று இந்த நாட்டிற்கு பெயர் சூட்டியுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம்.

பல்வேறு திட்டங்களுக்கும், பட்டங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஆரியப் பெயர்களே வைக்கப் பட்டுள்ளன.

ஆரியத்தின் மொழியான சமற்கிருதம், அதன் வடிவமான இந்தி ஆகியவை உச்சியில் வைக்கப் பட்டுள்ளன.

இந்த இந்தியம் தன்னை வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்ள தமிழினத்தை அழிக்க முனைந்துள்ளது.

வட தமிழ்நாட்டில் கல்பாக்கம் தொடங்கி, தெற்கே கூடங்குளம் அணு உலை, அதற்கு இடையில் மீத்தேன், கெய்ல், ஜின்டால் இரும்பாலை, நியூட்ரினோ, தாதுமணல், சிப்காட், தோல் ஆலை, சாயப்பட்டறை என்று மண்டலம் மண்டலமாக தமிழ்நாட்டில் எவ்வளவு அழிவுத் திட்டங்கள் திணிக்கப்பட்டுள்ளன என்று பட்டியலிட்டுச் சொன்னார் பொறியாளர் சுந்தர்ராஜன்.

‘வளர்ச்சி’ என்ற பெயரால்தான் படித்த இளைஞர்களின் ஏற்பை இத்திட்டங்களுக்குப் பெறுகின்றனர்.

முதலாளியக் கட்சிகள் மட்டுமின்றி, அறிவியல் இயக்கம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் என அழைக்கப்படுவோரும் இந்த வளர்ச்சி வாதத்தைப் பரப்புரை செய்கின்றனர்.

இந்த வளர்ச்சிவாதம் முதலாளியத்தின் பெயரால் வந்தாலும், சோசலிசத்தின் பெயரால் வந்தாலும் இயற்கையை அழிப்பது தான். மனித குலத்திற்குத் தீங்கானதுதான்.

வளர்ச்சிவாதத்திற்கு துணை செய்வது நுகர்வு வாதம். எல்லாவற்றையும் துய்த்துத் துப்பிவிட வேண்டும் என்ற வெறி. இந்த நுகர்வுவெறி சமூகப் பிராணியாக இருந்த மனிதர்களை உதிரிகளாக்கி விட்டது. சக மனிதனைப் போட்டியாளனாக, எதிரியாகப் பார்க்க வைத்துவிட்டது. அற மாண்பு களை, ஒழுக்க நெறிகளை அழித்துவிட்டது.

இன்று தமது பிள்ளைகள் எப்படியாவது உயர் மதிப்பெண் பெற வேண்டும் என்றுதான் பெற் றோர்கள் விரும்புகிறார்கள். அதற்காக காப்பி அடித்தாலும், பிட் அடித்தாலும் தவறில்லை. பிடிபடாமல் செய்தால் போதும் என்பதுதான் அவர்கள் மனநிலை.

எப்படியாவது முன்னேறிவிட வேண்டும், கை நிறைய காசு பார்க்க வேண்டும். அதற்காக 12 மணி நேரம், 14 மணி நேரம் உழைத்தாலும் பரவாயில்லை. குடும்பத்தோடும், சுற்றத்தோடும், நட்போடும் பேசுவதற்கு நேரமில்லாமல் போனாலும் பரவா யில்லை, சம்பாதிக்க வேண்டும். துய்த்துத் துப்பிவிட வேண்டும்.

இந்த நுகர்வுவாதம் ஒரு சிலர் துய்க்கும் முதலாளியத்தின் பெயரால் வந்தாலும், துய்ப்பைப் பரவலாக்கும் சோசலிசத்தின் பெயரால் வந்தாலும் விளைவு ஒன்றுதான், அது அழிவுதான்!

எனவே, “வளர்ச்சிக்கு வரம்பு கட்டு” (ஷிtஷீஜீ tலீமீ நிக்ஷீஷீஷ்tலீ) என்பது இன்று முன்வரும் முழக்கமாக மாறி வருகிறது.

“வளர்ச்சிக்கு வரம்பு கட்டு” என்ற கோரிக்கையின் பிரிக்க முடியாத இன்னொரு பக்கம் உண்டு. அதை யாரும் சொல்ல அஞ்சுகிறார்கள்.

அதுதான் “அறிவியலுக்கு வரம்புகட்டு!” என்பதாகும்.

உயர் அறிவியல் ஆய்வு என்பது ஒரு சில விதிவிலக்குகள் தவிர மிகப்பெரும்பாலும் இயற்கையை மீட்க முடியாத அளவு அழிப்பதுதான். மனித குலத்தை அழிப்பதுதான்.

நீரியல் விரிசல் செய்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தை, பாறை வளி எடுக்கும் திட்டத்தை தனியார் செய்தாலும், அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செய்தாலும், நாளைக்கு ஒரு சோசலிச அரசே செய்தாலும் விளைவு ஒன்றுதான். பேரழிவுதான்.

கூடங்குளத்தில் சோவியத் இரசியா அணு உலை நிறுவினால் அது முற்போக்கு. ஜெய்தாப்பூரில் பிரான்சு நிறுவினால் அது பிற்போக்கா? யார் நிறுவினாலும் விளைவு அழிவுதானே!

நியூட்ரினோவும், பி.ட்டி. நெல்லும் இவ்வாறு தானே?

இங்கு உயர் அறிவியல் - தொழில்நுட்பம் என்பது, அதை யார் கையாளுகிறார்கள் என்பதைச் சாராமல் அதனளவிலேயே எதிரி வர்க்கத்தன்மை உடையது. மக்கள் பகைத்தன்மை உடையது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நியூட்ரினோ ஆய்வில் அமெரிக்கா கூட்டு சேர்ந்துள்ளது. ஒருவேளை அமெரிக்காவுக்குத் தொடர்பில்லாமல் இந்தியாவே செய்வதாக இருந்தாலும், நியூட்ரினோ ஆய்வு அதனளவிலேயே பேரழிவுத் திட்டம்தான்.

நாளை ஒரு சோசலிச அரசேகூட, நியூட்ரினோ குறித்த உயராய்வில் இறங்கினால் அப்போதும் பேரழிவுதான் விளையும்.

அறிவியல் பார்வை தேவையானது. ஆனால் விஞ்ஞான வழிபாடு கூடாது. அறிவியல் ஆராதனை கூடாது.

ஆனால், தமிழ்நாட்டில் மக்களுக்காக பாடுபட்ட முற்போக்கு இயக்கங்கள் விஞ்ஞான வழிபாட்டை வளர்த்து விட்டார்கள். விஞ்ஞானம் என்ற பெயரால் எதைச் சொன்னாலும் வரவேற்க வேண்டும் என்ற உளவியலை வளர்த்து விட்டார்கள்.

அதேபோல், வளர்ச்சி வாதத்தில் மூழ்கி, அறவாழ்வு பற்றிக் கவலைப்படாத பயனாளிக் கூட்டத்தை வளர்த்துவிட்டார்கள்.

இதுதான் இந்திய வல்லரசுக்கு நல்லது, உலகமயத்துக்கு நல்லது. அறிவியல், நவீனம் என்ற பெயரால் வரும் பெரும் நிறுவனங்களுக்கு நல்லது.

இவற்றை எதிர்க்கும் அர்ப்பணிப்புள்ள மக்கள் இயக்கங்கள் நடத்தும் போராட்டங்கள்தான் மக்களை ஓரளவு காத்து வருகின்றன.

ஆயினும் உலகமயத்தை, அதற்குத் துணையான வளர்ச்சிவாதத்தை எதிர்த்தால் மட்டும் போதாது. மாற்றாக எதை முன் வைக்கிறோம் எனச் சொல்ல வேண்டும்.

பெரிதும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் துணைபோகும் அலோபதி மருத்துவத்தை எதிர்ப்பதாக இருந்தால் அதற்கு மாற்றாக மண்ணின் மருத்துவத்தை வைக்கிறோம்.

இரசாயன வேளாண்மையை, மரபீனி மாற்ற விதைகளை, எதிர்ப்பதென்றால் இயற்கையோடு இயைந்த வளங்குன்றா வேளாண்மையை முன் வைக்கிறோம்.

இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் மாற்று முன் வைக்கிறோம்.

இவை அனைத்தும் இந்த மண் சார்ந்தது. இந்த மண்ணின் மொழி சார்ந்தது. இந்த மண்ணின் இனம் சார்ந்தது. இந்த இனத்தின் மரபு அறிவு சார்ந்தது. இந்த இனத்தின் அற விழுமியங்கள் சார்ந்தது.

இவை இந்தியத்தின் எதிர்ப்பை எதிர் கொண்டுதான், கடும் போராட்டங்களின் ஊடேதான் முன் வைக்கப்படுகின்றன. ஏனெனில், இந்தியம் என்பது இந்த மண்ணின் மாண்புகளை, இந்தத் தமிழ்த் தேசிய இனத்தின் அறிவியலை - அறவாழ்வை ஏற்காது. தமிழ் மொழியை வாழ விடாது.

எனவே, மண்ணுக்கான மாற்றுகள் இந்த மண்ணிற்கான அரசதிகாரம் நிறுவப்பட்டதால்தான் நிலைத்து வாழ முடியும்; வளர முடியும். இந்தியத்திற்குள் அடிமையாக சிறைப்பட்டிருக்கும் வரை இது முடியாது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெயரால் இந்தியத்தை ஆதரிப்பது தன் முரண்பாடானது, ஒற்றை இந்தியாவைத்தான் ஏகாதிபத்தியம் விரும்புகிறது. இங்கு தலையெடுக்கும் எந்தத் தேசிய இன விடுதலை இயக்கத்தையும் அமெரிக்கா உள்ளிட்ட உலக ஏகாதிபத்தியங்கள் ஆதரிப்பதில்லை; ஏனெனில் இந்தியா என்ற அதிகார மையம் தான் அவர்களது வேட்டைக்கு இசைவானது.

இந்த இந்தியாவை புதிய இந்தியாவாக, சனநாயக இந்தியாவாக மாற்ற முனைவது தவறான முயற்சி. ஏனெனில் இந்தியம் என்பதே அதன் தன்மையிலேயே மக்கள் பகைத் தன்மை உடையது. அதன் பிடியிலிருந்து விடுபட வேண்டும்.

எனவே, தமிழகத்தைச் சூழ்ந்துள்ள பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து தன்னலமற்று மக்கள் நலனுக்காகப் போராடும் மக்கள் இயக்கங்கள் தமிழ் மக்களுக்கான அரசதிகாரம் நிறுவும் போராட்டத் திலும் மையங்கொள்ள வேண்டும்.

அதுவே ‘தமிழ்த் தேசியம்’ என்பதாகும். எனவே, தமிழ்த் தேசியம் என்ற பதாகையில் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்! நன்றி!”

Pin It