ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழாவது மிகப்பெரும் நாடாக, மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாலி நாட்டில் நடைபெற்று வரும் துவாரக் இன மக்களின் விடுதலைப் போராட்டம் பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டால் நசுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

18ஆம் நூற்றாண்டில் ஆப்ரிக்க நாடுகளை ஆக்கிர மித்து ஆப்ரிக்கர்கள் அனைவரையும் அடிமைகளாக முத்திரைக்குத்தி, தமது தொழிற்சாலை களில் உழைப் பதற்காக அங்கிருந்து ஏற்றுமதி செய்து வந்த ஐரோப் பிய நாடுகள், ஆப்ரிக்காவில் நிர்வாக வசதிகளையும் ஏற்படுத்தினர். தமிழர்களையும் - சிங்களர்களையும் ‘இலங்கை’ என்ற ஒற்றையாட்சி நாட்டின் கீழ் பிரிட்டன் அரசு ஒருங்கிணைத்ததைப் போலவே, தமக்கென தனி மொழி, பண்பாடு என தனித்த கூறுக ளோடு வாழ்ந்து கொண்டிருந்த பல்வேறு ஆப்பிரிக்க இன மக்களையும், தமது நிர்வாக அமைப்பின் போது ஒற்றையாட்சி நாடுகளாக ஒன்றிணைத்தனர்.

அவ்வாறே, பம்பாரா (Bambara), மாண்டே (Mande), பெயூல் (Peul), வோல்ட்டாயிக் (Voltaic), துவாரக் (Tuareg) உள்ளிட்ட பல்வேறு இன மக்களைக் கொண்டதாக, மாலி நாடு உருவாக்கப்பட்டது. 1892ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டை நேரடி காலனியாக அடிமைப்படுத்திய பிரான்சு நாடு, அந்நாட்டை ‘பிரஞ்சு சூடான்’ என்றே அழைத்து வந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பலவீனப்பட்ட பிரான்சு, பிரிட்டன் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் தனது காலனி நாடுகளுக்கு ‘விடுதலை’ வழங்கின. 1960இல் மாலி நாட்டிற்கு, பிரான்சு ‘விடுதலை’ வழங்கி யது.

மாலி நாட்டிற்கு விடுதலை வழங்கும் போது, தம்மை தனிநாடாக்கி விடுதலை செய்ய வேண்டுமென மாலி நாட்டின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும், தமாஷக் (Tamasheq) மொழி பேசும் துவாரக் இன மக்கள் கோரினர். துவாரக் இன மக்கள், 1916--17 ஆண்டுகளில் பிரஞ்சு காலனி அரசை எதிர்த்து நடைபெற்ற கோசென் கலகத்தை (Kaocen Revolt), தலைமை தாங்கி நடத்தியவர்கள் ஆவர்.

இன்று மாலி, நைஜீரியா, அல்ஜீ ரியா, லிபியா, புர்கின்னா பசோ ஆகிய 5 நாடுகளில் ஆங்காங்கு சிதறி வாழுகின்ற இம் மக்கள், மாலியின் வடக்குப் பகுதியில் பெருமளவில் குவிந்து வாழ்கின்ற னர். மாலியின் ஆளும் பம்பாரா இனத்தினர் துவாரக் மக்களை சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளா மல் இனஒதுக்கலைக் கடைபிடித் தனர்.

இச்சூழலில் ‘அசாவத்’ என்ற பெயரிலான தனி நாடாக உருவாக் கித் தம்மை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, 1960ல் தொடங்கி 1964 வரை, மாலி நாட்டின் அட்ரர் மலைப் பகுதியில் (Adrar N'Fug has) துவாரக் இன மக்களின் வரலாறு காணாத முதல் விடுதலை எழுச்சி நடைபெற்றது. பம்பாரா இன ஆதிக்கம் கொண்ட விடுதலை பெற்ற மாலியின் முதல் அரசு, இவ்வெழுச்சியை மிகக் கொடூரமாக ஒடுக்கியது.

எனினும், 1990களில் துவாரக் இன மக்களின் தாயக விடுதலைப் போராட்டம், மாலி நாட்டில் மட்டு மின்றி, துவாரக் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் நைஜீரியா நாட்டி லும் வளர்ச்சி கொண்டது. போரின் காரணமாக அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்த துவாரக் இன மக்களும் போராட் டங்களில் இறங்கினர். இதனி டையே, அசாவத் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, சோங்காய் எனப்படும் இன்னொரு இனக்குழுவினரின் அமைப்புகளுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது மாலி அரசு.

மாலி மற்றும் நைஜீரிய இராணு வத்துடன் இவ்வினக் குழுவும் இணைந்துப் போரிட்டதில், முன் னணி துவாரக் இனப் போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். துவாரக் விடுதலைப் போராட்டத்தை நசுக்கு வதிலும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி வந்த அதிபர் மூசா டிர வோரு (Moussa Trao vore)க்கு எதிராக 1991 மார்ச் மாதத்தில், தெற்கு மாலி மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

1968லிருந்து மாலியில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் மூசா, தனது இராணு வத்தைக் கொண்டு, தலைநகர் பமாக்கோவின் வீதிகளில் போராட் டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற் பட்ட மக்களை சுட்டுக் கொன்றார். இதன் காரணமாக, அமடூ தவுமேனி தலைமையிலான இராணுவக் குழு ஒன்று அதிபர் மூசாவை சிறைபி டித்தது, நைஜீரியாவில் கலகத்தில் ஈடுபட்ட துவாரக் இன மக்களை யும் அமைப்புகளையும், இராணுவம் கொடூரமாக ஒடுக்கியது.

அதன் பின்னர், உலக நாடுகள் தலையிட்டதின் பேரில், 1992ஆம் ஆண்டு மாலியிலும், 1995இல் நைஜீரியாவிலும் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. மாலியில் முதல் முதலாக தேர்தல் நடை பெற்று, புதிய அதிபர் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

நைஜீரியாவில் உள்ள யுரேனிய சுரங்கங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் துவாரக் இன மக்களுக்கு பங்கு தருவது, மாலியின் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளிலும் துவாரக் இன மக்களை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட பல அம்சங் களைக் கொண்ட இந்த ஒப்பந் தங்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி 2007 - 2008 வாக்கில் தோல் வியடைந்தன.

தமது சுரண்டல் கொள்ளைக்கு ஆதரவாக உள்ள மாலி அரசுக்கு, அனைத்து வகை உதவிகளையும் பிரான்சு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தொடக்கத்திலிருந்தே செய்து வந்தன. தனது 70 விழுக் காட்டு மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யும் பிரான்சு நாடு, அதிகளவிலான யுரேனியம் மற்றும் எண்ணெய் வளங்கள் உள்ளதெனக் கண்டறியப்பட் டுள்ள அசாவத் பகுதிகளுக்காக, மாலி இராணுவத்துடன் மட்டு மின்றி நைஜீரியா, அல்ஜீரியா உள்ளிட்ட மாலியின் அண்டை நாடுகளுடனும் இணைந்துப் போரிட்டது.

ஆப்பிரிக்காவில் மேற்குலக நாடு களின் தலையீட்டை தொடக் கம் முதல் எதிர்த்து வந்த லிபிய அதிபர் மம்மர் கடாபி, அசாவத் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார். அசாவத் போராளிகளுக்கு மறைமு கமாக ஆயுத உதவிகள் அளித்த தோடு மட்டுமின்றி, ஆபத்துக் காலங்களில் லிபியாவிற்குத் தப்பி வரும் அசாவத் போராளிகளை தமது லிபியப் படைகளிலும் இணைத்துக் கொண்டார் கடாபி.

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு லிபியாவில் கடாபியின் ஆட்சி வீழ்ந்த பின்னர் கடாபியின் லிபியப் படைகளில் இருந்த துவாரக் இன வீரர்கள், நேரடியாக மாலி நாட் டின் வடக்குப் பகுதிக்குள், லிபியப் படைகளிலிருந்து கொணடு வந்த நவீன ஆயுதங்களுடன் நுழைந் தனர். அக்டோபர் 2011இல், துவாரக் இன போராளிக் குழுக்கள் பலவும் இணைந்து, அசாவத் தேசிய விடுதலை இயக்கம் (National Movement for the Liberation of Azawad - MNLA) என்ற அரசியல் - இராணுவ அமைப்பை ஏற்படுத்தினர். அவ் வமைப்பில் இணைந்து போரிட்ட துவாரக் போராளிகள் மாலி இராணுவத்தை பின்வாங்கி ஓடச் செய்தனர்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் வடஅ மெரிக்கா நடத்திய போர் வெறி யாட்டத்தின் ஒரு பகுதியாக மாலி நாட்டு இராணுவத்திற்கும் வட அமெரிக்கா பயிற்சி வழங்கியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட மாலி இராணுவத்தினர், நவீன ஆயுதங்க ளுடன் வடக்குப் பகுதி அசாவத் விடுதலை இயக்கத்துடன் இணைந் தது, மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில், தெற்கில் உள்ள மாலி நாட்டின் தலைநகரான பமாக்காவில் இராணுவத்தின் மீதான பம்பாரா இன மக்களின் அதிருப்தி கிளர்ச்சியாக வெடித்தது. 2012 மார்ச் 22 அன்று, மாலி அதிபர் அமடு தவுமேனி டுரே (Amad ou Toumani Tou re)வுக்கு எதிராக இராணுவக் கலகம் நடைபெற்றது.

மாலியில் குழப்பமான அரசியல் சூழல் நிலவிய நிலையில், மாலி நாட்டின், சற்றொப்ப 60 விழுக் காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் அளவிற்கு அசாவத் தேசிய விடு தலை இயக்கம், விரைந்து முன்னே றியது. அசாவத் விடுதலை கோரும் சில இசுலாமிய மத அடிப்ப டைவாத இயக்கங்கள், வரையறுக் கப்பட்ட அசாவத் எல்லைகளைத் தாண்டியும் மாலியின் பகுதிகளைச் சென்றுப் பிடிக்குமளவிற்கு, மாலி இராணுவம் சீர்குலைந்து கிடந்தது.

இந்நிலையில், 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வடக்குப் பகுதி யின் கிடல், கேயோ, திம்புக்டு ஆகிய முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய விடுதலை இயக்கம், ஏப்ரல் 6 அன்று, அசாவத் பகுதியை தனிநாடாகப் பிரகடனப்படுத்தி அறிவிப்பு வெளி யிட்டது. ஆனால், ஏகாதி பத்தியங் களின் கைப்பாவையாக செயல்படும் ஐ.நா. மன்றம் இதனை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், மாலி அரசுக்கு உதவுவது என்ற பெயரில் பிரான்சு - செர்மனி படைகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டது ஐ.நா. மன்றம்.

90 விழுக்காட்டு துவாரக் இன மக்கள் இசுலாமியர்களாக இருந்த போதிலும், அசாவத் தேசிய விடுதலை இயக்கம் அசாவத் நாட்டை மதச்சார்பற்ற நாடாகவே அறிவித்தது. ஆனால், இதில் உடன்பாடில்லாத, இசுலாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள், தங்கள் ஆட்சிப் பகுதிகளில் இசு லாமிய மத அடிப்படைவாத சட் டங்களை அமல்படுத்தினர்.

இதை சாக்காக வைத்து, அசாவத் விடுதலைப் போராட் டத்தை, அல்குவைதா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புப் படுத் தும் முயற்சியை மேற்குலக நாடு களும், ஊடகங்களும் மேற்கொண் டன.

2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலை முன்னிட்டு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற பெயரில் ஆப்கானிஸ் தான் மீது படையெடுத்து அழித்தது வட அமெரிக்கா. அதே போல, அல் குவைதாவுடன் தொடர்புடைய இயக்கங்களை அழிப்பது என்ற பெயரில் பிரான்சு - செர்மனி உள் ளிட்ட நாடுகள் அசாவத் பகுதி யில் இறங்கின.

இதே பிரான்சு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள்தான், சிரியா வில் அதிபர் ஆசாத் அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சி யாளர்களுடன் அல்குவைதா இயக் கத்தினர் இருப்பதையும், அவர்கள் கொடுமையான இசுலாமிய மத அடிப்படைவாத சட்டங்களுடன் ஆட்சி புரிவதையும் இந்தக் கணம் வரை கண்டிக்காமல் இருக்கின் றனர் என்பதையும் கவனிக்க வேண் டும்.

தற்போது, பிரான்சு நாட்டரசின் முன்முயற்சியில் மாலி அரசுக்கும், அசாவத் விடுதலை இயக்கத்திற்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. எனினும், பிரான்சு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், நடத்தும் பிரித்தாளும் சூழ்ச்சி யாகவும் இருக்கலாம். அசாவத் விடுதலைப் படைக்கும் அல்கொய் தாவுக்கும் இடையே நிலவும் பகையை பயன்படுத்திக் கொள்ளும் உத்தியாகவும் இருக்கலாம். அதே போல் பேச்சுவார்த்தை என முக மூடி அணிந்து கொண்டாலும், அசாவத் பகுதி யுரேனிய வளங் களுக்காக எந்நேரம் வேண்டுமா னாலும் அசாவத் விடுதலை இயக் கத்தை நசுக்கும் முயற்சியிலும் இறங் கும் ஆபத்து உள்ளது.

ஐ.நா. மன்றம் உடனடியாகத் தலையிட்டு, அங்கு அமைதி நிலவ வும், தேசிய இனத் தன்னுரிமை அடிப்படையில் துவாரக் இன மக்களின் தாயகத்தை அவர்களுக்கு உறுதி செய்யும் வகையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தவும் முன் வர வேண்டும்!

Pin It