உலக மொழிகள் சற்றொப்ப, 6760. அவற்றுள் தமிழ், கிரேக்கம், லத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் என எட்டு மொழிகள் மட்டுமே செம்மொழிகளாக உள்ளன. குறிப்பாக, தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒன்மை, இறைமை, அம்மை, செம்மை என16 பண்பு களும் ஒருங்கே கொண்ட ஒரே மொழி தமிழ் தான் என் பார் பாவாணர்.

ஆனால், தற்காலச் தமிழ்ச்சுழல் என்பது டைம்பாஸ் என்ற தலைப்பை இதழ் பெயராகவும் பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்பதை அறிமுகத் தொடராகவும் கொண்டு இதழ்களும், காட்சி ஊடகங்களில், நான் ஸ்டாப் கொண்டாட்டம், சூப்பர் சிங்கர், டான்ஸ் மச்சி டான்ஸ் என்ற தலைப்புகளில் உலா வரும் நிகழ்வுகளும், திரைத் துறையில் டாடி மம்மி வீட்டில் இல்ல என்று நமது பண்பாட்டிற்கு எதிரான பாடல்களும் ராரா சரசுக்கு ராரா என முழுதும் அயல் மொழியாலான பாடல் தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெறுவதும் நிகழ்ந்து வருகிறது.

மேலும், ஓரினச் சேர்க்கை கதாபாத்திரங்களுக்கு அமுதன், இளமாறன் எனப் பெயரிடுவதும் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிமன்னனை கொச்சைப் படுத்தும் பாரி வேந்தர்

பூரி வேந்தர் என்பன போன்ற சொல்லாடல்களும் அங்கவை சங்கவை என்ற பாரி மகளிரை எள்ளல் செய்யும் காட்சி அமைப்புகளும் அரங்கேறி வருகின்றன.

இந்தச் சூழலில், தமிழ் மொழியின் தொன்மை, பெருமிதங்களை மீள்பார்வை செய்ய வேண்டியது அவசியமாகிறது. வரலாற்றை மறப்பவர்கள் தாங்கள் பட்ட இன்னல்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பெறுவர் என்றான் ஒரு அறிஞன். அந்த அடிப்படையில் தமிழ் இனம் தனது பெருமிதங்களில் வீறுபெற்று தவறுகளில் பாடம் கற்று வரலாற்றைப் படைத்திட தனது அடையாளத்தை காத்திட வேண்டியது காலத் தேவை.

தமிழின் தொன்மை

உலக செம்மொழி வரிசையில் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமே இரண்டு மொழிகள் உள்ளன. அவை தமிழும் சமஸ்கிருதமும் ஆகும். அதனுள்ளும் இன்றும் மக்களின் வழக்குமொழியாக உயிர்ப்புடன் உள்ளது தமிழ் மட்டுமே. செம்மொழித் தகுதிகள் என அறிஞர்கள்

சுட்டும், தனித் தன்மை, தொன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை பட்டறிவு வெளிப்பாடு, பிற மொழித் தாக்கம் இல்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தன்மை, மொழிக் கோட்பாடு ஆகிய கூறுகளோடு நவீன அறிவிய லையும் உள்வாங்கிக் கொண்டு தொடரும் தலை முறை களுக்கான வாழ்வியல் நெறிகளை வழங்கும் செழிப்போடு இன்று உள்ள ஒரே மொழி தமிழ் மட்டுமே.

இந்தியாவில் வழக்கில் உள்ள அசாமி, வங்கம், ஒரியா, மைதிலி, குஜராத்தி,போஜ்புரி,கல்யாணி, அவந்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி, உருது, தெலுங்கு இவற்றோடு ஒப்பிடு கையில் காலத்தால் முந்திய மொழி தமிழ் தான் என்பதை கீழ் வரும் சான்றுகள் மூலம் நாம் அறியலாம்.

கன்னட மொழியின் முதல் படைப் பான கவிராஜ மார்க்கம் எனும் யாப்பு நூலின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு. அசாமி, வங்கம், ஒரியா, மைதிலி - இலக்கியங்களின் தோற்றமாக மகாயாண புத்த மதத் தைச் சேர்ந்த 23 சித்தர்கள் எழுதிய சார்யபத எனும் 46 பாடல்களின் காலம் கி.பி.10- 12 ஆம் நூற்றாண்டு.

தெலுங்கின் ஆதி கவியான நன்னயா காலம் கி.பி.11 ஆம் நூற் றாண்டு.

சலிபப்ரசூரி எழுதிய பாரதேசுவர பாருபலிராச எனும் இந்தி முதல் நூலின் காலம் கி.பி.1181 மலை யாளத்தில் ராமசரிதம் எனும் பாட்டு இலக்கியத்தின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.

காஸ்மீரி மொழியில் தோன்றிய மஹாநயப் பிரகாசா எனும் முதல் இலக்கிய நூலின் காலம் கி.பி. 1250. எழுதியவர் சிதி காந்தர்.

மராத்தி - முகுந்தராஜ் எழுதிய விவேகசிந்து கி.பி. 12 நூற்றாண்டு.

13 ஆம் நூற்றாண்டில் தான் பாஞ்சாபியில் சகர் கஞ்ச் எழுதிய துதிப்பாடல்கள் உருவாயின.

சிந்து மொழியில் இலக்கியத் தோற்றம் கி.பி. 1050-1350 குஜராத்தி இலக்கியப் படைப்புகளின் காலம் எனப்படும் இராச யு கம் கி.பி. 12- 15 நூற்றாண்டு.

உருது மொழியில் ஃபக்ரடின் நெசாமி எழுதிய மஸ்நவி காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.

இவற்றுக்கெல்லாம் மேலாக சமஸ்கிருதத்தின்இலக்கண நூலான பாணிணியத்திற்கு முந்தையது தமிழின் தொல்காப்பியம். சமஸ் கிருதத்தின் கடைசி இலக்கியமாகக் கருதப்படும் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் - கி.பி.13 ஆம் நூற்றாண்டு.

இவற்றிலிருந்து தமிழின் தொன் மையும் இன்றும் வாழும் இளமையும் நாம் அறியலாம்.

பொய்யகல நாளும் புகழ் விளைத்தலென் வியப்பாம்
வையகம் போர்த்த வயங் கொலி நீர் - கையகலக்
கற்றோன்றி மண் டோன்றாக் காலத்தே வாளொடு
முற்றோன்றி மூத்த குடி.

எனும் புறப்பொருள் வெண்பா மாலையின் அடிகள் வீண் பெருமை யல்ல. அது உலக அறிஞர் கள் ஏற்றுக்கொண்டது.

தமிழரின் தொன்மை

தமிழரின் பெருமிதம் என்பது வரலாற்று, இலக்கிய, கல்வெட்டு, அகழாய்வுசான்றாதாரங்களைக் கொண்டது. இதை உணர்ந்துதான் தமிழ் ஏடு அல்ல! தமிழ் நாட்டில் அல்ல! லண்டனில் இருந்து வெளி வரும் தி மிரர் எனும் ஆங்கிலப் பத்திரிகையின் 9-7-2012 தேதிய நாளேட்டில் கொஸ்டின் டைம் எனும் கேள்வி பதில் பகுதியில் இன்றைக் கும் பேசப்பட்டு வரும் உலகின் பழமையான மொழி எது?” என்ற வாசகரின் கேள்விக்கு கீழ் வருமாறு பதில் அளித்துள்ளது. 

தொல் பொருள் ஆராய்ச்சியாளர் களின் ஆவணங்களின் படி இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப் பட்டு வரும் தமிழ் மொழியே. சிந்து சமவெளியிலும் ஏன் சுமேரியர்க ளாலும் பேசப்பட்டமொழியாகவும் இருக்கக் கூடும் எனக் கருத்து வெளி யிடப்பட்டுள்ளது. 10 000 ஆண்டு களுக்கு முன்பிருந்த வறண்ட ஆறுகளின் பதிவுகளும் தமிழ் இலக் கியங்களில் காணக் கிடைக்கின்றன. ஏன் சமஸ்கிருதத்தின் மூல மொழி யாகவும், அதன் வழி இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும் மூல மொழியாகவும் தமிழ் விளங்கு கிறது.

தி மிரர் பத்திரிகையின் மேற் கண்ட பதிலானது மிகை மதிப்பீடு அல்ல. ஏனெனில் கீழ் வரும் சான்றாதாரங்கள் இக் கூற்றை மெய்ப்பிக் கின்றன.

நாகை- மயிலாடுதுறை- செம்பி யன் கண்டியூர்- ஆசிரியர் சண்மு கநாதன் அவர்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கற்கோ டரியின் காலம் கி.மு. 15 ஆம் நூற் றாண்டிற்கு முற்பட்டதாகும். தேனி- ஆண்டிப்பட்டி-புலிமான் கோம்பை- மூன்று நடுகற்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டு,இந்நடுகற்களில்,

கல்பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ - கோன்- வேன் ஊர் பதவன் அவ்வன் என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன.

அரபு நாடான ஓமனில் கோர் ரோறி எனும் பகுதியில் கி.பி. 1 ஆம் நூற்றாண்டைய பானைச்சில் கிடைத்தது. இதில் ண-ந்-தை- கீரன் எனப் பொறிக் கப்பட்டுள்ளது. இது தமிழ ரின் கடல் வாணிகத்திற்கு சான்று பகர்வதாக உள்ளது.

பழனிக்கு சற்று மேற்கே 12 கி.மீ தொலைவில் உள்ள பொருந்தில் ஊரின் பொருந்தல் ஆற்றின் கரையில் பேராசிரியர் க.இராசன் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தாழி, புரிமணை, இரண்டுகிலோ நெல் போன்றவை கண்டெடுக் கப்பட்டுள்ளன. இதில், புரிமணை யில் வயிர’என எழுதப்பட்டுள் ளது. அகழாய்வில் கிடைக்கப் பெற்ற இந்நெல்லை முடுக்கி நிற மாலை ஆய்வுக்கு உட்படுத் தியதில் இதன் காலம் கி.மு.700க்கும் கி.மு. 490க் கும் இடைப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் -சிறுமலை -பளியர் பழங்குடியின வாழ்வு முறை ஆய் வின் போது கிடைக்கப்பெற்ற குறியீடு கள் நான்காயிரம் ஆண்டுகள் பழ மையானவை. இவை சிந்து சம வெளி குறியீட்டை ஒத்துள்ளன.

பஃறுளி ஆறும் பன்மலை யடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்ன வன் வாழி (சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்)
மேற்கண்ட இலக்கிய, அக ழாய்வுச் சான்றுகள் தமிழ், தமிழரின் தொன்மையை உணர்த்து கின்றன.

அறிஞர் ஏற்ற அறிவியல் மொழி

மேலைத் தேய அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், எல்லீஸ், ராபர்ட் டி.நொபிலி, ஹிராஸ் பாதிரி யார், யஹச். ஆர். யஹாய்சிங்டன், மைரன் உவின் சிலோ, டாக்டர் எமனோ, டாக்டர் கே.வி.சுவெலபில், டாக்டர் ஹார்ட், டாக்டர் ஆஸர், டாக்டர் ஹகோலா, டாக்டர் லெவிட், டாக்டர் ஜரோஸ்லாவ் வாசெக், ஏ.எல். பெக்கர், கீத் டெய்லர், நொபுரு கராசிமா, பர்போலா போன்றோர் தமிழைக் கற்று கண்டங்கள் கடந்தும் அதன் பெரு மிதங்களைப் பறைசாற்றினர்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல் கலைக்கழக மொழியியல் பேராசிரி யரான திரு ஏ.எல்.பெக்கர் அவர்க ளின் கூற்று கவனிக்கத் தக்கது. அமெரிக்கப் பல்கலைக்கழக நூல கங்களில் எல்லாம் தொல்காப் பியரின் சிலையை நிறுவ வேண்டும். ஏனெனில், அவர் மேலை உலகின் பிளாட்டோ, அரிஸ் டாட்டில் போன் றோரோடு ஒப்பிடத் தகுந்தவர். சிந்த னையாற்றல், கற்ப னைத்திறன், மொழியின்பால் ஈடுபாடு ஆகிய வற்றைப் பெற்றிருந்த தொல் காப்பியர் தமிழரின் அறிவுலகைத் திறந்து காட்டினார். மொழி பற்றிய நுணுக் கங்களை எல்லாம் நுட்ப மான ஆய்வுக்கு உட்படுத்தினார்.

கோட்பாடுகளின் வரையறை களையயல்லாம் தெளிவு படுத்தி னார். மொழியை புரிந்து கொள்ளத் துணைசெய்யும் மரபுகளையும், நாம் ஆராயாது ஏற்றுக்கொண்ட எல்லா வற்றையும் தெளிவாக விளக்கி யமை யால் தொல்காப்பியர் இன்றி யமையாத அறிஞர் ஆகிறார். இன்றைய அறிவியல் மேதை யான திரு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (டைம் அண்ட் ஸ்பேஸ்) காலம் மற்றும் இடம் பற்றி விரிவான ஆய்வுகளை மேற் கொண்டு உலகு பற்றிய பல உண் மைகளை அறிவித் துள்ளார். ஆனால், இதனையே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொல் காப்பியர்,

முதல் எனப்படுவது நிலம், பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே”
என்கிறார். தமிழரின் அறிவியல் சிந்தனை உலகில் உள்ள மானுட இனங்களுக்கெல்லாம்

தலைச்சனாக இருப்பதை இதன் மூலம் நாம் அறியலாம். எனவே தான், மேலைத் தேய அறிஞர்கள் மட்டுமன்றி இந்தியாவின் வீரத் துறவி, ஆன்மீக வழிகாட்டி எனப் படும் திரு. விவேகானந்தரே கூட சுமேரிய, அசீரிய, பாபிலோனிய, எகிப்திய நாகரீகங் களுக்கு எல்லாம் அடித்தளமிட்டது தமிழர் நாகரீகமே!. ஆரியர்களும் தமிழ் இனத்திற்குப் பலவகைகளில் கடன் பட்டிருக்கி றார்கள் எனக் கட்டியம் கூறுகிறார்.

இத்தகைய தமிழரின் பெருமிதங் களெல்லாம் பல்வேறு காலக் கட்டங் களில் இயற்கை, மானுடப் பகைமை செயல்பாடுகளால் அழிவுற்றது. கடற் கோளால் அழிவுற்றது என்று தமிழ் இலக்கியங்களின் கூற்றை எள்ளல் செய்தவர்கள் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை மீளா அழிவை ஏற் படுத்திய போதுதான் கடற்கோள் பற்றி உண்மைகளை அறிந்து கொண்டனர். முதற் கடற்கோளில் தமிழரின் மூதாதையரின் மண்ணாண இலெ மூரியா அழிவுற்றது. இரண்டாம் கடற்கோளில் கபாடபுரம் புதைந்தது. மூன்றாம் கடற்கோளில் குமரிக் கண்டம் தொலைந்தது.

இயற்கையின் இத்தகைய அழிவு களைக் கடந்தும் தலை நிமிர்த்தி நின்ற தமிழரின் பெருமி தங்களுக் கான அறிவுமூலங்களை அனல் வாதம், புனல்வாதம் என ஆரியம் அழித்தது. கரையானுக்கு இரை யாக்கியது. ஏன் கடந்த நூற்றாண்டி லேயே கூட சிங்கள இன வெறி தமிழரின் அறிவுப் பெட்டக மாகத் திகழ்ந்த யாழ் நூலகத்தை எரித்து அழித்தது. சிங்கள, ஆரிய இன வெறிக் கூட்டு முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஏனென்றால், தமிழரின் அறிவும், அறமும் ஆரியத்திற்கு முந்தையது. உலகை கடவுள் உருவாக்கினான் என ஆரியப் பார்ப்பனீயம் கதைவிட்டுத் திரிந்த காலத்தில் தமிழனின் பரிபாடல் உலகத் தோற்றத்தை அறிவார்ந்து விளக்கியது.

செந்தீச் சுடரிய ஊழியும் பனியயாடு
தன்பெயல் தலைஇய ஊழியும்”

எனும் பரிபாடல் உலகத் தோற் றத்தின் படிமலர்ச்சித் தத்து வத்தை பன்னூற்றாண்டு காலத் திற்கு முன்பே உணர்த்தியது.

மேலும், சங்கப் பாடல் ஒன்று,

மண்டினிந்த நிலமும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரனிய நீரும் என்றாங்கு
ஐம்பூதத்தியற்கை”

என்று இப்பூவுலகின் உள்ளடக் கத்தை உணர்த்துகிறது. ஆனால், மேலைத் தேய சமூகங்கள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டிலேயே கூட இவ் வுலகம் உருண்டை எனச் சொன்ன அறிவி யாளாலர் கலிலியே கலிலீயை சிறை யில் அடைத்தது.

அறிவியல் தொழில் நுட்பங் களையும் தமிழர்கள் அன்றே பயன்படுத்தினர். அதன் மரபு வழி யாக உலகின் பல நாடுகளிலும் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் தமிழர்கள் கோலோச்சு வதை இன்றும் காண முடிகிறது. வனவாசம் முடித்து விரைந்து நாடு திரும்ப எண்ணிய ராமன் அதற்கு ஏதேனும் வழியுண்டா என்று விபீடனிடம் வினவுதாக கம்பர் கூறுகிறார்.

ஆண்டு பத்தொடு நாலும் இன் றொடு அறுமாயின் - மாண்டதாம் இனி என் குலம்
பரதனேமாயின் - ஈண்டுபோக ஓர் ஊர்தி உண்டா ( இராமாய ணம் யுத்தமீட்சி - 141)

இதில் செய்தி என்னவென்றால், இலங்கைக்குச் செல்ல கடலைக் கடக்க வானரங்களின் உதவியை நாடியவன் ராமன். ஆனால், சீதை யை புட்பக விமானத்தில் கவர்ந்து சென்ற இராவணனின் தம்பி விபீட னன், வானூர்தி தொழில் நுட்பத்தை தமிழ் மன்னான இராவணன் பயன்படுத்தினான் என்பது தான். இந்த அறிவு மரபின் தொடர்ச்சிதான், ஈழ விடுதலைப் போரின் போது பன் னாட்டு அரசுகள் தடைசெய்த சூழலி லும் வெளிநாடுகளிலிருந்து விமா னங்களை இறக்குமதி செய்ய முடியாத காலச்சூழலில் விடுதலைப் புலிகள் இயக்கம் உதரி பாகங்களை கொண்டே விமானங்களை வடிவமைத்து விமானப் படையைக் கட்ட மைத்தது. அதிலும் கூட அவர்கள் தாக்கிய நிலைகள் அரசு போர் நிலைகளே தவிர பொதுமக்கள் அல்லர் என்பது கட்டுநாயக விமான தள தாக்குதல் வரலாற்றிலிருந்து நாம் அறிய முடிகிறது. தமிழரின் அறம் போர்க்களத்திலும் புறமுது கிடாத தன்மையை இந்நிகழ்வு காட்டுகிறது. ஈழத்து தேசியப் பாவலர் புதுவை இரத்தினத்துரை,

முன்னை இராவணன் விடுத்த புட்பகம்
வான்முகில் கிழித்ததாம் அதன் பின்னர்
இன்றுதான் தமிழன் வானில் சோதி
மின்னிடத் தோன்றினான் இது விந்தைதானடா”
எனப் பரணி பாடுகிறார்.

தமிழர் அறம்

தமிழ் இனம் அறிவார்ந்த இன மாக மட்டுமில்லாமல் அறம் சார்ந்த வாழ்வியலையும் கொண்டது. அது இம்மை, மறுமை என ஏமாற்றாமல் உலக வாழ்வை முதன்மைப்படுத்தி அறத்தைப் போதித்தது. திருக்குற ளில் 45 குறள்கள் உலகம், உலகு என வருவனவாக உள்ளன.

அறனெனப் பட்டதே இல் வாழ்க்கை அஃதும் 
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று ‘’

என இல்லறத்தின் பெருமை பேசுகிறது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளோ, மனையறம் படுத்த காதை என்றே ஒரு காதை அமைத்தள்ளார். அதில், கண்ணகி யும், கோவலனும் வாழும் அற வாழ்க்கையைக் காண மாசாத்து வனின் மனைவி கண்ணகியின் இல்லம் வருவதை,

வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பெருங் கேன்மையோ டறப்பரி சாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந் தண் வாழ்கையும்
பேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டு சில கழிந்தன”

என கண்ணகியின் மறத்தல றியா சுற்றத்தாரைப் போற்றுதலும், அற வோரை ஓம்புதலும், விருந்தின ரை உபசரித்தலும் ஆகிய நற் பண்பு களுடன் மிக்க செல்வத்தோடு கூடிய இல்வாழ்க்கையின் பெருஞ்சிறப் பினை காண விளைந்தமையை விளக்குகிறார்.

தமிழர் தம் இல்லற வாழ்க்கை மட்டுமன்றி சமூக வாழ்விலும் அறத்தோடு நிற்றலை சங்க இலக் கியம் சுட்டுகிறது. புறநானூறு பாடல் எண் – 182

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்கு வர் பழியயனின்
உலகுடன் பெரினும் கொள் ளலர் அயர்விலர்
அன்னமாட்சி அணையராகி
தமக்கென முயலா நோன் தாள்
பிறர்கென முயலுநர் உண்மை யானே”

இவ்வடிகள் மூலம் தமிழர் வாழ்வில் அறம் பேணியதை உலகு உணரும்.

சமத்துவ வாழ்வு

பெண்மையைப் போற்றி சம வாழ்வு வாழ்ந்த சமூகமாகவும் தமிழ்ச் சமூகம் உள்ளது. எடுத்துக் காட்டாக, தனக்கொரு இடர் நேர்கையில் தன்னைக் காப்பாற்ற கடவுளைத் துணைக் கழைத்து ஆரிய துரெளபதை அலறு கையில், தமிழ் மகள் கண்ணகியோ கடும்சினம் கொண்டு அரசை சாடியதை நாம் காணலாம். மன்னர் சபையில் இழுத்து வரப்பட்ட ஆரிய திரெளபதை,

ஹரி ஹரி என்றாள் - கண்ணா
அபய மபயமுனக் கென் றாள்............
நம்பி நின்னடித் தொழுதேன் - என்னை
நாணழியா திங்கு காத்தருள்வாய்..........
ஐய நின் பதமலரே - சரன்
ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள்

என்று மகாபாரதக் கதை நிகழ் வை பாஞ்சாலி சபதமாக பாரதி நமக்குக் காட்டுகின்றான். ஆனால் சிலப்பதிகாரத்தில் கணவனை இழுந்த கண்ணகியோ,

வாயிலோயே வாயிலோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே”

எனச் சீறி அரசனின் அரண் மனை வாயில் கடந்து மன்னனின் முன் நின்று தேரா மன்னா செப்ப வதுடையேன் என்கிறாள். மன்னனே உயிர் என்று மக்கள் எண்ணிய காலத்தில் அந்த மன்னனையே ஆராயாமல் பிழை செய்த மன்னவனே என்று அவன் தவறைச் சுட்டி வழக்காடி அறம் காத்த தமிழரின் மூதாயை எண்ணி தமிழினம் பெருமிதத்தால் நெஞ்சு உயர்த்திக் கொள்ளலாம்.

இவ்வாறாக, தொன்மை, அறம், அறிவியல், சமத்துவம் ஆகியவற் றோடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கடல் வணிகம், நெசவு, உழவு, கட்டிடக்கலை, நீரியல் மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு உணர்வு என பல்வேறு கூறுகளை உள்ளடக்கி தமிழினம் உலகத்திற்கே கொடை வழங்கிய இனமாக உள்ளது. ஆனால், இவற்றை யயல்லாம் மறந்து ஆரியக் கலப்பு, அந்நிய இன மேலாண்மை, ஆங் கில ஈர்ப்பு இவற்றின் பின்னால் தமிழ் சமூகம் சென்று கொண்டுள்ளது. எனவே, தமிழினம் தன்னைத்தற் காத்துக்கொள்ள அனைத்து முனை களிலும் களமாடவேண்டிய நெருக் கடியில் உள்ளது. இதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அதற் காக செயலாற்றவேண்டும்.

நெஞ்சு நிமிரும்
பெருமிதங்கள் புதைந்திட
இன்றென் இனமோ
நீர் கோரி
மன்றங்களில் மண்டியிட்டு
இனவெறிக் காலன்களை
கண்டஞ்சி
கடல் வெளியில் கண்ணீர் விட்டு
மது தோயும் மேனியராய்
மேதினியில் கீழ்மையுற்று
கிடத்தல் தகுமோ?
எழு! என்இனமே எழு!
அழி! உன் கீழ்மை அழி!
விளி! உன்பெருமிதங்கள் விளி!
நாடு! உன்நாடதனை நாடு!
பொங்கு! அறமே
 உன் உயி ரெனப் பொங்கு!
 
சான்றாதாரங்கள் -

1. புறநானூறு
2.திருக்குறள்
3. சிலப்பதிகாரம்
4. பாரதியார் கவிதைகள்
5. கபிலர் முதல் கலைஞர் வரை - ப.மருதநாயகம்
6. வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் - மாத்தளை சோமு
7.தமிழ்த்தேசியத் தமிழர் கண் ணோட்டம் இதழ்கள்

Pin It