இந்தியத் திரைப்படத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா, ஏப்ரல் 25ம் தேதி முதல் 30 தேதி வரை தில்லியில் நடக்கிறது. இதை இந்திய அரசின் தகவல் ஒலிபரப் புத்துறை அமைச்சகம் கொண்டாடுகிறது.

இதில் இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட இந்திய மொழிகளின் திரைப் படங்கள் திரையிடப்பட உள்ளன. விவாதங்களும் நடைபெற உள்ளன. ஆனால், விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் திரைப்பட வெளியீடு குறித்தோ, விவாதங்கள் குறித்தோ எந்த விவரமும் இல்லை. அதற்குக் கண்டனம் தெரிவித்து நடுவண் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரிக்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் பி.லிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து இதுவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க கட்சிகள் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்விரு கட்சிகளின் தலைவர் களும் திரைப்படத் துறையில் இருந்து வந்தவர்கள்.

தில்லி அரசாங்கம் நிதி, நீர் உரிமை, வேலை வாய்ப்பு, கல்வி என எல்லாவற்றிலும் தமிழர்களைப் புறக்கணித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்த் திரைப்படத்துறையையே ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ளது. தமிழ்த் திரைப் படத் துறைக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது.

தென்னிந்திய திரைப்படத்துறையின் முன்னோடி சாமிக்கண்ணு வின்சென்ட் (1883-1942). இவர் ஒரு தமிழர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் மௌனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், முதல்முதலாக கோவையில் மூன்று திரையரங்கு களைக் கட்டி னார்.

படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தி னார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட் டார். சென்னையில் எஸ்பள னேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்ட கையைக் கட்டினார்.

அதற்குப் பின் தென்னிந்தியத் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்து பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட்டுள்ளன. உலக அளவில் திரைப்படங்கள் தயாரிப்பில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது இந்தியாதான். அதிலும் இந்திக்கு அடுத்து தமிழ்நாடுதான். ஆனால் அதற்குரிய மரியாதையை இந்திய அரசு வழங்க வில்லை.

திரைப்படங்கள் பெரும் பாலும் மலிவான கேளிக்கை சாதனமாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழ்த் திரைப்படத்துறையும் விதி விலக்கல்ல. ஆனால் இந்தி, மலை யாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களுக்கு தமிழ்ப் படங்கள் எந்த வகையில் குறைந்து போய்விட்டன.

ஸ்டூடியோக்களுக்குள் இருந்த திரைப்படங்களை அசல் கிராமங் களுக்குக் கொண்டு சென்றவர் பாரதிராஜா. கிராமத்து எளிய மனிதனையும் அசாத்திய கலை ஞர்களாய் மாற்றிவர்.

எண்பது தொண்ணூறுகளில் மிகச் சிறந்த திரைக்கதையாசிரி யர் என இந்தியா வெங்கும் பேசப் பட்டவர் கே. பாக்யராஜ், முள் ளும் மலரும், உதிரிப்பூக்கள் என திரைக்கு புதிய வண்ணம் பூசியவர் மகேந்திரன், சந்தியா ராகம், வீடு, மூன்றாம்பிறை ஆகி யப் படங்கள் மூலம் தேசிய விருதுகள் குவித்தவர் பாலு மகேந்திரா இவர்கள் யாவரும், சத்திய ஜித்ரேவுக்கோ, ஷ்யாம் பெனகலுக்கோ சற்றும் சலைத் தவர்கள் அல்ல.

இயக்குநர் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், இயக்குநர் சேரனின் பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், இயக்குநர் பாலாவின் பரதேசி போன்ற தமிழ்ப்படங்கள் இந்தி யத் திரைப்படத்துறைக்கே பெருமிதம் சேர்த்தவை.

இந்தியத் திரைப்படத்துறை நூற்றாண்டு விழாவில் வெளியிட ஒரே ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட தகுதி இல்லை என்றால், மூன்று முறை பாலுமகேந்தி ராவுக்கு தேசிய விருது வழங்கியது ஏன்? தகுதி இல்லாமல் வழங்கப் பட்டதா?

பாரதிராஜாவுக்கு தேசிய விருதுகள் வழங்கியதும் கூட தகுதி இல்லாமல்தானா? பாலா, சேரன் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டதே? இவர்களின் ஒரே ஒரு படம் கூடவா, நூற்றாண்டு விழாவில் வெளியிடத் தகுதி இல்லாமல் போய்விட்டது.?

வெறும் இந்திய அளவில் மட்டுமல்ல சமீபத்தில் வெளி யான இயக்குநர் பாலாஜி பரணீத ரனின் நடுவுல கொஞ்சம் பக்கத் தைக் காணோம், கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய பீட்சா படங் கள் உலகத் திரைப்படங்களுக்கு இணையாக இருந்ததை மறந்து விட முடியுமா?

ஈழத்தில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் இந்திய ஏகாதிபத்திய அரசு தனது கொடூர ஆயுதத்தை தமிழ்த் திரைப்படத் துறையின் மீது திருப்பி உள்ளது.

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைத் தமிழகத்தில் நடத்த விடாமல் செய்தோம். விடமாட்டேன் என ஒட்டிக் கொண்டிருந்த தி.மு.க. வை காங்கிரஸ் கூட்ட ணியில் இருந்து விலகச் செய் தோம். அண்மையில் நடந்த இனப்படு கொலைக்கு எதிரான மாணவர் போராட்டத்தால் டில்லி அரசு ஆட்டம் கண்டுள்ளது.

இந்த மாணவர் போராட் டத்துக்கு ஆதரவளித்தும், தமிழி னப் படுகொலைக்கு எதிராகவும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அதனாலயே தமிழ்த் திரைப் படத்துறையினரை அச்சுறுத்தும் வகையில், இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கொல்கத்தாவில் நடந்த அனைத் திந்திய திரைப்பட விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணே சனை தொடக்க உரையாற்ற அனுமதிக்காமல் புறக்கணித்ததை நாம் மறந்து விடவில்லை.

அது சரி, இந்தியத் திரைப் படங்களில் தமிழ்த் திரைப்படங்களுக்கு இடம் இல்லை என்று இந்தியாவுக்குள் தமிழ்நாடு என்றொரு மாநிலம் இல்லை என்பதை மீண்டும் வெளிப்படுத் தியிருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண் டால் சரி..!!

Pin It