தமிழிலுள்ள பதினெட்டு மெய் எழுத்துக்களில் ஒன்றான “ர”கர மெய்யின் வரிவடிவம்(ர்) சிதைக்கப்படுகின்றது. இந்த “ர்” என்னும் மெய் எழுத்தின் வரி வடிவத்தை “ர்” என்னும் வரி வடிவம் கொண்டே தொடர்ந்து எழுதியும் அச்சிட்டும் வருகின்றனர். பெயர்ப்பலகைகளிலும், விளம்பரப்பலகைகளிலும் நாம் இதைப் பார்க்க முடிகின்றது. இது போன்றே கணினியிலும் தட்டச்சு செய்யப்படுகின்றது. இவ்வாறே அச்சிடப்பட்டு எல்லா நூல்களும், பருவ, நாளிதழ்களும் வெளிவருகின்றன.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பதினெட்டு மெய் எழுத்துகளின் வரி வடிவங்கள் நூற்பா 15,19, 20,21, ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளன. அவை,

வல்லெழுத் தென்ப க ச ட த ப ற (19)
மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன (20)
இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள (21)

நூற்பா 15 இல் “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” என விளக்குவதால் நூற்பா 19,20,21, ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ள எழுத்துகளில் புள்ளியிட்டு எழுதினால் முறையே க் ங் ச் ஞ் ட் ந் த் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ஆகிய பதினெட்டும் மெய் எழுத்துகளின் வரி வடிவங்களாகும்.

இதில் “ இடையெழுத்தன்ப ய ர ல வ ழ ள” என்னும் நூற்பா 21 இல் “ர”கரத்தின் வரிவடிவம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைப் புள்ளியிட்டு எழுதினால் “ர்” என்னும் வரிவடிவம் தானாக வந்துவிடும். “ர்” என்னும் வரிவடிவம் வராது. ஆகவே “ர” என்னும் வரிவடிவமே ரகர மெயெழுத்தின் உண்மையான வரிவடிவமாகும்.

“புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்”

என்னும் நூற்பா 17 இல் மெய் பதிமெட்டும் உயிர் எழுத்தான “அ” கரமோடு சேர்ந்து ஒலிக்கின்ற அல்லது பிறக்கின்ற எழுத்துகளின்(உயிர்மெய்) வரிவடிவம் யாவும் புள்ளி இல்லாத மெய் எழுத்துகளாகும். இவை முறையே க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன என வரிவடிவம் பெறுகின்றன. இதன் படி மெய் எழுத்தான “ர்” அகரமோடு சேர்ந்து ஒலிக்கும் அல்லது பிறக்கும் போது மெய் எழுத்திலுள்ள புள்ளியை நீக்கினால் கிடைக்கும் வரி வடிவம் “ர்” (ர்+அ =ர) என்னும் எழுத்து ஆகும்.

ஆக மெய் எழுத்துகளுக்கும் அகரமொடு சேர்ந்து பிறக்கும் எழுத்துகளுக்கும் உள்ள வேறுபாட்டை மெய் எழுத்துகளிலுள்ள புள்ளியை நீக்க வேண்டும்(ர்- ர) என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

மேற்கண்ட இலக்கணத்தைத் துணையாகக் கொண்டு இப்போது வருகின்ற “ர்” என்னும் மெய் எழுத்தின் வரி வடிவிலுள்ள புள்ளியை நீக்கினால் “” என்னும் வரிவடிவம் தான் கிடைக்கும். இவ்வரிவடிவத்தை நாம் “ர” என ஒலிப்பதில்லை மாறாக கால்() என அழைக்கின்றோம். கால்() என்பது உயிர்மெய் எழுத்துகளின் வேறுபாட்டைக் காட்டப்பயன் படுத்தப்படும் ஐந்து உயிர் குறியீடுகளில் ஒன்றாகும்.

“ஏனைய உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்” என்னும் நூற்பா 17 இல் மூன்றாவது அடியில் ஏனைய பதினொர் உயிர்களும் மெய் பதினெட்டு எழுத்துகளோடு கூடி புள்ளி இல்லாத மெய் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு வரி வடிவம் பெறுகின்றன எனக் கூறுவதால் ஆகாரமொடு கூடி பிறக்கின்ற (உயிர்மெய்) எழுத்துகளில் உயிர்குறியீட்டின் ஒன்றான “கால்()” என்னும் குறியீடு பயன்படுத்தப்பட்டு முறையே கா,ஙா,சா,ஞா,டா, ணா,தா,நா,பா,மா,யா,ரா,லா,வா,ழா,ளா,னா என வரி வடிவம் பெறுகின்றன.

மேலும் இக்குறியீட்டை() அடிப்படையாகக் கொண்டு இகரம், ஈகாரம் ஆகியவை முறையே ரி, ரீ, என எழுதப்படுகின்றன. இவை போன்று பிறவற்றையும் எழுதினால் ர், ரா, ரீ, ரு, ரீ, ரூ, ரெ, ரே,ரை, ரொ, ரோ,ரெள, என முறையற்ற வரிவடிவம் பெறும். எனவே குறியீடுகள் எல்லாம் அடிப்படை எழுத்தாகாது. குறியீடுகளை அடிப்படையாக வைத்து எழுதுவது தவறானதாகும். ஆதலால் “ர” கர மெய் எழுத்தின் (ர்) வழியாகத் தோன்றும் உயிர் எழுத்துகள் (உயிர் மெய்) யாவும் முறையே ர், ர, ரா, ரி, ரீ, ரூ, ரெ, ரே, ரை, ரொ, ரோ ரெள, என வரி வடிவம் பெறுகின்றன. இவ்வா றாக “ர’’ கர எழுத்தை அடிப்ப டையாகக் கொண்டு நாம் எழுத பேண்டும். இவ்வாறு இல்லை யெனில் “ர’’ கரத்திற்கு ஏற்ற மென்பொருளை கணினி பொறியாளர் உருவாக்க வேண்டும்.

தமிழ் மொழியிலுள்ள எழுத் துகளைச் சிதைக்காமல் எழுது வது நம் கடமையாகும். 500 ஆண்டு காலமாக நம் முன்னோர் சங்கம் வைத்து, தமிழை வளர்த்து நம்மிடம் கொடுத்துள்ளனர். நாம் தமிழைச் சிதைக்காமல் அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்து மேன் மேலும் தமிழ் மொழி தழைத்தோங்க துணை நிற்க வேண்டும்.

இனி எங்கும் ர் என்றே எழுதுக! எழுதுவோம்! ரகரத்தைக் காப்போம்!

குறிப்பு: மேற்கண்ட கட்டுரையில் “ர” கரத்தில், கால் (ர்) போட்டுதான் புள்ளி வைக்க முடிகிறது. ஒரு சில எழுத்துருக் களில் மட்டுமே “ர” கரத்தில் புள்ளி வைக்கமுடிகிறது. எல்லா எழுத்துருக்களிலும் ‘ர’ கர ஒற்று சிதையுறாமல் வருவதற்கு தமிழக அரசு உரிய மென் பொருள்களை அணியப்படுத்தி அனைவர்க்கும் எளியாமையாக கிடைக்கச் செய்ய வேண்டும் அப்போதுதான் கனிணி தமிழில் ரகரத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறான எழுத்துருக்கள் இல்லாதது காரணமாக இந்தக் கட்டுரையில் கூட ர கர ஒற்றை பயன்படுத்துவது இயலாமல் உள்ளது.

Pin It