கொச்சி - பெங்களூர் இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல, இந்திய அரசின் கெயில் நிறுவனத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியே பாதை அமைக்கப்படுவது குறித்து,தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012ஆகத்து 16--31 இதழில் எழுதியிருந்தோம்

கெயில் இந்தியா நிறுவனத்தின் இத்திட்டம் தமிழகத்தின் மேற்கு மண்டல வேளாண் நிலங்களை சிறுசிறு துண்டுகளாக்கி வேளாண்மை நிலங்களை சிதைப்பதிலும்,அழியச் செய்வதிலும்தான் முடியும் என்று அதில் நாம் எச்சரித்திருந்தோம்.

தமிழகத்தின், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் 136கிராமங்களில் உள்ள வேளாண்மை விளைநிலங்கள் வழியாக அமைக்கப்பட உள்ள அத்திட்டத்தின் பாதைக்கான,நிலக்கையகப் படுத்தும் பணியும், அந்நிலத்தை கட்டுமானத் திற்காக சமப்படுத்தும் பணியும் தற்போது கடும் அடக்கு முறையுடன் தொடங்கியுள்ளது.

சற்றொப்ப 2 லிருந்து 3 கோடி ரூபாய் வரைவிற்கும் நிலங்களை, 2,3 இலட்ச ரூபாய்க்கு விலை பேசிய கெயில் நிறுவனம், தற்போது அந்தத் தொகையைக் கூட அளிக்காமல், நிலங் களை கையகப்படுத்தத் தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி அருகேயுள்ள முல்லை நாயக்கனூர் கிராமத்தில், காவல்துறையினரின் பாதுகாப்புடன்,உழவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் கண்முன்னே, வேளாண் பயிர்கள் மீது ஜே.சி.பி. வண்டிகளைக் கொண்டு மணல் அள்ளிக் கொட்டி யது கெயில் நிறுவனம். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, உழவர்களின் நிலத்தில் நுழைந்த கெயில் நிறுவன அதிகாரிகள்,தென்னை மரங்களை வேருடன் சாய்த்தும், பயிர்களை அழித்தும் அட்டூழியம் புரிந்த நிலையில்,அவர் களது பணியைத் தடுக்கும் வகையில், ஜே.சி.பி. முன் அமர்ந்து உழவர் குடும்பங்கள் மறியல் செய்தனர். அவர்கள் மீது தடியடி நடத்தியது தமிழகக் காவல் துறை. பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

மக்களை ஒடுக்குவதற்காக, பல்லடம், தாராபுரம், காங்கயம் காவல்துறை கண்காணிப் பாளர்கள், 10 துணை ஆய்வாளர்கள், 150 காவலர்கள் உள்ளிட்ட காவல் படை, கிராமத்துக்குள் யாரும் நுழையாத வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வீடுகளில் இருந்த ஆண்களை கிராமத்தை விட்டு வெளி யேற்றினர்.எதிர்ப்புக் குழுவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வரவிடாமல் தடுத்ததோடு, ஏழு பேரை கைது செய்தனர்.

 அளவீடு செய்து வைத்திருந்த வேளாண்மை நிலங்களில், 65 அடி நீளத்துக்கு, சாகுபடி செய்திருந்த பருத்தி, தென்னை, வாழை, சோளம், போர்வெல், குழாய்கள் உள்ளிட்ட அனைத்தையும், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி, நிலத்தை சமன் செய்தனர்.

உழைத்து வளர்த்த பயிர்கள் மீதும்,தென்னை மரங்களின் மீதும் இயந்திர வண்டிகள் வேகமாகப் பாய்ந்து அழிப்பதைக் கண்டு,இந்நிலத்தில் வேளாண்மை செய்து வந்த உழவர் குடும்பத்து பிள்ளைகள், கண்ணீர் வடித்த காட்சி, காண் போர் கண்களைக் குளமாக் கியது. தங்கள் கண் எதிரிலேயே,காப்பாற்றிய நிலங்கள் பறி போவதை பார்த்த விவசாயிகளும், பெண் களும் கண்ணீர் விட்டு அழுது, எதிர்ப்பு தெரிவித்தனர்.

"வங்கி காசோலைகள் தயா ராக உள்ளன; வாங்கிக் கொள்ளுங்கள்; யார் தடுத்தாலும் பணியை நிறுத்த முடியாது” எனக் கூறிய காவல்துறை, எதிர்த் தவர்களைக் கைது செய்தது. வாழை, பருத்தி, தென்னை மரத்தை சாய்த்ததால்,வேதனைய டைந்த பாப்பாத்தி என்ற பெண், தென்னை மரத்தை கட்டிப் பிடித்துக் கொண்டும்,வாகனத்திற்கு குறுக்கே படுத்தும் கதறினார். "குழந்தையை போல் காப்பாற்றிய பயிர்களை அழிப்பதா” எனக் கதறினார். மற்ற பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால்,காவல் துறையினர்,அனைவரையும் அடித்து, உதைத்து, குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று, காவல் துறை வாகனத்தில் ஏற்றினர்.

கிராமத்தை விட்டு வெளி யேற்றப்பட்ட உழவர்கள் 150 பேர், திடீரென குறுக்கு வழியாக வந்து, பணியை தடுத்து, அதிகாரி களிடம் நியாயம் கேட்டனர். "முன்னறிவிப்பு இல்லாமல், அடுத் தவர் நிலத்திற்குள் அத்து மீறி நுழைந்து, காவல்துறையை வைத்து மிரட்டி, நிலத்தை கையப்படுத்துவது,அதிகாரத்தைமீறிய செயல்.மழை பொய்த்து,தண்ணீர் பற்றாக்குறையிலும், இலட்சக் கணக்கான ரூபாய் முதலீடு செய்து,சாகுபடி செய்தபயிர்கள்,அறுவடைக்கு தயாராக உள்ளன.இவற்றை அறுவடை செய்து கொள்ளவாவது அனு மதிக்க வேண்டும். கொடுக்கும் சில ஆயிரம் ரூபாய்க்கு,நிலத்தை துண்டாடவும்,விட்டுக் கொடுக் கவும் முடியாது. நட்ட ஈடு தொகை பெறாத நிலையில், நிலத்தில் நுழைவது தவறு. மாவட்ட ஆட்சியரிடமும்,மனித உரிமை ஆணைத்திலும் புகார் செய்வோம்.நீதிமன்ற உத்தரவு களையும் மீறியுள்ளீர்கள்” என, வாக்குவாதம் செய்தனர் உழவர்கள்.

அப்போது,காவல்துறையினருடன்தள்ளுமுள்ளுஏற்பட்டது.உழவர்கள் மீது காவல் துறையினர் பெரும் தாக்கு தலைத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, 11.02.2013 அன்று, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உழவர்கள் முற்று கையிட்டனர். காவல்துறையி னரின் அத்து மீறலுக்கு எதிரா கவும் புகார் செய்தனர்.

உழவர்களின் வயிற்றிலடிக்கும், இந்திய அரசின் கெயில் நிறு வனத்துடன், தமிழக அரசும் இணைந்து கொண்டு செயல்படுவது மன்னிக்க முடியாத துரோகமாகும்.அதை ஒரு போதும் அனுமதிக்காது,உழவர்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.அதற்கு நாம் துணை நிற்போம்.

Pin It