தங்கர் பச்சான் திரைப்படம் என்றால் அதில் கிராமங்களின் வாழ்வும், இன்னும் அழிந்து விடாமல் மிஞ்சியுள்ள மரபு வழிப்பட்ட தமிழ்க்குடும்பங்களில் பழக்க வழக்கங்களும், பண்பாடும் முதன்மை பெறும். ஆடுமாடுகளும் கோழிகளும் கூட தங்கரின் கதைப் பாத்திரங்கள் ஆகும். அந்தந்த கதைச் சூழலுக்கேற்ப அவற்றின் மெய்ப்பாடுகள் இருக்கும். அம்மாவின் கைப்பேசியும் இவை அனைத்தையும் கொண்டுள் ளது.

அம்மாவின் எட்டுப் பிள்ளைகளில் கடைக்குட்டி அண்ணாமலை.செல்லம்அதிகம். செலவாளி. அம்மா வுக்குத் தெரியாமல் பணத்தைத் திருடிச் செல்வது, செல்லப்பிள்ளையின் உரிமை என்ற உணர்வுள் ளவன் அண்ணாமலை. இது அம்மாவுக்கும் தெரியும், அண்ணன்கள், அக்காள்களுக்கும் தெரியும்.

அண்ணன் பிள்ளைகளின் காதணிவிழாவில், நகைகளும் பணமும் திருட்டுப் போய் விடுகின்றன. எல்லோரும் சந்தேகிப்பது அன்ணாமலையைத்தான். ஆனால் அண்ணாமலை திருட வில்லை. அம்மாவும் சந்தேகிக்கிறாள். அண்ணன்கள் அண்ணாமலையை அடிக்க முயல்கிறார்கள். அவர்கள் அடிக்கக்கூடாது என்பதற்காக அம்மாவே அவனை அடிக்கிறாள். அதுவும் விளக்குமாற்றால்! உறவுக்காரர்கள் சூழ்ந் துள்ள குடும்ப விழாவில்!

அவமானம் தாங்காமல் வீட்டை விட்டு, வெளியேறி, வெளியூரில் கிரானைட் குவாரியில் வேலைப்பார்க் கிறான் அண்ணாமலை. வீட்டாருக்கும் அவன் இருக்கு மிடம் தெரியவில்லை. அண்ணாமலை காதலித்த முறைப் பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

கிரானைட் குவாரியில் மேலாளர், அடிக்கும் கொள்ளையைத் தடுக்கும் அண்ணாமலையை, மேலாளரும், இன்னொரு ஊழியரும் கொலை செய்து விடுகிறார்கள். மகன் அனுப்பிய கைப்பேசியில் மகனுடன் அவ்வபோது தொடர்பு கொண்டிருந்த தாய், இறந்துவிடுகிறாள். தாயின் இறப்பு பற்றி அண்ணா மலை கைப்பேசிக்குத் தெரிவிக்கின்றனர். அவன் குவாரி மேலாளரால் தாக்கப்பட்டதால், அலறும் கைப்பேசியை எடுத்துப் பேச முடியவில்லை.

குடும்ப உறவுகளைச் சித்தரிப்பது, எழில். வாழ்ந்து வந்த வீட்டை விற்றுவிட்டுப் புதிதாகக் கட்ட வேண்டும் என்று பிள்ளைகள் பிடிவாதம் செய்யும் போது, அவ் வீட்டை விட்டு வெளியேற மறுத்து தாய் துடிப்பது எனப் பலவற்றை உணர்ச்சிப் பூர்வமாய் படமாக்கி யுள்ளார்.

மாமன் அண்ணாமலையைக் காதலித்த கதா நாயகி, அவன் இருப்பிடம் தெரியாத நிலை யில் வேறொருவனுக்குத் திருமணம் செய்து வைக்கப்படு கிறாள். பின்னர் கைப்பேசி மூலம் மாமன் தொடர்பு கொள்வதை அறிகிறாள். இரவுப்படுக்கையில் அண் ணாமலையிடமிருந்து அவளுக்குத் தொலை பேசி வருகிறது. அருகில் படுத்திருக்கும் கணவன் அவள் மீது கைபோடுகிறான். அவள் மாமனுக்காக அழுதா லும் கணவனின் கையை விலக்கவில்லை. அந்நேரத் தில் அவள் மன உணர்வு சிறப்பாக காட்டப்படுகிறது. இவ்வாறு பல இடங்களில் உளவியல் உணர்ச்சி களைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான். பல இடங்களில் பார்வையாளர்களின் கண்களில் நீர் வழியச் செய்கிறது படம்.

தங்கர்பச்சான், நகைச்சுவை, குற்ற உணர்வு எனப் பல உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப் படுத்தி நடித்துள்ளார். சார் என்று சொல்லக் கூடாது. ஐயா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று இயல்பாகக் காட்டுகிறார்.

தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை அது சிதைந்து வருவதை, அதில் உள்ள பல்வேறு சிக்கல்களை, பாசத்தை, மண் பற்றை மாறுபட்ட அழகிய லோடு வெளிப் படுத்துகிறது அம்மாவின் கைப்பேசி.

Pin It