2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட புகுசிமா அணுஉலைக் கசிவு விபத்தின் பாதிப்புகள் இன்னும் அடங்க வில்லை. வெவ்வேறு வடிவங்களில், அணுக்கதிர் கசிவின் பாதிப்பை அந்நாட்டு மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.

அண்மையில் சீனா மற்றும் தென் கொரிய நாடுகள், அந் நாட்டின் பசிபிக் பெருங்கடலில் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் புகுசிமா அணு உலைக் கதிர் வீச்சின் காரணமாக இருக்கக்கூடும் எனவும், அது குறித்து முறையாக ஜப்பான் அரசு விசாரிக்க வேண்மெனவும் தெரி வித்தன. இதனையடுத்து, ஜப்பா னில் இது குறித்து ஆராய நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

இதன் முடிவில், கடந்த 09.07.2013 அன்று, புகுசிமா அணுஉலையை நிர்வகித்து வரும் டோக்கியோ மின்சக்தி நிறுவன (TEPCO) அமைப்பு, புகுசிமாவின் நிலத்தடி நீரில் கடுமையான அணுக்கதிர் வீச்சு பாதிப்புகள் இருப்பதைக் கண்டறிந்தது. நிலத் தடி நீரில் உள்ள கதிர்வீச்சுப் பாதிப்படைந்த தண்ணீர், கடலுக் குள்ளும் கணிசமான அளவிற்கு சென்றிருக்கலாம் எனவும் அவ் வமைப்பு தகவல் வெளி யிட்டது.

மேலும், அணுஉலை விபத்தின் போது, அணு உலையின் வெப்பத் தைக் குறைக்க கடல் நீரை பெரு மளவில் பயன்படுத்திய அணுமின் நிலைய நிர் வாகம், அந்நீரை திரும்ப கடலுக்குள் விட்டதும் இதற்கு காரணமாக முன் வைக்கப்படுகின்றது.

டெப்கோ நிறுவனம், 08.07.2013 அன்று புகுசிமாவி லுள்ள ஒரு கிணற்றிலிருந்து எடுக்கப் பட்ட தண்ணீர் மாதிரிகளை பரிசோதித் துப் பார்த்ததில, ஒரு லிட்டர் நீரில், அணுக்கதிர் வீச்சு நிறைந்த சீசியம்-134 என்ற தனிமத்தின்அளவு சற்றொப்ப 9,000 பெக்கோரல் அள விற்கும், சீசியம்-137 தனிமத்தின் அளவு சற்றொப்ப 18,0000 பெக்கோரல் அளவிற்கும் இருந்ததை கண்டறிந்தது. இந்த கதிர் வீச்சு அளவு 12.7.13 அன்று முறையே 11000 பெக்கோரல் மற்றும் 2200 பெக்கோரல் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டன. லிட்டருக்கு 10 பெக்ரோல் என்பதுதான் கதிர் வீச்சின் அனுமதிக் கப்பட்ட அளவாகும். இதற்கு மேல் போனால் ஆபத்து.

இக் கதிர்வீச்சு பாதிப்பு குறித்து பல்வேறு அணு சக்தி எதிர்ப்பு அமைப்புகளும் முன்பே எச்சரித்த நிலையில், தற்போது தான் அதை டெப்கோ நிறு வனம் அளவிட்டு வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

நிலத்தடி நீரில் ஏற்பட்ட இக் கதிர் வீச்சுப் பாதிப்பு, விபத்தின் போது மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் நீடித்ததால் தான் நிலத்தடி நீரும், அதையொட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியும் கதிர்வீச்சு பாதிப் புக்கு உள்ளாகி யிருப்பதாக சப்பானின அணு சக்தி ஒழுங்குமுறை வாரிய தலைவர் சுனிச்சி டனக்கா தெரிவித்தார்.

இதன்மூலம், 2 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற புகுசிமா விபத்திலிருந்து இன்றுவரை அணுக் கதிர் வீச்சின் பாதிப்புகளை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை ஜப்பான் அரசு மறைமுகமாக ஒத்துக் கொண்டுள்ளது.

இதனிடையே, புகுசிமா அணு உலையின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த 58 அகவையான மசாவோ யோஷிடோ புற்று நோயால் 10.07.2013 அன்று மரண மடைந்தார். அவர், 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுனாமியைத் தொடர்ந்த ஏற்பட்ட அணு உலைக் கசிவு விபத்தின் போது, புகுசிமா அணுஉலையின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந் தவர் ஆவார்.

பின்னர் புற்றுநோயால் பாதிக் கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த 10.07.2013 அன்று டோக்கியோ மருத்துவ மனையில் அவர் மரணமடைந்தார். இவ்வா றான கதிர்வீச்சு பாதிப்புகள் வேண்டாமென்று தான், ஜப்பானின் மக்கள் தொடர்ந்து அணு உலைகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வெவ்வெறு வடிவங்களில் மண்ணின் வளங்களை யும், மனிதர்களையும் அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் காவு வாங்கிக் கொண்டுள்ள இந்நிலையிலும் கூட, இந்திய அரசு தமிழகத்தில் கூடங்குளம் அணுஉலையை இயக்குவதில் உறுதியாக நிற்கிறது. தமிழினத்தின் மீதான இந்திய அரசின் பகைவெறி யையே இது பறை சாற்றுகின்றது!

Pin It