பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை பார்வையற் றோருக்கு 40 விழுக்காடாகக் குறைக்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களுக்கு 2 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், பார்வையற்றோருக் கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து, பார்வையற்ற மாணவர்களும், பட்டதாரி இளையோரும் இணைந்து நடத்தும் பட்டதாரி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில், தமிழகத் தலைநகர் சென்னையில் ஆகத்து 8 அன்று ஒருநாள் அடையாள உண்ணாப் போராட்டத்தை நடத்தினர்.

ஞாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழி யில் போராடும் மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் கவனிக்க வேண்டிய தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை.

செப்டம்பர் 13 முதல் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், அரவிந்த், பானு கோபால், சக்திவேல், சுரேஷ், ரவிச்சந்திரன், வீரப்பன், பெரியான், விஸ்வநாதன், தங்கராஜ் ஆகிய 9 மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு காலவரையற்றப் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அன்றே அவர்களை சேப்பாக் கத்தி லிருந்து அப்புறப்படுத்தியது, தமிழகக் காவல்துறை. பின்னர், கே.கே. நகரிலி ருந்த மாற்றுத் திறனாளிகள் அலுவல கம் முன்பு 9 மாற்றுத் திறனாளிகளும் தமது உண்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்திய காவல்துறை, அவர் களை இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் வலுக்கட்டாயமாக சேர்த்தது.

போராட்டத்தின் தீவிரம் கண்ட தமிழக அரசு, அமைச்சர் வளர்மதியை அனுப்பி இராயப்பேட்டை அரசு மருத் துவமனையிலிருந்த மாற்றுத் திறனாளி களை போராட்டத்தைக் கைவிடும் படி கேட்டது. கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி செய்யும் படி கேட்டதற்கு, அமைச்சர் வளர்மதி மறுத்துவிட்டார். போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை மாநகரமெங்கும் ஒரு நாளில் பல முக்கிய சாலைகள் என நாள் தோறும் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர், மாற்றுத் திறனாளிகள்.

காவல்துறையினர், கண் பார்வையற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பிக் கொண்டு நின்றிருந்த மாற்றுத் திறனாளிகளை நடத்திய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதனைக் கண்டித்துள்ள னர்.

“மனித மாண்புள்ள சமுதாயத் துக்கான அடையாளங்களில் ஒன்று மாற் றுத் திறனாளிகளை அச் சமூகம் எவ்வாறு மதிக்கிறது என்ப தாகும். மனித நேய ஆட்சிக்கு அடை யாளமாகவும் அது அமைகிறது. ஆனால் பார்வையற்ற மாற் றுத் திறனாளிகளைத் தமிழக அரசு அணுகும் முறை இங்கு மனித நேய ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது’’ என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டக் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டார். இக்கேள்வி ஞாயமானதே என்னும் வகையிலேயே தமிழகக் காவல்துறையின் செயல்பாடுகள் அமைந்தன.

19.09.2013 அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் 19 பேரை, நள்ளிரவு நேரத்தில் கிழக்குக் கடற் கரைச் சாலையிலுள்ள சுடு காடு ஒன்றில் இறக்கி விட்டனர், தமிழகக் காவல்துறையினர். இன்னொரு பிரிவு மாற்றுத் திறனாளிகளை, சென்னையிலிருந்து தள்ளியுள்ள மதுராந்தகத்தில் இறக்கிவிட்டனர்.

தாம் எங்கு இறக்கிவிடப் பட்டுள்ளோம் என்பது கூட அறியாமல் மாற்றுத் திறனாளிகள் அங்கு நின்று கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்த பொது மக்கள், அவர்களிடம் தாம் இறக்கிவிடப் பட்டுள்ள இடம் சுடுகாடு எனத் தெரிவித்த போது, அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? தமிழகக் காவல்துறையின் இக்கொடுஞ் செயல், மாற்றுத் திறனாளிகளின் கோபத்தை அதிகப்படுத்தியது. போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

20.09.2013 அன்று கிண்டியில் மறியல் போராட்டம் நடத்திய 80க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை, கீழே தள்ளிவிடுவதும், ஒருவர் மீது ஒருவர் மோதவிடு வதும், கயிறுகளைக் கொண்டு கட்டியிழுத்துக் கொண்டு வாகனத் தில் ஏற்றுச் செல்வதும் என ஆடு, மாடுகளைப் போல நடத்தினர் சென்னை காவல்துறையினர். இவை அனைத்தும் காட்சி ஊடகங்களில் வெளியான போது, அனைவருக்கும் மனம் பதறியது.

இதுமட்டுமின்றி, காட்சி ஊட கங்களில் வெளிவராத செய்திகள் நமக்கு மேலும் அதிர்ச்சியூட்டு கின்றன.

நந்தனத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சந்தோஷ் என்ற பார்வையற்ற மாணவர், எங்களை ஏன் கடுமையாக நடத்துகிறீர்கள், காவல்துறை ஆய்வாளரை நாங்கள் சந்திக்க வேண்டும் என்று காவலர்களிடம் கூறிய போது, ‘நான் தான் இன்ஸ்பெக்டர்’ என காவலர்கள் ஒவ்வொருவரும் ஏமாற்றியுள்ளனர். சீருடையின் தோள் பட்டையில் 3 நட்சத்தி ரங்கள் இருக்கிறதா என தொட்டுப் பார்த்த அவரை காவல்துறையினர் லட்டியால் தாக்கிக் காயப்படுத்தினர்.

மயிலாப்பூரில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிப் பெண்கள் மீது தடியால் அடித்ததில், பலருக்கு காயம் ஏற்பட்டது. பல இடங்களில் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண்களை வாகனத்தில் ஏற்று கிறோம் என்ற பெயரில், தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டு அட்டூழியம் புரிந்துள்ளனர் காவல்துறையினர். (காண்க; ஜூனியர் விகடன், 29.09.2013).

சுடுகாட்டில் இறக்கிவிடப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இழைக் கப்பட்ட அநீதி குறித்து வழக்கறிஞர் முகமது ரசகுல்லா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேஷ் அகர்வாலுக்கு 23.09.2013 அன்று எழுதிய கடிதத்தை, சென்னை உயர்நீதி மன்றம் பொது நல வழக்காக ஏற்றுக் கொண்டு பதிவு செய்தது, தமிழக அரசுக்கு நெருக்கடியை அளித்தது.

27.09.2013 அன்று தமிழக அரசுடன் மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறிப் போராட்டத்தை தற்காலி கமாக விலக்கிக் கொண்டனர் மாற்றுத் திறனாளிகள்.

இந்நிலையில், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சகல துறைகளின் வேலை வாய்ப்பிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 விழுக் காடு கட்டாய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதை மூன்று மாதங்களுக்குள் நடை முறைப்படுத்த வேண்டும் என்றும், 08.10.2013 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாமும் இச்சமூகத்தில் கவுரவமாக வாழ வேண்டும் என்ற வகையில் முன்வைக்கப்படுகின்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கு செய்யும் நன்மை மட்டுமல்ல. தமிழ்ச் சமூகம், பண்பட்ட சமூகம் என்பதை வெளிப்படுத்தும் வழியும் அதுவே ஆகும். தமிழக அரசு, மாற் றுத் திறனாளிகளின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்ற வேண் டும்.

தீர்ப்புப் படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

Pin It