நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு தமிழகத்தின் மீது மேலும் ஒரு நிதித் தாக்குதலைத் தொடுத்துள்ளது. வரி வருவாய்ப் பங்கீட்டில் தமிழ் நாட்டை வஞ்சித்துவிட்டது.

இந்திய அரசின் 14ஆவது நிதி ஆணையம் வரி வரு வாய்ப் பங்கீட்டைத் தமிழ்நாட்டிற்குக் குறைத்து விட்டது.

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 280இ-ன் படி  ஐந்தாண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் நிறுவப்படு கிறது.  இந்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி இனங்களின் பங்கீட்டு விகிதத்தைத் தீர்மானிக்கவும், அவ்வாறு மாநிலங் களுக்கு என ஒதுக்கப்படும் தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கவும் அமைக்கப் படும் ஆணையம் ஆகும் இது.

முனைவர் ஒய்.வீ. ரெட்டி, தலைமையிலான 14ஆவது நிதி ஆணையம் தனது பரிந்துரையை அண் மையில் அரசுக்கு அளித்தது. அதனை இந்திய அரசும் ஏற்றது.

இந்திய அரசு விதித்துத் திரட்டும் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கு 32 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக ஒரேயடியாக உயர்த்தப்பட்டுவிட்டது என மோடி அரசு தம்பட்டம் அடித்தது. 2014-15இல் ரூ.3.28 இலட்சம் கோடியாக இருந்த வரி வருவாய் ஒதுக்கீடு 2015--14இல் ரூ.5.26 இலட்சம் கோடியாக வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுவிட்டது என்று கூரை ஏரி மோடி கூப்பாடு போட்டார்.

ஆனால் தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே இருந்த தைவிட குறைத்ததுதான் மோடி அரசு தமிழ்நாட்டுக் குத் தந்த பரிசு.

முன்னேறிவிட்ட மாநிலம் என்று கிரீடம் சூட்டி தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்படும் வருவாயைக் குறைப்பதே ஒவ்வொரு நிதி ஆணையத்திலும், ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் 14ஆவது நிதி ஆணையம் தமிழகத்திற்கான வரி வரு வாய்பங்கீட்டை 4.96 விழுக் காட்டி லிருந்து 4.02 விழுக்காடாக குறைத்துள் ளது. வரும் நிதி ஆண்டில் மட்டும் வரிப் பங்கீடு தமிழகத்திற்கு ரூ.2,700 கோடி குறையப் போகிறது. இது அல்லாமல் மாநில அரசின் வழி யாக இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படும் திட்டங் களுக்கு குறைத்துள்ள நிதிப் பங்கீட்டையும் சேர்த்தால் வரும் நிதி ஆண்டில் தமிழகம் பெரும் வரி வருவாய்த் தொகை சுமார் 6,000 கோடி ரூபாய் குறையும்.

வரலாற்றுக் காலம் தொட்டு வளர்ச்சி யிலும், உயர் வாழ்நெறியிலும் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பிற தேசிய இனங்களை விட செம்மாந்து நிற்கும் இனம் தமிழ்த் தேசிய இனம் ஆகும். அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகும், சொந்த முயற்சியில் கல்வி, சுகாதாரம், கட்ட மைப்பு போன்ற பல துறைகளில் வளர்முகமான மாநிலம் தமிழ்நாடு.

ஆனால், நிதி ஆணையம் இந்த வளர்ச்சியையே தண்டனைக்குரிய காரணியாக மாற்றுகிறது.

மாநிலங்களுக்கு அளிக்க வேண் டிய மொத்தப் பங்கீட்டு நிதியைப் பல்வேறு மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பதற்கு 14ஆவது நிதி ஆணையம் வகுத்துள்ள வழிமுறை தமிழகத்திற்கு எதிராக உள்ளது.

மக்கள்தொகைக்கு 17.5 விழுக் காடு முக்கியத்துவம் (வெயிட்டேஜ்) வழங்கப்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்க விகிதத்திற்கு 10 விழுக் காடும், மாநிலத்தின் பரப்பளவுக்கு 15 விழுக்காடும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

மக்கள்தொகை கணக்கை கடைசி கணக்கெடுப்பில் இருந்து எடுத்துக்கொள்ளாமல் 1971ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப் படையாகக் கொண்டுதான் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மீண்டும், மீண்டும் முன்வைக்கும் கோரிக்கையை இந்த நிதி ஆணையமும், புறந்தள்ளி விட்டது. இதனால் குடும்பக் கட்டுப்பாட்டில் முன்னணியில் உள்ள தமிழகம் நிதி ஒதுக்கீட்டில் தண்டிக்கப்படுகிறது.

நகர்மயமாக்கலை வளர்ச்சியின் அளவுகோலாக எடுத்துக்கொண்டு வளர்ந்துவிட்ட மாநிலமாக தமிழ கத்தை கணக்கிட்டு நிதிப் பங் கீட்டை குறைக்கிறது இந்திய அரசு. நகர்மயமாக்கலோடு இணைந்து உருவாகும் நடைபாதைக் குடி யிருப்பு உள்ளிட்ட முறைசாரா குடியிருப்புகள் பெருக்கத்தையும், அது மாநில அரசுக்கு ஏற்படுத்தும் கூடு தல் செலவினங்களையும் நிதி ஆணையம் கருத்தில் கொள்ள வில்லை.

தமிழகம் தண்ணீர்ப் பற்றாக் குறையில் தத்தளிக்கும் மாநில மாகும். இந்நிலையில் வளரும் நகர் மயமாக்கலில் மக்களுக்கு பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங்குவது கூடு தல் செலவினத்தை மாநில அரசின் மீது சுமத்துகிறது.

மக்கள்தொகை பெருக்க விகி தத்தை நிதிஆணையம் கருத்தில் கொண்டாலும், தமிழகத்தில் தமி ழர்களின் பிறப்பு அளவால் ஏற் படும் மக்கள் தொகை பெருக் கத்தைவிட வெளி மாநிலத்தவர் வந்து குவிவதால் உப்பியுள்ள மக்கள் தொகை உயர்வை நிதி ஆணையம் கணக்கில் கொள்ள வில்லை.

ஏனெனில் வெளி மாநிலத்தவர் படையெடுப்பு முறைசாரா குடியி ருப்போர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதோடு, சுகாதார பழக்க வழக்கங்களில் பின்தங்கியுள்ள இம் மக்களுக்கு செலவிட வேண்டிய சுகாதார, மருத்துவ செலவினங் களும் அதிகப்படுத்துகின்றன. மேலும், வெளியார் மயத்தோடு, குற்றமயமும் பெருகுவதால் காவல் துறை சார்ந்த செலவினங்களும் அதிகரிக்கின்றன.

இவை எதையும் நிதி ஆணை யம் கருத்தில் கொள்ளாமல் நிதிப் பங்கீடு செய்துள்ளது.

ஏற்கெனவே, தமிழக அரசு  நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டி ருக்கிறது. 2014-15இல்  289 கோடி ரூபாய் உபரியில் இருந்த தமிழ்நாடு 2015-16இன் முதல் அரையாண் டிலேயே 7,652 கோடி ரூபாய் பற்றாக்குறையில் நிற்கிறது.

தமிழக அரசின் சொந்த வருவா யில் முதலிடத்தில் இருப்பது டாஸ் மாக் மூலம் வரும் மது வருமானமே ஆகும். கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசு பெற்ற வரு மானம் 24,000 கோடி ரூபாய் ஆகும். அடுத்த நிலைகளில் மணல் வணிகம், மனை வணிகத்தின் முத் திரைத்தாள் வருமானம் ஆகிய வையே வருகின்றன.

இவை அனைத்தும் மக்களின் நலவாழ்வையும், எதிர்காலத்தையும், இயற்கை சூழலையும் அழித்துக் கிடைக்கின்ற வருமானங்கள் ஆகும்.

ஆனால் மறுபுறம் தொழில் வளர்ச்சியில் முதல் வரிசையில் உள்ள மராட்டியம், குசராத் ஆகிய வற்றைவிட தமிழ்நாட்டில் வரி வசூல் விகிதம் அதிகமாகும். இறுதி விவரம் கிடைத்துள்ள 2012-13ஆம் நிதி ஆண்டில் இந்திய அரசு அள்ளிச் சென்ற வரி வருவாய் ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது இந்திய அரசின் ஒட்டுமொத்த வரித்  திரட்சியில் 14.12 விழுக்காடு ஆகும்.

ஆனால் இந்திய அரசு கடந்த நிதி ஆண்டில் தமிழகத்திற்கு ஒதுக் கிய வரிப் பங்கீடு மற்றும் மானியங் களின் மொத்த அளவு ஏறத்தாழ 28 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

85 ஆயிரம் கோடி ரூபாயை வரி இனத்தில் மட்டும் அள்ளிச் செல்லும் இந்திய அரசு தமிழகத் திற்கு திருப்பித் தருவதோ 28 ஆயிரம் கோடிதான். அதிலும் இப்போது 6 ஆயிரம் கோடி ரூபாயை வெட்ட இருக்கிறது.

இதுவன்றி தமிழகப் பொது வழங்கல் துறைக்கு அளித்துவந்த மண்ணெண்ணெயைக் கிட்டத் தட்ட அறவே நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அரிசி ஒதுக்கீட்டை ஏறத்தாழ 41 விழுக் காடு குறைக்கவும், பருப்பு உள் ளிட்ட பிற பொருள்களை முற்றி லும் நிறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிதிச் சுமையையும் கணக் கில் கொண்டால் தமிழ்நாடு மிகப்பெரிய நிதி நெருக்கடியில் ஆழ்ந்து கொண்டிருப்பது புரியும்.

தமிழக அரசோ தமிழகத்தி லிருந்து இந்திய அரசு திரட்டும் வரி வருவாயில் பாதியையாவது உடன டியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற குறைந்த அளவு கோரிக்கையைக் கூட வலியுறுத்து வதாக இல்லை. டாஸ்மாக் வருமா னத்தைப் பெருக்கியே சமாளித்து விடலாம் என்று கணக்குப் போடு கிறார்கள்.

ஓ. பன்னீர் செல்வம் தலைமை யில் ஓர் அமைச்சரவை இருக்கிறதே தவிர அது முற்றிலும் செயல்பாடு முடங்கியதாகவே இருக்கிறது.  இவ்வளவு பெரிய நிதி நெருக்கடி சூழ்ந்துள்ளதைப் பற்றிக் கவலைப் படாமல் அன்றாடம் செயலலிதா வுக்காக அலகு குத்தவும், பால்குடம் எடுக்கவும், தீச்சட்டி தூக்கவும், ஆள்திரட்டுவதிலேயே அமைச் சர்கள் அனைவரும் பம்பரமாய்ப் பணியாற்றி வருகிறார்கள்.

மோடி அரசு தமிழகத்தின் மீது மிகப்பெரிய நிதித்தாக்குதல் தொடுத்துள்ள இந்த நேரத்திலும் கூட தமிழக அரசு செயலற்று இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு கொடும் தீங்கை விளைவிக்கும்.

எனவே தமிழக அரசும், தமிழ கத்தின் அனைத்துக் கட்சிகளும் 14ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் இந்திய அரசு தமிழக நிதிப் பங்கீட்டைக் குறைத்துள்ளதைக் கண்டித்தும், தமிழ்நாட்டிலிருந்து திரட்டப்படும் வரி வருவாயில் பாதியையாவது தமிழகத்திற்கு வழங்க வலியுறுத் தியும் ஒற்றைக் குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

இக்கோரிக்கையை இந்திய அரசு ஏற்க மறுத்தால் தமிழகத்தி லிருந்து இந்திய அரசு ஒரு ரூபாய் கூட வரிதிரட்ட முடியாமல் தடுத்து நிறுத்த வேண்டும். முதல் படியாக தமிழக அரசு சார்ந்த நிறுவனங்கள் இந்திய அரசுக்கு அளிக்கும் நிறுவன வரியை நிறுத்த வேண்டும். அரசு ஊழியர்களிடமிருந்து வரு மான வரியை தமிழக அரசு பிடித் தம் செய்து வழங்காது என அறி விக்க வேண்டும்

செயலற்று இருந்தால் தமிழகம் கொள்ளை போகும்.

Pin It