“மனிதா மனிதா இதை மாற்ற வேண்டாமா ?” என்ற அறிவொளி இயக்க பாடல்தான் எனக்கு விவரம் தெரிந்து எனக்கு கற்றுத்தரப்பட்ட பாடல். இதற்கு முன்பே என் மழலைப பருவத்தில் “கஜானனம்”, “பாலும் தெளிதேனும்” போன்ற ஸ்லோகங்கள் என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்தாயிற்று. ஒரு பக்கம் தந்தையின் அறிவொளி மற்றும் “எதனாலே? எதனாலே?” போன்ற அறிவியல் இயக்கப் பாடல்கள், மறுபக்கம் அம்மா கற்றுக் கொடுக்கும் சமஸ்க்ருத, தமிழ் ஸ்லோகங்கள் என எதிர்மறைச் சிந்தனைகளில் உருவான இலக்கியப் படைப்புகளை என் அம்மா சொல்லிக் கொடுத்ததும், அதை வீட்டிற்கு வந்து போகும் நண்பர்கள் உறவினர்களிடையே என்னைப் பாடச் சொல்லி அவர்கள் கூறும் பாராட்டுகளில் என் பெற்றோர் மகிழ்ந்ததும் நன்றாக நினைவிருக்கிறது.

பள்ளிப் பாடத்தைப் பொறுத்த வரை, ஆறாம் வகுப்பு வரை என் தந்தை, அதில் தலையிட்டதாக எனக்கு நினைவில்லை. என் பள்ளித் தேர்வு, மதிப்பெண், வீட்டுப் பாடம், என் ஆசிரியர்களுடனான உரையாடல்கள் எல்லாம் என் அம்மாவே முடித்துக் கொள்வார். அவர் ஆசிரியர் என்று தெரிந்திருந்தாலும் சில காலம் வரை, அவர் என்ன வேலை செய்கிறார் என்று குழப்பமாகவே இருந்தது. பள்ளி முடிந்த வேலையில் ஒரு நாள் கூட அவரை நான் வீட்டில் நிதானமாக அமர்ந்து டி.வி பார்த்தோ அல்லது வேறு வகையில் பொழுதைக் கழித்ததாகவோ எனக்கு நினை வில்லை. பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வருவதும், வரும் போதெல்லாம் ஒரு தபால் பையில் ஏதோ சில புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் கொண்டு வருவதும், நிறைய அஞ்சலட்டைகளில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதுமாய்தான் என் தந்தை என் நினைவில் இருக்கிறார். அவ்வப்போது சில நண்பர்களும் இதையெல்லாம் எடுத்து வந்து பரி மாற்றம் செய்து கொள்வார்கள்.

பள்ளியில் பேச்சுப் போட்டி, மனப் பாடப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றிற்கு தவறாமல் எழுதிக் கொடுத்துவிடுவார். அதுவும் போட்டிக்கு முன் தினமோ அல்லது ஒரு சில நாட் களுக்கு முன்போ - நான் மனப்பாடம் செய்வதற்கு மிகக் குறிய கால அவகாசமே இருக்கும். அதை பேசியும் காட்டச் சொல்லி சில திருத்தங்களும் செய்வார். பிறகு என் அம்மா அந்த வேலையைப் பார்த்துக் கொள்வார். இப்படி என் தந்தையின் எழுத்துக்களில் நான் வாங்கிய பரிசுகள் ஏராளம். பாரதி, பாரதிதாசன், பெரியார், காந்தி, நேரு, காம ராஜர். ஒளவையார், கொடி காத்த குமரன் இவர் கள் எல்லோரையும் பள்ளிப் புத்தகத்தைத் தாண்டி எனக்கு அறிமுகப் படுத்திவிட்டார். என் பள்ளியின் தமிழ் ஆசிரியை “பொன் வாணி” அவர் களும் என் அப்பாவின் எழுத்துக்கு மிகப் பெரிய விசிறியாக வும் மாறிவிட்டார். மற்ற பிள்ளைகளுக்கெல்லாம் அவர் எழுதிக் கொடுப்பார். எனக்கு மட்டும் என் தந்i யிடம் எழுதி பேச்சுப் போட்டிக்கு தயாராக வரச் சொல்லி விடுவார். என் தங்கைக்கும் இவ் வாறே நடந்தது. பள்ளிப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும் இது மாதிரிப் போட்டி களுக்கு போவதில் என்னை அவர் ஊக்கப்படுத்தி யிருக்கிறார். என் அம்மாவிற்கும் அது பிடித் திருந்தது.

 சைக்கிளுக்கு அடுத்து அப்பா முதலில் வாங்கிய வண்டி ஞயவோநச தான். அதுவும் அறிவொளி இயக்கத் தில் வாங்கிக் கொடுத்ததாக ஞாபகம். அதில் எங்களைவிட நோட்டுப் புத்தகங்களும், சிலேட்டு களும்தான் அதிகம் பயணம் செய்திருக்கும். இவை அவ்வப்போது வேன்களிலும் மூன்று சக்கர வண்டி களிலும்கூட வீட்டில் வந்து இறங்கும். வீட்டின் அனைத்து அறைகளிலும் ஏதேனும் காகிதங்கள், நோட்டுகள், சிலேட்டுகள், பத்திரிகைகள். சிற்றிதழ் கள், புத்தகங்கள் என எங்கள் வீடு குப்பை கூளமாக இருப்பதாய் அம்மா எத்தனையோ முறை கடிந்து கொண்டிருக்கிறார். செம்மலர், புதியபார்வை, கணையாழி, கதைசொல்லி, சுபமங்களா, பாரதி, ஆசிரியர் நெஞ்சம், துளிர் என சிற்றிதழ்களும், விழா அழைப்பிதழ், அஞ்சல் அட்டை என மற்ற வைகளும் எங்கள் வீட்டிற்கு தபால்காரர் நிறையத் தபால்களைக் கொண்டு வருவார். இவை களைப் படிப்பதும், என்ன நடக்கிறது என்பதை அறிவதும் எனக்கு தன்னிச்சையான செயல்களாகிப் போனது. எப்பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தார் என்று நினைவில்லை. ஆனால் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னைக் கலை விழாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பாரதி கிருஷ்ணகுமார், நந்தலாலா, மதுக்கூர் இராம லிங்கம் போன்றோரின் உரைவீச்சுகள் கேட்பதும் தப்பாட்டம் பார்ப்பதும் எனக்கு அப்போதிலி ருந்தே பிடித்துப்போனது. “வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா” என்ற கிருஷ்ணகுமாரின் உரை இன்றும் நினைவில் இருக்கிறது.

 இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இருந்த எதிர்மறை சிந்தனைகளால் இருவருக்கும் இடையே நிறைய வாக்குவாதங்களை உருவாக்கியது. அப்பாவின் அம்மாவும் என் அம்மாவும் தீவிர ஆத்திகர்கள். அதுவும் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்ததால் ஆத்திகத்துடன் நிறைய சாஸ்திர - சம்பிரதாயங் களும் சேர்ந்து கொண்டன. இப்படிச் சிந்தனை ரீதி யிலான நிறைய முரண்கள் இருந்தன. அம்மாவிற்கு கண்ணதாசன் பிடிக்கும்; அப்பாவிற்கு கண்ண தாசன் ஒரு கொள்கையில்லாக் கவிஞன். அம்மா விற்கு சிவாஜி பிடிக்கும்; அப்பாவை பொறுத்த வரை சிவாஜி மிகையான நடிப்பு செய்பவர். அப்பா பூணூல் அணிய மாட்டார். என் தாத்தாவின் திதிக்கு மட்டும் என் பெரியப்பா சித்தப்பவோடு அமர்ந்து வேறு வழியின்றிப் பூணூல் அணிந்து சடங்குகளைச் செய்வார். அதுவும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக்கொண்டே இருப்பார்; ‘வாத்தியார்’ என்று சொல்லப்படும் புரோகிதர் கூப்பிட்டால் மட்டும் கவனிப்பார்; அனைத்து முக்கியச் சடங்குகளையும் பெரியப் பாவே செய்து முடித்துவிடுவார். அப்பா, அவருடைய சிறு வயதிலேயே உபநயனத்தை மறுத்து, பூணூல் அணிய மறுத்து விட்டார் என்று எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.

 அப்பாவைப் பூணூல் அணியச் சொல்லி என் பாட்டியும் அம்மாவும் நிறையவே வற்புறுத்தி இருக்கிறார்கள். நானும் என் தங்கையும் தூங்கிய பிறகே பெரும்பாலும் அவர்களுக்குள்ளான வாதங் கள் ஆரம்பமாகும். ஒவ்வொரு ஆவணி அவிட்டத் தின்போதும் எங்கள் வீட்டில், எண்ணெயில் கடுகு வெடிப்பதுபோல், வார்த்தைகள் வெடித்துக் கொண்டிருக்கும். ஒரு முறை சண்டை உக்கிரத்தில் இருந்தது. நானும் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது எனக்கு உபநயனம் நடத்த வேண்டும் என்று நடந்த வாக்கு வாதம். என் பாட்டி கூறினார்: “பூணூல் அணிந்து, புரோகிதத் தொழில் பார்த்த உன் அப்பனுக்குத்தான் நான் உன்னை பெற்றேன் என்பது உண்மையானால், நீ பூணூல் அணிய வேண்டும். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்”. அப்பா மெதுவாக பதிலளித் தார் : “நீ என் அப்பனுக்குத்தான் என்னை பெற்றாய் என்பது ஊருக்கே தெரியும். அதை நான் பூணூல் அணிந்துதான் நிரூபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை”. இந்த வாதங்களினால் எல்லாம் பெரி தாக என் பாட்டியோ அம்மாவோ மாற வில்லை. வேறு வழியின்றி உபநயனம் செய்ய அப்பா ஒத்துக் கொண்டார். நான் மூன்று வருடங்கள் படித்த புதுவையின் அந்த பெரிய பள்ளியின் ‘அருட் தந்தையிடம்’ உபநயன பத்திரிகையைக் காட்டி விடுமுறை கேட்டதை நினைத்தாலே இன்றும் பயமாய் இருக்கிறது. என் தங்கையின் ‘ருது மங்கள ஸ்நானமும்’ (பூப்பு நன்னீராட்டு விழா) நீண்ட விவாதங்களுக்குப் பிறகே நடந்தது.

இந்த விஷயங்களினால் என் அம்மாவும் பாட்டியும் தீவிர மதவாதிகள் என்றோ, வேற்று மத, ஜாதி மனிதர்களிடம் துவேஷத்துடன் பழகுவார் கள் என்றோ எண்ணிவிட வேண்டாம். என் தந்தை எப்படி மற்றவர்களிடம் பழகுவாரோ அவ்வாறே இவ்விருவரும் பழகுவார்கள், பேசுவார்கள். பாட்டிக்கும் அம்மாவிற்கும் நிறைய கிறித்தவ, இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. எங்கள் மற்ற உறவினர்களைவிட எங்கள் வீட்டில் கொஞ்சம் வேற்று மத, ஜாதி வேறுபாடில்லாமல் பழகுவது அதிகமாகத்தான் இருந்தது, இருக்கிறது. எங்கள் வீட்டிற்குவந்தால் எங்கள் வீட்டில் அடுப்பாங் கரையில் என் அம்மாவுடன் இன்றும் ஒரு இஸ்லா மிய தோழி உதவி செய்யும் சுதந்திரம் உண்டு. அம்மா சில காலம் என் அப்பாவுடன் அறிவொளி, அறிவியல் இயக்கக் கூட்டங்களுக்கும் மாநாடு களுக்கும், மாதர் சங்க கூட்டங்களுக்கும் வந்து கலந்துகொண்டிருக்கிறார். மூட நம்பிக்கைக் கெதி ரான அறிவியல் கூட்டங்களில் கலந்து கொண் டிருக்கிறார். இருந்தாலும் பிராமண சாதிக் கேயுரிய நடைமுறைகளை விட்டுக்கொடுப்பதற்கு அவர் களுக்கு மனமில்லை. பிராமணக் குடும்பத்தில் பிறந்துவிட்ட, இடதுசாரி, மற்ற முற்போக்கு இயக்கங்களில் இருக்கும் தோழர்களுக்கும் இம் மாதிரிப் பிரச்சினைகள் இருப்பது பின்னாளில் தெரியவந்தது.

அப்பாவைப் பெற்ற என் எண்பத்தாறு வயது பாட்டிக்கு, என் அப்பா என்றுமே செல்லப் பிள்ளை தான். கொள்கை ரீதியான முரண்கள் இருந்தாலும் அவர்களிடையே அளவிலா அன்பும் பாசமும் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

 என் தங்கைக்கும் அப்பாவிற்குமான உறவு, அவள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை - அதிக மதிப்பெண் பெறாமல் இருந்தால், சரியாக சாப்பிடாவிட்டால் , அவளை கண்டிக்கும் மனிதர் - என்ற மாதிரியாகவே இருந்தது. எங்கள் இரு வரையும் பள்ளிப் படிப்பைத் தாண்டி, இசை, ஓவியம் போன்றவற்றை கற்க ஊக்கப்படுத்தினார். இருவரும் ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கும் பொழுது - நல்ல மதிப் பெண் பெற்றிருந்தால் அதை அடுத்தமுறை தக்க வைத்துக் கொள்ளுமாறும், குறை வான மதிப்பெண் என்றால் கொஞ்சம் கடிந்து விட்டு அடுத்த முறை நல்ல மதிப் பெண் வாங்க சொல்லியும் கையெழுத்து போட்டுவிடு வார். இருவரையும் அறிவி யல் இயக்க நிகழ்வுகளுக்கும் மற்ற மு.எ.ச. நிகழ்ச்சி களுக்கும் அழைத்துச் செல் வார். பொது விஷயங் களைப் பற்றி அவ்வப்போது பேசுவார்.

அப்படிப் பேசும்போது, ஒரு முறை, ஒரு தொழிலா ளியைப் பார்த்து ஏதோ தரக் குறைவாக பேசி விட்டேன். உடனே என் அப்பா “எங்கிருந்து இந்தப் புத்தி வந்தது பாரதி? உன்னிடம் காசு இருந்தால் மட்டும் எல்லாம் வாங்கிவிட முடியாது. 2 ரூபாய்க்கு வாங்கும் டீயில் எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறதென்று தெரியுமா? தேயிலைத் தோட்டத்தில் இலை பறித்து, அதைப் பொடியாக மாற்ற எத்தனையோ பேர் உழைக்க வேண்டியிருக் கிறது. அதற்கு வேண்டிய பால் எத்தனை பேரின் உழைப்பால் வருகிறது? அதற்கு வேண்டிய சர்க்கரை எத்தனை கரும்பு விவசாயிகளினால் வருகிறது? எல்லோரது உழைப்பையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் பாரதி” என்றார். இந்த வரிகளில்தான் உலகத்தின் நஉடிடடிபலயை இன்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் பத்தாம் வகுப்பில் சரியாக படிக்க வில்லை. காலாண்டுத் தேர்விலும் அரையாண்டுத் தேர்விலும் தேர்வாகவே இல்லை. கண்கள் சிவக்க என்னை திட்டியும் அடித்தும் இருக்கிறார். ஒரு வழியாக பத்தாம் வகுப்பு தேறி, பனிரெண்டாம் வகுப்பு வரை என் படிப்பில் எந்த மாற்றமும் இல்லை. என்னால் 841 மதிப்பெண்ணிற்கு மேல் எடுக்க முடியவில்லை. ஆனால் என் தங்கை பத்து பனிரெண்டாம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண். என்னைத் தாகூர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க சேர்த்தாயிற்று. என் அப்பா என் வாழ்க்கையில் எடுத்த மிக தைரியமான முடிவு அது. ஏனென்றால் அந்தக் கல்லூரி அப்படிப்பட்டது.

அதன் பிறகு என் தந்தை எனக்கு உற்ற தோழ ராகவே மாறி விட்டார். நான் போன போக்கிற்கு என்னை விட்டு விட்டார். கல்லூரி சென்றதைவிட வீட்டில் ஹிந்து நாளிதழ் படித்ததும், என்.டி.டி.வி பார்த்ததும்தான் அதிகமாக இருந்தது. சமூகம், அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்தோம். ஹிந்து, தினமணி தலையங்கங்கள் பற்றிப் பேசினோம். இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்றாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் முக்கியத் துவத்தை எனக்குப் புரிய வைத்தது என் அப்பாதான். விகடன் மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வான போது, என் தந்தை அளவிலா மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார். என் அம்மாவும்தான். கல்லூரிக் காலத்திலேயே வாந யீiஉமடந என்ற பத்திரிகை யை நானும் என் நண்பர்களும் நடத்திவந்தோம். அதில் அப்பாவினுடைய ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கக் கேட்டேன். “நுணுக்கமான பார்வையும் ஆழ்ந்த சிந்தனையும் தேவை” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார். நான் ஆசிரிய ராக இருந்த பொறுப்பில், அந்தத் தலைப்பை “நுனிப்புல் மேயாதீர் !” என்று மாற்றினேன். வயது வித்தியாசம் பார்க்காமல், அந்த மாற்றத்தை மகிச்சியுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொண் டார். என் தங்கையிடம் “அவன் ஆசிரியர் வேலையைச் சரியாகப் பார்த்திருக்கிறான்” என்றும் கூறினார்.

நானும் என் தந்தையும் எழுத்தாளர்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம். எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அதைச் சிலாகித்து அப்பாவிடம் பேசிய போது அதில் சடிஅயவேiஉளைஅ மும் ளநவiஅயவேயடளைஅ மும் மிகையாக இருப்பதாக விமர்சித்தார். சாரு நிவேதிதாவைப் பற்றிப் பேசும்போது எதைவேண்டுமானாலும் எழுதும் கொள்கையில்லா எழுத்தாளர் என்று விமர்சித்தார். சுஜாதா, மதன், ஞாநி, ‘ஹிந்து ராம் இப்படி நிறைய எழுத்தாளர்களைப் பற்றி, சிந்தனையாளர்களைப் பற்றி பேசியிருக்கிறோம். தினமணியில் அவர் எழுதிய கட்டுரையோ ஆசிரியர் கடிதமோ வந்தால் என்னிடம்தான் காட்டி மகிழ்ச்சி கொள்வார்.

நானும் என் தங்கையும் கல்லூரிக்குச் சென்ற பிறகு என் தங்கைக்கும் அப்பாவிற்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. நான் வேலைக்குச் சென்ற பிறகு, ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் அனை வரும் சினிமாவிற்குச் செல்வது வழக்கமானது. பள்ளியின் ஹோம் வொர்க் இல்லாமல், தேர்வு இல்லாமல், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு பிள்ளைகளாய்த் தெரிவது அந்த வயதில்தான் போலிருக்கிறது. அப்படிப் பார்த்த வாரணம் ஆயிரம், அபியும் நானும் போன்ற படங்கள் எங்கள் நினைவிலிருந்து நீங்காதவை. அபியும் நானும் பார்த்தபோது, அதன் முடிவைப் பார்க்கும் பொழுது, ரொமண்டிசிசத்தையும் செண்டிமண்ட லிசத்தையும் விமர்சித்த என் தந்தை, அந்த காட்சி களின்போது விக்கி விக்கி அழுதது அவர் வாழ்வின் முக்கியத் தருணமாக இருக்கவேண்டும். என் தங்கையிடம் வீட்டிற்கு வந்து “ஐ மnடிற றாயவ ஐ யஅ னடிiபே” என்று நீயும் என்னிடம் கூறுவாயா என்று கண்களில் கண்ணீருடன் கேட்டது எங்களை கலங்க வைத்தது. ஆமாம். ஹடட டிக ய ளரனனநn hந நெஉயஅந ளடி நஒயீசநளளiஎந in hளை டகைந.

எனக்கு வங்கியில் வேலை கிடைத்த சந்தோ ஷத்தை அனைத்துத் தோழர்களிடமும் கூறி மகிழ்ச்சி கொண்டார்.

ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சியின் போதும் பணப் பற்றாக்குறையால் வாங்க நினைத்த புத்தகங்களை வாங்காமல் வருவோம். ஒரு முறை சென்னை புத்தகக் கண்காட்சி நடந்த போது, “அப்பா, இம்முறை நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும். ஒரு மூவாயிரம் ரூபாய்க்காவது வாங்க வேண்டும்.நீயும் சென்னைக்கு வந்து விடு” என்றேன். பெரிய புன்னகையுடன் ஆமோதித்தார். ஒரு மு.எ.ச. மாநாட்டின்போது, “பாரதி, நீ சம்பளம் வாங்கி மு.எ.ச.விற்கு நன்கொடை எதுவும் தரவில்லை. இந்த முறை நன்கொடை கொடுக்கலாமே” என்றார். நான் எதுவும் யோசிக் காமல் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். என் அப்பாவின் கண்களில் முன் எப்போதும் பார்த்திராத பெருமிதம்!

நான் சென்னையில் வேலை பார்த்ததால் வாரா வாரம், திங்கள்கிழமைகளில் புதுவையிலிருந்து விடியற்காலை சென்னைக்குப் புறப்பட வேண்டி யிருக்கும். ஒவ்வொரு முறையும் காலை ஐந்து மணிக்கு என்னை வில்லியனூரிலிருந்து புதுவை பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்வார். ஒரு முறை கண்ணில் எனக்கு ஏதோ பிரச்சினை இருந்தது. இரண்டு நாட்களுக்குக் கண்ணில் சொட்டுமருந்து போட வேண்டியிருந்தது. எப்போதும்போல அம் முறையும் புதுவை பேருந்துநிலையத்தில் விட்டு விட்டு, கண்ணில் சொட்டுமருந்து போட நினைவு படுத்திவிட்டுப் பேருந்தைக் கடந்து சென்று விட்டார். எப்போதும் பேருந்துக்கு உள்ளே வராத என் அப்பா அந்த செப்டெம்பர் 20 ஆம் நாள், திடீ ரென்று பேருந்துக்கு உள்ளே வந்து, “அந்த மருந்தை எடு, பிறகு நீ மறந்து விடுவாய்” என்று சொல்லி, அவரின் விரல்கள் என் தலையை பிடித்துக் கொள்ள, அவர் இடுப்பில் என்னைச் சாய்த்து என் கண்களைத் திறந்து மருந்தைப் போட்டுவிட்டுச் சென்றார்.

அடுத்த 4 நாட்களில் எங்கள் தந்தை எங்களை விட்டு இப்படித் திடீரென்று பிரிவார் என்று நாங் கள் நினைக்கவே இல்லை. ஐயோ! மனிதர், இப்படியா எங்களைத் துன்பத்தில் விட்டுச் செல் வார்? எனக்குக் கோபம் கோபமாக வருகிறது. வாழ்நாள் முழுக்க எங்களுக்காக உழைத்தவருக்கு நாங்கள் எதுவுமே செய்ய வாய்ப்பில்லாமல் போனதே!

வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கை யில் ஒரு வருடம் ஒடி விட்டது. என் அம்மா, அவர் கள் பெற்ற பிள்ளைகள் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்? நான் யாரிடம் எழுத்தாளர்களையும் அரசியலையும் இலக்கியத்தையும் பேசுவேன்? என் தங்கை ஆய்வுப் படிப்பு மேற்கொள்ள ஜிப்மரில் வாய்ப்பு கிடைத்தை என் அப்பா இல்லாமல் எப்படிக் கொண்டாடுவாள்? நான் அடுத்த வருடம் வங்கி மேலாளராவதை என் தந்தை இருந்திருந் தால் எப்படிக் கொண்டாடியிருப்பார்! தன் மகள் டாக்டர் பட்டம் பெறுவதை எப்படி கொண்டாடி யிருப்பார்! எண்பத்தாறு வயது அம்மா(எங்கள் பாட்டி) தன் 54 வயது மகனை இழந்ததை நினைத்து திடீர் திடீரென்று பேசும் போது நெஞ்சுக்குள் என்னவோ செய்கிறது.

அவர் எனக்குக் காட்டிய உலகத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அது மிகவும் பெரியது. என் வயதை ஒத்த மற்ற நண்பர்களைவிட, அவர் களுடைய தந்தைகள் காட்டிய உலகத்தைவிட , என் தந்தை எனக்குக் காட்டிய உலகம் மிகப் பெரியது. அதில் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. கம்யூ னிசம், சோஷலிசம், பத்திரிகை, அரசியல், அறிவி யல், பண்பாடு, கல்வியியல், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கலைகள் என மிகப்பெரிய உலகம். அவருடைய தோழர்களும் நண்பர்களும் உறவினர்களும் அவர் மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் பிரமிக்க வைக்கிறது. பல வருடங் களாக அவருடன் மு.எ.ச.வில் இயங்கிக் கொண்டிருந்த சு.ராமச்சந்திரன், அப்பாவின் மறை விற்குப் பிறகு ஒரு நாள், சிரித்துக் கொண்டே இருக்கும் அவருடைய தோழரின் அஞ்சலிப் படத்தைப் பார்த்து என்னிடம் கூறினார்: “அந்த போட்டோவ பாத்தா எனக்கு உங்க அப்பா பேசற மாதிரியே இருக்கு பாரதி. ‘உங்கள எல்லாம் விட்டிட்டு போயிட்டேனே’ னு சொல்ற மாதிரியே இருக்கு பாரதி.”

-கண்கள் கலங்கியபடி, மனதில் அளவிலா இறுக்கத்துடன் வாயில் கடினமான புன்னகையுடன் அவர் கூறியது இன்றும் நெஞ்சைத் தைக்கிறது.

மரணம் கொடியது. ஒரு தோழரின் மரணம் இன்னும் கொடியது. என் தந்தையும் தோழருமாயிருந்தவரின் மரணம் எனக்கும் என் அம்மாவிற்கும் என் தங்கைக்கும் என் குடும்பத்திற்கும் மிகவும் கொடியது.

Pin It