அருணன் எழுதிய நிழல் தரா மரம் நாவல் இரண்டாம் பதிப்பு (முதல் பதிப்பு 2003) வெளிவந் துள்ளது. நேர்த்தியான அச்சில் முதல் பதிப்பு வந்தபின் எழுந்த விவாதங்களுக்குப் பதில் தரும் வகையில் ஒரு ‘என்னுரை’ இணைத்து இரண்டாம் பதிப் பை வெளியிட்டுள்ளார். எண் ணாயிரம் சமணர்கள் கழு வேற்றப்பட்ட சம்பவத்தையும், ஞானசம்பந்தர் தீயில் எரிந்த (ஜோதியில் கலந்த) சம்பவத் தையும் ஆதாரங்களுடனும் இந்த என்னுரையில் நிறுவியுள்ளார்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நிலவிய சைவ, சமண மோதல்களின் பின்புலத் தில் நாவல் உருவாகியுள்ளது. மதுரையை சுற்றியுள்ள யானை மலை, நாகமலை உள்ளிட்ட எண்பெருங்குன்றங்களில் வாழ்ந்த சமணர்கள் பற்றிய முழு விவரமும் விளக்கப்பட்டுள்ளது.

திசைகளையே ஆடையாக அணிந்த திகம்பரர்கள் ஒரு வேளை சைவ உணவு மட்டும் உண்டு, தலைமுடியைக்கூட மழிக்காமல் தானே பிடுங்கி கொள்ளும் கடும் மதக் கோட் பாடுகளையும் மாற்று மதத்தவர் களை பார்க்கக் கூடாது, அவர்கள் கூறுவதை கேட்கக் கூடாது என்ற கண்டுமுட்டு, கேட்டு முட்டு ஆகிய மதக் கோட்பாடுகளை யும் சமணர்களின் வாழ்வு முறை, திருமணச் சடங்குகளான கட்டி லேற்றம், உடன் மயிர் களைதல் போன்ற நடைமுறைகள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

மகாவீரர் முக்தியடைந்த நாள் தான் தீபாவளி. வேதியர்கள் அந்த நாட்களில் கன்றுக்குட்டி மாமிச உணவு அருந்தினார்கள் போன்ற பல செய்திகளும் நாவலின் ஊடே விரவிக் கிடக்கின்றன. வச்சிர போதி என்ற கதா பாத் திரத்தின் மூலம் புத்தமத கோட் பாடுகளும் விளக்கப்பட்டுள் ளன. கதை யோட்டத்தை யொட்டியே சைவ, புத்த, சமண வாத பிரதிவாதங்களும் நடை பெறுகின்றன.

தமிழகத்தில் வரலாற்று நாவல்கள் என்றால் முற்றிலும் கற்பனை கலந்து எழுதப்படுவது வழக்கம். அதில் வரலாறு இருக் காது. தனி மனித வீர பிரதாபங் கள் இருக்கும். அருணன் இதில் வரலாற்று உண்மைகளையும் கற்பனைகளையும் உரிய விகிதத் தில் கலந்து சுவைபடப் படைத் துள்ளார்.

பாண்டிய மன்னன் மாறவர் மன் அவனது மனைவி மங்கயர்க் கரசி, ஞானசம்பந்தர் போன்ற வரலாற்று பாத்திரங்களும், ஞானசம்பந்தர் மன்னனை சைவ மதத்திற்கு ‘மாற்றிய’ விதமும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சமண, சைவ மோதல், ஏடுகளை தீயில் இட்டு நடத்திய அனல் வாதம், வைகை நதியில் ஏடு களை இட்டு நடத்திய புனல் வாதம் போன்றவையும் அதில் ஞானசம்பந்தர் பெற்ற “வெற்றி” இறுதியாக எண்ணாயிரம் சமணர்களை கழு மரம் ஏற்றிய (ஏறிய) சம்பவங்கள், அதற்கு பதிலடியாக ஞானசம்பந்தர் மண விழாவிலேயே எரித்துக் கொல்லப்பட்டது என அனைத்து சம்பவங்களும் உணர்ச்சிகரமாக பின்னப் பட்டுள்ளன.

சாம (சமண)நத்தம், கழு வேற்றம் பொட்டல், திரு வேடகம் என இன்றும் உள்ள இடங்களும் வரலாற்று கதா பாத்திரங்களும் இது வரலாறா? அல்லது புதினமா? என்ற கேள்வியை எழுப்புகின்றன. வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட புனைவு என்பது தெளிவாக உள்ளது.

காலந்தோறும் பிராமணியம், தமிழர் தம் தத்துவ மரபு ஆகிய தத்துவ, ஆய்வு நூல்களுக்கு திரட்டப்பட்ட தரவுகள் கடம் பவனம், நிழல் தரா மரம் ஆகிய வரலாற்று புனைவுகள் வெளிவர உதவுயுள்ளதா அல்லது பின்னது, முன்னது வெளிவர உதவியுள் ளதா என தெரியாது. ஆனால் எல்லாம் சேர்ந்து தமிழ் இலக் கிய, தத்துவ உலகிற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளதை மறுக்க முடியாது.

இந்த இரண்டாம் பதிப்பு மதவெறிக்கு எதிரான உறுதி யான பிரச்சாரத்தில் வலிமை யுடன் பங்காற்றும் என எதிர் பார்க்கலாம்.

- வெ.சுந்தரம்

வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம், 69/24 ஏ, அனுமார் கோவில் படித்துறை, மதுரை- 625 001.

விலை ரூ 180.

Pin It