நூல் மதிப்புரை
மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய அக்னி வாசம்
“அக்னி வாசம்” மேலாண்மையின் சமீபத் திய தொகுப்பு. வித்தியாசமான கதைக் களங்கள். என்றாலும் தமக்குள் ஒருமை உள்ள களங்கள். கரிசல் காட்டு மனிதர்களின் பாலியல் வாழ்வு சார்ந்த அபூர்வமான கதைக் களங்கள். காட்டு வெளியில் ஆடுகளோடு ஆடுகளாய்த் திரியும் மனிதர்களின் பாலியல் சார்ந்த பல்வேறு கதைகள், மதம் தாண்டிய மனித தரிசனத்தை வழங்குகிற கதைகள், காட்டு வாழ்க்கையோடு மல்லுக் கட்டினாலும், மனிதர்களைத் தாண்டி உயிர்களை யும் நேசிக்கிற மனிதர் கதைகள் என்று மனிதத்தில் பிசைந்தெடுத்த மனிதர் கதைகளாகவே இத் தொகுப்பின் அத்தனை கதைகளும் அமைந்திருப் பது சிறப்பு.
காட்டு வெளியில் பாலியல் வெறி ஏறிய மூர்க்க மனிதனை ஆதி காலத்தின் வீர உணர்வோடு எதிர்கொள்ளும் மனுசியான பூச்சியின் பாத்திர வார்ப்பு “ஆதிகாலத் தீ” கதையில் மேலாண்மை யின் எழுத்து வழியாய் அபூர்வம் கொள்கிறது. அதுபோலவே “கோணல் கம்பு” கதையின் செல் லாண்டி-ஆவுடைக்கிடையில் கிராமத்து மனது களின் தன்னியல்பும், காமமும், காதலும் கொப் பளிக்கிறது. “புதிரிருட்டு” கதையில் காமத்தின் விளைவுகளாக விளைந்த தலைமுறைகளின் வாழ் வியல், வர்க்கம் சார்ந்த உணர்வு நிலையோடு வெளிப்படுத்தப்படுகிறது. இந்தக் கதையின் நாயகியான முத்துலெட்சுமியின் உளவியல் சித்தரிப்புகள் மிக நுட்பமானவை. “சூரியத்தாய்” கதை கரிசல் காட்டில் வெள்ளாமையைக் காப் பாற்றப் பறவைகளோடு மல்லுக் கட்டித் திரிந் தாலும், அவைகளை விஷம் வைத்துக் கொள்வதற் கெதிராய்த் தம் நுட்பமான உணர்வுகளைக் கணவனிடம் வெளிப்படுத்தும் சந்தனத்தாய் சுற்றுச் சூழலைக் காக்கும் உணர்வை மிக இயல்பாகப் பெற்றவளாக மிளிர்கிறாள். “காதல் வேர்வை” கிராமத்து மனிதர்களின் உழைப்பே அவர்களின் குடும்ப மனிதர்களை இணைக்கிற கன்னியாக விளங்குவதை மிக அழகாகச் சித்தரிக்கிறது. “மகள் முகம்” வழி தவறும் தகப்பனை வழி திருத்தும் மகள் நினைவின் தன்மையினைச் சாதாரண முன் யூகிக்கக் கூடிய கதியில் சித்தரிக்கிறது. “அக்னி வாசம்” வரலாற்று வழியில் சாதி எதிர்ப்பாளராக இருந்தவர் கூட, பின்னாட்களில் சாதிய மனிதராக மாறும் அவலத்தினைத் தாழ்த்தப்பட்ட பெண்ணின் தகிப்பு மொழியில் வெளிப்படுத்துகிறது. இன்றைய காலத்திலும் தொடரும் சாதி அவலத் தினைச் சுட்டிச் செல்கிறது. “வாரந்தோறும்” வித்தியாசமான கதைக்களம். கிராமத்து மண்ணி லிருந்து நகரத்தின் இருண்ட வியாபார மூலை களுக்கு ஏற்றுமதியாகும் விடலைச் சிறுவர்கள் உற்பத்தி யாகும் புறச்சூழலை அழகாகச் சித்தரிக் கிறது. “ஆகாய விரிவு ”, “கதகதப்பு” இரண்டு கதைகளும் மதங்களை மீறி நிற்கும் மனித உறவு களைச் சமகாலத்தின் தொனியோடு சித்தரிக் கின்றன. “களவுக் கலை ”, “மனப்பாரம்” கதைகள் இரண்டும் நகரத்தின் பாலியல் வக்கிரங்கள், திரைப்பட ‘பிட்டு’ப் படங்களின் வழியாக ஆண் களில் வழியாகப் பெண்களை நிறைக்கும் பண் பாட்டுச் சீரழிவு நிகழ்வுகளையும், அதனூடாகவும் மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் தங்கள் வாழ்வை நிகழ்த்திச் செல்லும் பாங்கையும் வித்தியாசமாக முன்வைக்கிறது. “அரிய கணம்” புதிய கதைக் களத்தைச் சரியாகக் கையாளாத கதையாக நிற்கிறது.  “மனத்தாய்மை” ஆடுகளுக்கான இரையைக் களவாடியேனும் கொண்டு வந்து சேர்க்கும் ஆட்டுக் காரன் ஆடு வளர்க்கக் கொடுத்த அம்மாவுக் கான குழந்தை தானத்தையும் கொடுக்க வேண்டிய சூழலையும், அதற்குள் மிளிரும் மனிதத்தையும் அழகாகச் சித்தரிக்கிறது. “கூலிக்காரன்” கதை பம்ப் ஷெட் மோட்டார் சம்சாரி கூலிக்காரனாகும் கிராமத்தின் பொருளியல் சூழலை நுட்பமுடன் விளக்குகிறது. “காட்டின் கரை” கிராமத்தின் வாழ்வுச் சுழற்சியில் படிப்பை விட்டு ஆடு மேய்க்கும் குழந்தை உழைப்பாளியாக உருமாற்றப் படுபவனை அழுத்தும் வாழ்வுச் சுமையை நமக்குள்ளும் இறக்கி வைக்கிறது. “சட்டைத் துணி” பிழைப்பறுந்து போன கிராமத்துப் பெண் ணை வேட்டையாடத் துடிக்கும் ஆண் வக்கிரங் களையும், அதனால் விளைந்த விரக்தியைத் தாண்டி, அவள் வாழ நிமிர்வதையும் செறிவாக விளக்கும் கதையாகும். “அதீதம்” இந்தத் தொகுப் பில் இருக்கும் ஒரே நீள் கதையாகும். எதிலும் அதீதம் மனிதர்களுக்குத் துயரங்களையே விளை விப்பதைச் செறிவான குடும்பச் சூழலின் வழியே சித்தரிக்கிறது. கிராமிய மனங்களுக்குள் மதம், கடவுள் நம்பிக்கைகளுக்கான இடத்தைப் பற்றிய பகுத்தறிவு வழிப்பட்ட தத்துவத் தளத்தில் நின்று அதீதம் கதை நிகழ்த்தப்படுகிறது.
இப்படித் தொகுப்பின் பதினெட்டுக் கதை களில் பெரும்பாலான கதைகள் கிராமத்து வாழ் வியலின் பல நுணுக்கமான நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. குறிப்பாக இந்தத் தொகுப்பில், பாலியல் தளத்தில் நிகழும் கதைகள் அனைத்தும் தமிழின் மக்கள் கதைக் களத்தில் புதிய நுணுக்கங் களை அறிமுகம் செய்வனவாகும். மேலும் முள்ளின் மேல் வெற்றிகரமாக நடந்த கதைகளாகும் அவை. தமிழுலகம் வரவேற்க வேண்டிய தொகுப்பு இதுவாகும்.
வெளியீடு:
கங்கை புத்தக நிலையம்,
21, தீனதயாளு தெரு, தியாகராயநகர்,
சென்னை - 600 017.
விலை.ரூ.75

Pin It