திசை கடந்து போகிறது
வான்வெளிப் பாதை....
தேசம் கடந்து போகிறது
ரயில் வண்டிப் பாதை....
நதி கடந்து போகிறது
நான்கு வழிப்பாதை...
உள்ளே வர முடியாமல்..
ஊரைச் சுற்றியே போகிறது
எங்கள்
ஒற்றையடிப் பாதை.

- ராசை.கண்மணிராசா

Pin It