* ஆழி சூழ் உலகறிய .
ஆதி மனிதன் செய்த .
அக-புற தேடல்களின் .
அடையாளமாய்.
.
* பிரபஞ்ச மனிதனின் .
புவி உள்ளங்கையில்.
நதிகளாய் ஓடும்.
ரேகைத் தடங்களாய்....
.
* பாலை-மலை நிலமென.
படர்ந்து விரிந்து .
முதலும் முடிவுமில்லா.
பெருவழியாய்....
.
* ஆள்வோர் பெருமை பேச .
அகன்று கிடக்கும்.
ஆறுவழிச்சாலையின்.
பாலப் பருவமாய்....
.
* பல வர்க்கப் பாதங்கள்.
பதிந்திருந்த போதும் .
முதலில் நடந்த பாதம் .
சிந்திய குருதியை.
சேமித்து வைத்தபடி.
.
* தேடலின் அடுத்த வரவை .
எதிர்பார்த்து .
காத்திருக்குதந்த .
ஒத்தை யடிப்பாதை.
கீற்றில் தேட...
இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011
தேடல்களின் தடயம்
- விவரங்கள்
- மங்களக்குடி நா.கலையரசன்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011