நான் என்னங்க செய்யறது. நான் வெறும் பிரதமர் தான். என்ன யாரும் மதிக்காதப்ப என்ன மதிச்சி கேக்கிரிங்க பாருங்க. அதனால எனக்கு தெரிந்த உண்மைய சொல்றேன். அவர மந்திரி ஆக்கனது நான் தான். ஆனால், நானா அவர மந்திரியாக்கல. அவரா மந்திரியா ஆயிட்டாரு நான் என்னங்க செய்யறது. நான் வெறும் பிரதமர் தான். என்னப் பத்தி அவர் சொன்ன எதையும் நம்பாதிங்க ஏனா நான் கூட அந்த ஏலத்திலே அப்படி செய்யக்கூடாதுன்னு சொல்லத்தான் செஞ்சேன். வேற என்ன செய்ய முடியும் அவர மந்திரி யாக்கனது நானில்லையே. அப்புறம் அவர் நான் சொல்லுறத எப்படி கேப்பாரு. யார் அவர மந்திரி ஆக்குனாங்களோ அவங்க சொல்லற மாதிரி கொடுத்தாரா இல்ல, அவங்களுக்கே கொடுத்தாரா அப்படியல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் ஒன்னு மட்டும் தெளிவாக சொல்லுரேங்க சலுகையின்னு கொடுத்தா தாங்க முதலாளிக சந்தோசமாகி ஏழைக்கு திருப்பி தருவாங்க. இல்லையென ஏழைக்கு எதுவும் கிடைக்காது. விலைவாசியும் குறையாது. அதனால முதலாளிக்கு கொடுத்தே தான் ஆகனும். அத சலுகையின்னு சொல்லறதே தப்புன்னு நான் சொல்றேன். அப்புறம் ஊழல்ன்னு சொன்னா எப்படிங்'க ஏத்துக்க முடியும். அவரப் பத்தி எதுவேனாலும் எழுதிக்கோங்க ஆனா முதலாளிக்கு கொடுத்தத மட்டும் பிளிஸ் தப்புன்னு எழுதாதிங்க.

4ஜி யில் ஊழல் என்று பத்திரிகையில் வந்தபின்புதான் பாதி உண்மைகள் வெளி வந்திருக்கின்றன. இனி 7ஜி, 11ஜி, 19ஜி னு யாராவது ஏதாவது சொன்னால் தான் மீதி உண்மையையும் உளறுவார் போல் இருக்கிறது. நம்புங்கள் பாரதப் பிரதமர் பரிதாபமானவர். பிதாஜி போல இருப்பதால் கலைஞரின் `ஜி' களுக்கும் (தலைமுறை), சோனியா `ஜி' க்கும்... மன்னிக்கவும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தற்சமயம் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்ல. சாரி த நெட்ஒர்க் இஸ் பிசி.

Pin It