நெஞ்சம் பதைபதைக்கிறது. இயற்கையின் சீற்றம், பயணத்தில் விபத்து என பெரும் அதிர்ச்சிகரமாக நடக்கும் நிகழ்வுகளைப் போல் பக்தர்கள் பலி என்பதும் அடிக்கடி நிகழ்கிறது. கடவுளை தரிசிக்கச் சென்ற இடத்தில் பெரும் மரணம் என்பது மொத்தக் குடும்பத்தையும் எதிர்பாராத அதிர்ச்சிக் குள்ளாக்கும் அசம்பாவிதங்கள் ஆகும். கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி என்பதால் பலியை தூக்கி சிலர் கம்யூனிஸ்ட் கட்சி மேல் போட்டு அரசியல் லாவணியை ஆரம்பித்து விடுகிறார்கள். நாடாளு மன்றத்தில் எழுப்புவோம் என்றுகூறும் பி.ஜே.பி யினர் காசி தொடர்ந்து கர்நாடகா வரை நடந்து கொண்டிருக்கும் பல தொடர் விபத்துகளின் பின் னணி பற்றி பேசிடப் போவதில்லை.

ஆனால் சபரிமலையை தேசிய புனிதயாத்திரை ஸ்தலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு நிதி ஒதுக்க வேண்டும். வைஸ்ணவி, திருப்பதி கோயில்கள் போன்று சபரிமலை வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று நீதிபதி டி. சத்திரசேகரமேனன் குழு முதல் பல குழுக்கள் 2000 முதல் அறிவித்து வந்தபோதும், காங்கிரஸ், பி.ஜே.பி ஆட்சியின் போது என்ன செய்தார்கள்?

பழி சுமத்துவது மட்டுமே உங்கள் அரசியல் எனில் கடவுளின் கோபம் உங்கள் மீதாகவே இருக்கும்.

................................................

சுவிஸ் வங்கியில் கள்ளக் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை வெளியிட முடியாது என முறைத்துப் பேசுகிறார் பிரதமர். உச்ச நீதிமன்றம் இடும் உத் தரவுகளுக்கு இவர் பதி லளிக்கும் முறையைப் பார்த் தால் சட்டத்தையும் நீதிமன் றத்தையும் இனி யாரும் மதிக்க வேண்டாம் போல் தோன்றுகிறது. எலி தின்னும் உணவை ஏழைகளுக்கு தர லாமே என்றால் முடியாது என்று முறைக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டால் தலையை முறுக்கி உதட்டைப் பிதுக்குகிறார். நீரா ரோடியா டேப்பை வெளி யிடலாமா என்றால் மௌனமாய் மனதுக்குள் கர்ஜித்து காலம் தாழ்த்துகிறார். ஊழல் பேர்வழி தாமஸை ஏன் ஊழல் ஒழிப்பு ஆணையராக பதவி கொடுத்தீர்கள் என்று வினவினால், அவரைப் போல் நல்லவர் நாட்டிலேயே இல்லை என்று தன்னையும் சேர்த்து ஆக்ரோசமாய் சொல்கிறார். சிரிக் காத பிரதமரைப் பார்த்து சிரித்த நாடு சட்டத்தை முறைக்கும் பிரதமரை ஒரு நாள் சட்டப்படி முறைக்கும்.

........................................................

என் மக்கள், என் நாடு, என் கட்சி, என் வீடு, என்பேரன், என் மகள், என் ராசா, என் பட்டம், என் வசனம் என விரிந்து கொண்டேயிருக்கிறது சாம்ராஜ்யமும், சரித்திரமும். திரை வசனத்தில் தன் வாழ்க்கையை துவக்கியவர் இன்று ஒரு கோடி நன்றி! என்ற திரைப்படத்தின் மூலம் நடிகன் வரை உயர்ந் திருக்கிறார். சுமார் ஐம்பதாண்டு திரை வாழ்வில் இவர் சந்திக்காத தடைகளே இல்லை. இடையிடையே இவர் சென்ற துறைகளிலும் சிறப்பு இவ ருக்கே. மாநில முதல்வராய் மாறி மாறி வந்தபின்பு, ஆட்சி சலித்துப் போனதால், மீண்டும் இப்போது திரைத்துறைக்கு வந்திருக்கிறார். டி.வி. பட்டிமன்றம், நடன நிகழ்ச்சி, பட்டமளிப்பு விழா, பாராட்டு விழா, பட்டம் சூட்டும் விழா, (இது அது அல்ல) என எதுவும் அவருக்கு இதமாய் இல்லாததால் எழுதுவதே தொழில் என இளைஞனாய் திரும்பியிருக்கிறார். துணைமுதல்வரான தனது மகனை விட்டு விட்டு திரைத்துறைக்கு வருவதா? நீண்ட நாள் நண்பரையும் மறக்காது அறிமுகப்படுத்தியுள்ளார் தன் படத்தில்.

மூன்று பேரன்களும் தயாரிப்புத் துறையில் கோலோச்சுகிற போதும் தமிழக அரசு சார்பாக படத்தை தயாரித்தது இவர் துணிச்சலை உணர்த்து கிறது. லாட்டரி அதிபர் மார்ட்டின் தயாரிப்பில் மற்றொரு படத்தில் பணியாற்றியது இவரின் படைப்புச் சுதந்திரத்தை பறைசாற்றுகிறது. இருப் பினும், காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை மீறி ஒரு காவலன் செயல்பட்டால் முதல்வர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காதிருந்தால் வரலாறு என நினைக்கும். ரசிகர்களை உதை, தியேட்டர்களை மூடு என் கட்சி என் ஆட்சி என்போர் இவையுண்டு... தானுண்டு...

Pin It