புடவி எனும் தமிழ்ச்சொல் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. அடவி, காட்டைக் குறிக்கிறது. இவை இரண்டிற்குமான இணைப்பையும் சிக்கலையும் நாம் தெரிந்துகொள்ள பல்வேறு சமிக்ஞைகள் நமக்குச் சொல்லப்படுகின்றன, காட்சிப்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமானது நம்முடைய பத்திரிகையாளர்கள் சொல்வதுபோல ‘ஊருக்குள் புகுந்து அட்டகாசங்கள் செய்யும்’ வன உயிரினங்களின் நிலையாகும்.

‘அட்டகாசம்’ என்ற சொல் இல்லாத பத்திரிகைகள் இல்லை. மனித மையவாதம் இச்சொற்களை விளை விக்கின்றன. மனிதனும், இப்பூவுலகும் இப்புடவியில் மிகச் சொற்பமான பங்கை வகிக்கின்றன எனத் தோன் றுகிறது. அதிலும் இப்பூவுலகில் மனிதனும் சொற்பமா னவன்தான். சொற்பமானவன் என்று உணர்ந்ததினாலோ என்னவோ தனது இருப்பை நிலை நாட்டிக்கொள்ள பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறான். இப்புடவி யும் தனக்குப் புரிந்துவிட்டதாக நம்புகிறான்.

இயற்கையுடன் இணைந்து அதன் வழியே பயணம் செய்யும் போக்கை மறந்து தனது அதிகாரத்தால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறான். ஆனால் இவ்வளவு அறிவியல் வளர்ந்த பிறகும் ஃபுகோகா சொல்வது போல் ‘மனித இனம் இயற்கை குறித்து எதையுமே அறிந்திருக்கவில்லை’ என்பதுதான் உண்மை.

வன உயிரினங்களின் வீடுகளை அதாவது காடுகளை தினசரி அழிப்பதைத் தன்னுடைய தொழிலாக வைத்துள்ளான். இதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் பன் னாட்டு நிறுவனங்களும், நம் அரசுகளும்தான். கானகத் தில் பல்லுயிர்ப் பெருக்கம் இயல்பானது. மனிதனால் பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்க இயலாது. ஒற்றைச் சிந்தனையே அவனது அடிப்படையாக உள்ளது பல இடங்களில், காடுகளில் அது தேயிலைத் தோட்டம், தேக்கு மரங்கள், யூக்கலிப்டஸ் மரங்கள் என்று ஒற்றை யாக அவன் சிந்திக்கிறான். காடுகளை மனிதனால் உரு வாக்க இயலாது என்பதைக்கூட அவன் அறியவில்லை.

காடுகளிலிருந்து வெளியேறும் யானைகள், சிறுத்தை, பாம்பு மற்றும் பல்லுயிரினங்கள் காட்டைவிட்டு வெளியே வந்து காட்டில் என்ன நடக்கிறது என்பதை அன்றாடம் சொல்கின்றன. மனிதன் காட்டையழித்தது மட்டுமல்லாமல் மனிதனைப் போலவே பழிக்குப் பழிவாங்க தங்களுடைய ஊரை அழிக்கின்றன என்று செய்தி சொல்ல வரும் உயிரினங்களை அழிக்கவும், அதனுடன் மோதவும் செய்கிறான். இயற்கையையும் வனங்களையும் மனிதன் உணரும்போது உயிரினங்கள் சொல்லும் செய்தி அவனுக்குப் புரியும்.

Pin It