நேரம்: 55 நிமிடங்கள்,

தயாரிப்பு, இயக்கம்  அமுதன் ஆர்.பி

கதிர்வீச்சு அபாயங்கள் பற்றி என்னதான் கூக்குரலிட்டாலும் அது சிலர் காதில் மட்டுமே விழுகிறது. இன்றைய சூழ்நிலையில் கதிர்வீச்சு ஆபத்துக்காக அணு உலைகள் வெடிக்க காத்திருக்க தேவையில்லை. நாம் வாழும் சூழ்நிலையிலேயே நம்மை அறியாமலேயே நாம் அதற்குள் அகப்பட்டு விடுவோம். அப்படியரு அவலச் சூழ்நிலை உலகுக்கு அறிவிக்கிறது அமுதனின் இந்த “கதிர்வீச்சு கதைகள்” ஆவணப்படம்.

கன்னியாகுமரி மாவட்டத்திலே மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியவிளை எனும் கிராமம் அம் மாவட்டத்திலேயே மிகவும் பின் தங்கிய கிராமம். இயல்பான கடல் தொழிலில் ஈடுபட்டிருந்த இவ்வூர் மக்கள் காலப்போக்கில் தொழில் வசதிகள் வாய்ப்புகள் குறைய அங்கு 1963ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்திய அரிய மணல் ஆலையில் ஒப்பந்த மணல் எடுக்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டனர்.

அதில் சீரியதொரு வருமானத்தை மாதந்தோறும் பெற்று வந்தனர். நல்லதொரு வாழ்வு கிடைத்ததாக அவர்கள் முதலில் நினைத்தாலும், தங்கள் வாழ்க்கையையே அதற்காக அடகு வைக்கிறோம் என்பதை உணரவில்லை. அவர்கள் வருமனத்திற்காக அள்ளும் மணலில் அவர்கள் வாழ்வையே நாசமாக்கக் கூடிய கதிர்வீச்சு கனிமங்கள் உள்ளன என்பதை அவர்கள் மிக தாமதமாகவே புரிந்து கொண்டனர். இல்லுமனைட், கார்னெட், ஜிர்கான், மோனசைட், சில்லிமனைட் போன்ற கதிர்வீச்சு நிறைந்த தாதுக்களை கொண்ட மணலைத்தான் அவர்கள் அள்ளி இந்திய அரசு நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். விளைவு? பசுமையும், பள்ளிப்படிப்பும் நிரம்பி வழியும் கன்னியாகுமரி மாவட்டத்தின் நெய்யூரிலுள்ள பன்னாட்டு புற்றுநோய் மய்யம் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கதிரியக்க கனிமப் பொருட்களால் அந்த கிராமத்தில் புற்றுநோய், மந்தபுத்தி குழந்தைகள், பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய், அங்கக் குலைவு போன்ற கொடும் நோய்களையும், பாதிப்புகளையும் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது.

விளிழிளிஞீமிஜிணி எனும் விலையுயர்ந்த தாதுப்பொருளிலிருந்துதான் ஸிஞிஙீ போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் தோரியம் என்கிற கனிமத்திலிருந்த்து வெளிப்படுகின்ற கதிரியக்கங்கள் தான் வாழ்வையே நாசமாக்கும் நோய்களை அம்மக்களுக்கு அளித்து வருகிறது.

அந்தப் பகுதியிலே கதிரியக்கத்தைப் பற்றியதான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. அதனால் வரக் கூடிய பாதிப்புகளும் அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு அரசே தன் மக்களை பலியாக்கும் கொடூரத்தை சொல்லுகிறது இப்படம்.

ஒரு சிறிய கிராமத்தில் தன்மானத்துடன் கடல் தொழிலில் ஈடுபட்டிருந்த மக்களை உயிருக்கு ஆபத்தான கதிவீச்சு மணல் அள்ளும் தொழிலுக்கு தள்ளிய நிலை இந்த ஆவணப்படத்தில் தெரிய வருகிறது.

இந்த “கதிர்வீச்சு கதைகள்” ஆவணப்படத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகள் மிகுந்து இருக்கிறது.

அன்னா ஹசாரே போன்ற சிறிய விஷயத்தை ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள், அதில் குளிர் காயும் அரசு இயந்திரங்களுக்கு இம் மக்களின் கதைகள் பயன்படாமல் இருக்கலாம். ஆனால் வெளிவந்தே ஆக வேண்டிய உண்மைக் கதைகள் அமுதனின் இக்குறும்படம் மூலம் வெளிவந்திருக்கிறது.

Pin It