கீற்றில் தேட...
புவி அறிவியல்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
அரோரா என்பது வடதுருவமான ஆர்க்டிக் மற்றும் தென்துருவ அண்டார்க்டிக் பகுதிகளில் ஏற்படும் இயற்கை ஒளியாகும். அரோரா என்பது ரோமனியர்களின் விடிகாலை பெண் கடவுளின் பெயராகும். கிரேக்கத்தில் போரியஸ் (Boreas) என்பது வடக்கு காற்று என்று பொருளாகும். இரண்டையும் இணைத்து வடதுருவத்தில் தெரியும் அசையும் வண்ண ஒளிக்கு பெயர் சூட்டி யுள்ளனர். இது புவியின் 60 டிகிரி அட்சரேகைக்கு மேலும், வானின் வளிமண்டலத் தில் மிக உயரத்தில் 80 கி.மி உயரத்துக்கு மேல் உள்ள வெப்பகோளத்தில் அழகான வண்ணத் திரையாக காட்சி அளிக்கிறது. புவியின் காந்தப் பரப்பி லிருந்து புறப்பட்ட மின்னூட்டம் பெறப்பட்ட துகள்களான ஆக்சிஜன் மற்றும் நைட்டிரஜன் அயனிகள், சூரியக் காற்றுடன் மோதும்போது வானில் வண்ணங்கள் தொடர்ந்து உண்டாகின்றன. இது பார்ப்பதற்கு வண்ணத் திரைகளைத் தொங்கவிட்டது போலிருக்கும். அவை அசையவும் செய்யும். இந்த வண்ண ஒளிப்பரப்பு பகலிலும் கூட நடக்கிறது. இரவில் இந்த ஒளியில் அமர்ந்து புத்தகம்/நாளிதழ் கூட படிக்கலாம்.
ஆர்க்டிக்கில் தெரியும் வண்ணத் திரைக்கு அரோரா போரியாலிஸ் (Aurora borealis) என்றும், அண்டார்க்டிக்கில் தோன்றும் வானின் வண்ண ஒளி ஆட்டத்திற்கு, அரோரா ஆஸ்த்திரேலிஸ் (Aurora australis) என்றும் பெயர். இந்த ஒளிகள் பெரும்பாலும் அழகான பச்சை, வயலெட், சிவப்பு வண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சி அளிக்கும். ஆக்சிஜனின் மின் னூட்டம் பெற்ற துகள் இருந்தால் அது பச்சை/பழுப்பு கலந்த சிவப்பாகவும், நைட்டிரஜன் துகள் எனில் நீளம்/ சிவப்பாக காட்சி தரும். அப்பகுதி மக்களால் இந்த ஒளிகள், கடவுளின் சமிக்ஞைகள் என்று நம்பப்படுகின்றன. அவற்றின் நிறங்கள் கணத்தில் மறைந்து மாறி அற்புதமாய் தெரியும். இந்த அற்புதத்தைக் காண கனடாவின் கடற்கரைக்கு மக்கள் பயணம் வருகின்றனர். இந்த அரோரா தெற்கே அன்டார்க்டிக்கா, தென் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தெரியும்.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
கொஞ்சம் சாய்ந்து வெளி நீட்டிக் கொண்டிருப்பது போன்ற உலகின் தென்கோடியைப் பார்த்திருக்கீர்களா? அதுதான் அண்டார்க்டிக் என்ற பனிக்கண்டம். இது தென்பகுதி உலகின் அண்டார்க்டிக் வட்டத்தை தன் வசம் வைத்துள்ளது. இதனைச் சுற்றி தென் பெருங்கடல் உள்ளது. 1.4 கோடி ச கி.மீ. பரப்பு கொண்ட அண்டார்க்டிக் பகுதி உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது ஆஸ்திரேலியாவைவிட இரண்டு மடங்கு பெரியது. அன்டார்க்டிக்காவின் 98% பகுதி பனியால் மூடப்பட்டுள்ளது. தரைமேல் சுமார் 1.6 மீ உயரத்திற்கு பனிப்பாளம் உள்ளது.
அண்டார்க்டிகாவின் குணமும் நிறமும்.. !
அன்டார்க்டிகா பொதுவாக உலகிலேயே மிகவும் குளிர்ந்த, உலர்ந்த, காற்று அதிகம் உள்ள கண்டம். அது மட்டுமல்ல அனைத்து கண்டங்களில் மிக உயரத்தில் இருப்பதும் அண்டார்க்டிகா மட்டுமே. இங்கு அதிகம் தாவரங்கள் இல்லாததால், பனிப் பாலைவனம் என்றே அழைக்கப்படுகிறது. வருடத்தில் வெறும் 200 மி.மீ. (8 இன்ச்தான்) மட்டுமே மழைப் பொழிவு உண்டு. ஆனால் இங்கு குளிர் குடலை உருவி விடும். இதன் வெப்பநிலை -89 டிகிரி செல்சியஸ். அதனால் இங்கு மனித வாழ்க்கையே/வாடையே கிடையாது.
ஆனாலும் கூட, அப்பகுதியில் அண்டார்க்டிகா பற்றி ஆராய தொடர்ந்து சுமார் 1000 - 5000 மக்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். இங்கு குளிரைத் தாக்கு பிடிக்கும் உயிரினங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை ஆல்காக்கள், பாக்டீரியா, பூஞ்சைகள், விலங்குகளில் உண்ணிகள், தட்டை புழுக்கள், சீல், மற்றும் இராணுவ வீரர்கள் போல் அணிவகுப்பு நடத்தும் பெங்குவின்கள் இந்த குளிர்ப் பரப்பில், பனிப்பாளத்தை ரசித்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருகின்றன. இங்கு பனிக் கரடியோ எஸ்கிமோக்களோ கிடையாது.
சூரியக் கதிரை விரட்டும் பனிப்பாறை!
அண்டார்க்டிகா பற்றி கிரேக்கர்கள் சொல்லி இருக்கின்றனர். ஆனால் 1820 வரை அந்தப் பனிக்கண்டத்தை யாரும் பார்த்ததில்லை. முதன் முதல் 1821ல் தான் அண்டார்க்டிகா பகுதிக்குச் சென்றனர். அன்டார்க்டிக்காவின் பனிப் பாறை 5 கி. மீ உயரம் வரை இருக்கும். இதில் உலகின் 70% நல்ல நீரைப் பெற்று விட முடியும். ஒருக்கால் இவை கரைந்தால், கடல் மட்டம் 50 - 60 மீ. உயரம் வரை உயரும். அண்டார்க்டிகாவின் பனிப்பாறைகள் மிகப் பெரிய பனியாறுகள்தான். இவை மிக மிக மெதுவாக கடலை நோக்கிச் செல்கின்றன. இந்த கண்டம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,300 மீ உயரமாக உள்ளது. மேலும் அண்டார்க்டிகா மிகவும் குளிராக இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? சூரியனிலிருந்து வரும் சூரியக் கதிரை இதன் பனிப்பாறைகள் சுமார் 80% திருப்பி அனுப்பி விடுகின்றன. மீதமுள்ள 20% சூரிய வெப்பம் வளிமண்டலம் மற்றும் மேகங்களால் உட்கிரகிக்கப்படுகின்றன.
உலகின் மிக நுணுக்கமான ஆய்வகம். !
அண்டார்க்டிகாவில் ஏராளமான கனிமங்கள் உள்ளன. அங்கே எண்ணெய் வளமும் ஆழ்ந்து கிடக்கிறது. உலகின் அற்புதமான ஆய்வகம் அன்டார்க்டிகாதான். உலகின் பல பகுதிகளிலிருந்து விஞ்ஞானிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். இங்கு அறியப்படாமல் இருக்கும் வளங்கள், உயிரிகள் போன்றவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் மாசு படாத சூழலைக் கணக்கில் கொண்டு, வெப்ப நிலை மாற்றத்திற்கும், பிரபஞ்ச உருவாக்கத்திற் கான காரணங்களையும் இங்குதான் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
அண்டார்க்டிக்கவை 29 நாடுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அங்கு அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்காகத்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, இதன் பெரும்பகுதி உலக வெப்பமயமாக்கலால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் என்ற இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழு கின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள். எஸ்கிமோ என்ற வார்த்தை அல்கோன்குயன் (Algonquian) மொழியி லிருந்து உருவானது. இதன் பொருள் பச்சை மாமிசம் உண்பவர்கள் என்பதாகும். கிழக்கு சைபீரியா (ரஷ்யா & பெர்ரிங் கடல்_Bering sea), அலாஸ்காவின் ஓரம், கனடா மற்றும் கிரீன்லாந்தில் இவர்கள் வசிக்கின்றனர்.
எஸ்கிமோக்களில் இன்னூட் (Inuit) மற்றும் யூபிக் (Yupik) என இருவகையினர் இருக்கின்றனர். அலூட் என்ற மூன்றாவது இனமும் உண்டு. இவர்கள் குட்டையாகவும், லேசான மஞ்சள் நிறத்துடனும், கருத்த நீண்ட முடியும், கருமை நிறக் கண்களும், அகன்ற முகமும் உடையவர்கள். அலாஸ்காவில் இருப்பவர்கள் சைபீரியாவிலிருந்து சுமார் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்திருக்கின்றனர் என்று அறியப்படுகிறது. பாரம்பரியமாக இந்த மக்கள் உணவு, வெளிச்சம், சமையல் எண்ணெய், கருவிகள் மற்றும் ஆயுதங்கள் என அனைத்திற்கும் கடல் வாழ் பாலூட்டிகளையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்திற்கு மீனையும், கலைமான்களையுமே நம்பி உள்ளனர்
எஸ்கிமோவின் உணவு!
எஸ்கிமோக்களுக்கு வாழ்தல் என்பது என்றைக்கும் நிரந்தரப் பிரச்சினையானதே. சீல்தான் அவர்களின் வாழ்வாதாரமான முக்கிய உணவு. இருப்பினும் கோட் என்னும் மீன், திமிங்கலம் மற்றும் மற்ற கடல் உயிரிகளையும் உண்பார்கள். கோடையில் கலைமான்கள், ஆடுகள் போன்றவற்றையும் சாப்பிடுவார்கள். குளிர்கால உணவில் துருவக்கரடி, துருவநரி, துருவ முயல் போன்றவைகள் மேல் நாட்டம். இருப்பினும், அவர்களுக்கு இஷ்டமான உணவு சீல், கலைமான் கறி, வால்ரஸின் கல்லீரல் மற்றும் திமிங்கலத்தின் தோல் மட்டுமே.
உறைவிடம்!
உணவு தேடுதல் என்பது பெரிய சிக்கலாக உள்ளதால் எஸ்கிமோக்கள் ஓர் இடத்தில் நிலையாக வாழாமல், தொடர்ந்து நாடோடிகளாகவே இருக்கவேண்டிய நிலை. மூன்று வகையான வீடுகளில் வசிக்கின்றனர். கோடை யில் சீல் என்ற பாலூட்டியின் தோலால் ஆன கூடாரம். எலும்பை ஊடுருவும் குளிர் காலத்தில் பெரும்பாலோர், பனியை வெட்டி எடுத்து, சுருள் வடிவத்தில் கவிழ்த்த கிண்ணம் போன்ற இக்ளூ என்ற பனி வீடு உருவாக்கி அதில் வசிக்கின்றனர். இது தாற்காலிகமானதே. குளிர்காலத்தில் மரம், எலும்பு போன்றவற்றால் ஆன கூடார வீடும் உண்டு.
பொதுவாக இவர்கள் குழுவாகவே வாழ்கின்றனர். இதில் பல நூறு மனிதர்கள் இருகின்றனர். எஸ்கிமோக்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே நடத்துகின்றனர். குழந்தைகளைப் பொக்கிஷமாக கருதுகின்றனர். குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ ஒருக்காலும் இல்லை. 'இக்ளூ'வைக் கட்ட அவர்களுக்கு 30நிமிடம்தான். 3-4 மீ உயரம்தான் வீட்டின் உயரம். இதில் ஐஸ் படுக்கையின் மேல், முடி உள்ள தோலை விரித்து படுத்து உறங்குவார்கள். வீட்டில் மின்விளக்கெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். போக்குவரத்து சாதனமே இல்லாத உலகம் இது. ஒரு சைக்கிள்கூட கிடையாது. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டிதான் இவர்களின் அதிகபட்சமாய் வேட்டை முடித்து உணவு கொண்டு வரும் சாதனம்.
உடை
எஸ்கிமோக்கள் கடல் வாழ் விலங்குகளின் தோலையே உடையாக அணிகின்றனர். விரும்பி அணிவது கலைமான் தோலின் உடைதான். ஏனெனில் அது உடலைக் கொஞ்சம் கதகதப்பாக வைத்திருக்கும். எடை குறைவாகவும் இருக்கும். இது கிடைக்காவிட்டால்தான் சீல், துருவக் கரடி, துருவ நரி போன்றவற்றின் தோலையும் பயன்படுத்துவார்கள். அவர்கள் உடை அணியும் முறை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. குளிர் காலத்தில் எலும்பு மற்றும் மரத்தாலான கண்ணாடிகளை அணிகின்றனர். குளிர்காலத்தில் இரண்டு அடுக்கு உள்ள உடைகள் போடுகின்றனர். அந்த உடை, உள்ளே தோலால் ஆனதும், அதன் வெளியே முடியுடன் கூடியதாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையே காற்றோட்டம் இருக்கும்.
இதனால் உடலின் வெப்பம் பாதுகாக்கப்படுகிறது. கோடையில் ஓர் அடுக்கு உள்ள உடை அணிகின்றனர். இன்று எஸ்கிமோக்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. வெளியிலிருந்து வாங்கும் உணவு, உடைகளைப் பயன்படுத்துகின்றனர். வெளியிடங்களுக்கு பணிக்கும் வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் உணவு தேடுவார்கள்; வேட்டைக்குச் செல்வார்கள். வீட்டில் உணவு சமைப்பதும், உடைகள் தைப்பதும், குழந்தைகளைப் பராமரிப்பதும்தான் பெண்கள் பணி. கடல் கடவுளான செட்நாதான் தங்களைக் காப்பாற்றுகிறது என்று நம்புகின்றனர். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை, சூரியன் மற்றும் நீரை காப்பற்றுவதும் தேவதையே என ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் எஸ்கிமோக்கள்.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப் பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது.
இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபனி துந்திரப் பகுதியாகவே உள்ளது. தரைக்கு கீழும் கூட பனி! வடக்கில் 66.33 அட்ச ரேகைப் பகுதிதான் ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) எனப்படுகிறது. இங்கு ஓர் அதிசயத்தைக் காணலாம். நடுநிசி நேரத்திலும் சூரியன் பளபளவென்று ஒளி வீசி அந்தப் பகுதியையே கொளுத்தி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார். இது ஜூலை மாதம் நடக்கும். ஆனாலும் கூட அப்போது அங்கு வெப்பத்தின் அளவு அதிகபட்சம் 10 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். ஆர்க்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் சூரியனையே காணமுடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன் உள்ள/மறையாத பகலும் காணப்படும்.
நாள் முழுவதும் சூரியன்!
வட, தென் துருவ வட்டத்தைச் சுற்றி சுமார் 90 கி. மீ வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறார். இங்கே சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தெரியும். பின்லாந்தின் கால்பகுதி வட ஆர்க்டிக் வட்டத்தில் உள்ளது. எனவே, அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகரவே/மறையவே மாட்டார். நார்வேயின் சவால்பார்ட் (Svalbard) என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை (5 மாதங்கள், 10 நாட்கள்) 24 மணி நேரமும் பகலவன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக்கொண்டு காட்சி அளிப்பார். அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது.
துருவப்பகுதிகளில், 60 டிகிரி அட்ச ரேகைகளுக்கு மேல் போய்விட்டால், அதாவது ஆர்க்டிக்கு தெற்கே/அண்டார்க்டிக்காவுக்கு வடக்கே, அந்திமாலை ஒளியைத் தரும். வெளிச்சம் இருக்கும். மின் விளக்கு இன்றி படிக்கலாம். இந்த தினங்களை செயின்ட் பீட்ச்பர்க் மற்றும் ரஷ்யாவில் வெள்ளி இரவு தினங்கள் (Silver Night Days) என ஜூன் 11 - ஜூலை 2 வரை, இந்த நாட்களில் எல்லாம், கலாச்சார விழாக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு புதிதாக வருபவர்களுக்கு, இரவில் சூரியன் தெரிவதால் உறங்கச் செல்ல கொஞ்சம் பிரச்சினை ஆக இருக்கும்.
- அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி
- பழுப்பு நிறக்கண்கள் உண்டாவதேன்?
- மூலக்கூறும் மின்னணுக்களும்
- நுண்ணுயிரிகளை முதலாவதாகக் கண்டறிந்தவர் யார்?
- மூளை - நம்பிக்கைகளின் மூலம்
- எரடோஸ்தனிஸ்... உலகின் முதல் புவியியலாளர்
- ஓசோன் மண்டலப் பாதுகாப்பு - அவசியமும் வழிமுறைகளும்
- வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும். 1871 - 1981
- வானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்
- வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.
- சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும்.
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாயத் தொழிற்றுறைக்கான விரிவாக்கம்
- இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மாற்றுச் சக்தி வளங்கள்
- வானம் ஏன் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது?
- மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
- நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
- 'கடி' மன்னன் மனிதனே
- பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
- சூறாவளி எப்படி உருவாகிறது?