சிறகடிக்கும் அழிவற்ற பறவை
மலர்ச்சி மிகுந்த வீழ்ச்சியற்ற பூ
தகிக்கும் நிலமும் கொதிக்கும் கடலும்
வீரம் பூத்த காடுகளுமாகி செழித்திருக்க
தேசத்தில் செண்பகப் பறவைகள்
வந்து பூவரச மரங்களில் அமருமா?
காயம் பட்ட குழந்தைகளின்
இரத்தம் படிந்த முகங்களில்
பூக்களின் ஆசைகள் பூக்கின்றன
சந்ததியின் குருதியால்
வரையப்பட்ட சித்திரங்கள் எல்லைகள் மீதிருக்கின்றன
மஞ்சளும் சிவப்புமாக நிலம் பூக்கும்
சருகளுக்குள்ளிருந்து நேராக
முளைத்தெழும்பும் செடிபோல
சாம்பலுக்குள் அணையாது
புகைத்தெழும்பும் நெருப்புப்போல
அழியாது எப்பொழுதுமிருக்கும்
எனது அழகிய தேசம் பறவையைப்போல பூக்கும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சமூகநீதித் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2012
பூக்கும் பறவை
- விவரங்கள்
- தீபச்செல்வன்
- பிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2012