1. 2009 நவம்பர் 9ஆம் நாள் காலை அம்பத்தூர் வெங்கடாபுரம் தாய்த் தமிழ்ப் பள்ளி அருகே ஏழைகளின் வீடுகளைக் காவல் துறையின் துணையோடு நகராட்சி அதிகாரிகள் இடித்த போது தலையிட்டு நீதி கேட்ட சமூக நீதித் தமிழ்த் தேசம் வெளியீட்டாளரும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், தாய்த் தமிழ்ப் பள்ளியின் செயலாளருமான தோழர் சிவ. காளிதாசனை இழிவாகப் பேசிச் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்த காவல்துறையினர் அம்பத்தூர் புறக்காவல் உதவி ஆணையர் குமாரவேல் மீதும், கொரட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செங்குட்டுவன் மீதும் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடு!

2. சிவ. காளிதாசனைத் தாக்கிய காவல்துறையினரைக் கண்டித்துத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் ஒட்டிய சுவரொட்டிகளைக் கிழித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடு!

3. பல பத்தாண்டுகளாகக் குடியிருந்த வீடுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு இழப்பீடும் மாற்று இடமும் வழங்கு! 

Pin It