vallinayagam_300அம்பேத்கர் - பெரியார் இருவரையும் தமக்கான சமூக - அரசியல் - இலக்கியப் பணிகளுக்கான வழிகாட்டியாகவும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தளத்தில் செயற்பாட்டாளராகவும், சாதி ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்திற்கான கருத்தியல் உருவாக்கத்தில் ஏறத்தாழ 25 நூல்களின் எழுத்தாளராகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலான முழு நேர பொது வாழ்க்கைப் பணியாளராகத் தம்மை அர்ப்பணித்துச் சென்றிருப்பவர் சமநீதி எழுத்தாளர் ஏ.பி. வள்ளிநாயகம். அம்பேத்கரின் கூற்றுப்படி, எந்தவொரு மனிதனுக்குமான இயல்பான சுயநலத்துடன் கூட முரண்படாத வகையில், அறிவு நாணயத்தோடு தம் வாழ்க்கையையும் கருத்தியலையும் தகவமைத்துக் கொண்டவர். நம் அன்புக்கும் பெருமைக்கும் உரியவரின் மூன்றாம் ஆண்டு நினைவை, 'தலித் முரசு' தம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறது.

“ஒருவருடைய அறிவு வளர்ச்சி அவருடைய சுயநலத்தோடு முரண்படாத வரையில் அவரிடம் அறிவு வேலை செய்யும். எப்பொழுது அது சுயநலத்தோடு முரண்படுகிறதோ, அப்போது அவரிடம் அறிவு தோல்வியுறுகிறது.'' - டாக்டர் அம்பேத்கர்.

Pin It