எல்லாம் சரிதான் நமது புவி என்கிற வீட்டை எப்படி அளப்பது, வீடு எந்த குடியிருப்புப் பகுதியில் உள்ளது, குடியிருப்பு எந்த ஊரில், ஊர் எந்த மாநிலத்தில், மாநிலம் எந்த நாட்டில் என்றெல்லாம் சொல்லியாகிவிட்டது. வீடு எப்படி உருவானது என்பதை சொல்லவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி இப்போது பேசுவோம்.

சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை. அந்த அண்டவெளியில் இருந்த நுண் துகள்கள் திரண்டு ஒரு நெருப்புப் பந்து போல சுழன்றபடி இருந்தன. அந்த நெருப்புப் பந்தின் பெயர் நெபுலா. சுமார் 10000 டிகிரி வெப்பத்தில் அக்கோளம் திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த வெடிப்பை தான் பெரு வெடிப்பு என்கிறோம். பெருவெடிப்பால் சிதறிய துகள்கள் சுழற்றப்பட்ட விசையுடன் அண்டவெளியில் ஆங்காங்கே விழுந்து இறுகத் தொடங்கின. அந்த இறுகும் திரள்களில் அணுவின் அடிப்படைத் துகள்களான நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் ஆகியவை உருவாகின. இந்த அணுத்துகள்களால் ஹைட்ரசன், ஹீலியம் போன்ற எளிய அணுக்கருக்கள் உருவாகின. இப்படித்தான் அண்டவெளியில் இருக்கும் பல ஆயிரம் பில்லியன் விண்மீன்களில் ஒன்றான சூரியன் சுமார் 1000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

பெருவெடிப்புக்குப் பிறகு பிரபஞ்ச வெளியில் பல்வேறு வகையான பொருட்கள் உருவாகின. விண்மீன்கள், கோள்கள், விண்மீன் கூட்டங்கள், எரியும் விண்கற்கள், வாயுக்கோள்கள் என இவற்றை நாம் கைப்படுத்தி அழைக்கிறோம். உங்களால் கற்பனையே செய்யமுடியாதபடியான வெற்றிடம் தான் பிரபஞ்சம். அந்த இடத்தில் ஆங்காங்கே இவை இருக்கின்றன.

பிறகு பேசுவோம் குழந்தைகளே!
Pin It