கீற்றில் தேட...

vanitha
நான் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்த ஏழைப் பெண். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நான் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு, எங்கள் சக்திக்கு மீறி செலவு செய்து, சிகிச்சை செய்து போராடி வந்தோம். தற்போது எனது இரண்டு சிறுநீரகங்களும் (கடந்த மூன்று மாத காலமாக) முழுமையாக செயலிழந்து விட்டபடியால், உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளேன். இதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய, சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவும், அதற்குப் பிறகு ஆகும் மருந்து செலவிற்கு, சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகுமென, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இவை ஒருபுறம் இருக்க, சிறுநீரக தானம் பெற, எங்களது குடும்பத்தில் வழிவகையில்லாத நிலையில், வெளியிலும் தானமாகப் பெறுவதென்பது – அரசு கெடுபிடி அதிகமுள்ள தற்போதைய சூழலில் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? என்ற கேள்விக் குறி என் மனதை வாட்டுகிறது. எனவே, நான் செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கிறேன். எனது நிலைகண்டு, எனது உயிரைக் காப்பாற்றிட உதவிடும் வகையில் என்னையும், என் குடும்பத்தாரையும் வழிநடத்திட வேண்டுமென கரம்கூப்பி வேண்டுகிறேன். தொடர்புக்கு : ஏ. வனிதாமணி, க/பெ. சம்பத்குமார், 3ஏ, பெரியார் தெரு, பழைய சூரமங்கலம், சேலம் 5