Abdul Kalam வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது
நிர்வாணத்தின் முன் ஆடையின்
தலைகுனிவு பற்றி

அதிர்ச்சியின் கோபங்கள் ஊறும்
ரத்த நாளங்களின் கண்கள்
சிவக்கின்றன

ஆட்சி
விஞ்ஞானம்
பொருளாதாரம்
எதுவெனினும்
அடங்கி பம்முகின்றன
மதங்களின் கைகளுக்கு கீழ்

நிர்வாண அசிங்கங்கள்
புனைந்தவேடங்களின் முன்னால்
நின்று குழைகிறது
நாட்டின் உயரதிகாரம்

பகுத்தறிவுப் போர்வையை
உதறிப் போட்டுவிட்டு
கனவு காண்கிறது தேசம்
அடுத்த சாமியாரின் அருளாசிக்காய்
Pin It