அமிழ்கிறது
உள்ளங்களில் கிடக்கும்
வெஞ்சினம்

அரசியலின் சூதில்
ஏமாற்றுவதற்காய் காலியாக்கப்படுகின்றன
இல்லாத இதயத்தில் இடங்கள்
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
செரித்துக் கிளம்புகின்றனர்
கோரிக்கைகளின் கைகளை
சுருண்டு குழையும் வாலென
புறந்தள்ளி
ஒட்டிய மண்ணை
உதறிவிட்டு எழுகிறது
அழிக்க விம்மும் தடைகளை
மோதி உடைக்க
எளிய மக்களின்
புறக்கணிக்கப்பட்ட அரசியல்
புதிய விடியலாய்
புதிய விருட்சமாய்
புதிய விடுதலையாய்