
இழிவின் போர்வைக்குள்
பதுங்குகிறது இதயம்
வெட்கம் பிடுங்கித் தின்னும்
அவலம் சாலைகளில் சுழல்கிறது
சக்கரங்களென
நாகரீகம் தெளிந்த மனங்களில்
மிதக்கின்றன அழுக்குகள்
புலப்படாத திசைகளிலிருந்து
பெருகுகிறது காரிருள்
புடைத்த கால் நரம்புகளில்
ஊடுறுவிய வெப்பம்
விசையாய் கசிகிறது கைகளில்
பாரத்தின் அழுத்தத்தில்
விழிபிதுங்கி தொடர்கிறது
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
வர்க்கங்களை வேரறுக்கும்
உரைவீச்சுகளில்
மறந்துதான் போயிருக்கும்
உட்காரும் வர்க்கமும்
இழுக்கும் வர்க்கமும்