டிசம்பர் 8ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் தீவிர இந் துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் விழாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், பெரும்பான்மை சமூகம் என்ற பெயரில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் பேசினார்.

அரசியலமைப்பைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள நீதிபதி ஒருவர் இந்துத்துவா அமைப்பின் விழாவில் பங்கே ற்றது மட்டுமல்லாமல், அந்த அமைப்பிற்கு ஆதரவாக முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பேசியது நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியது. நீதிபதியின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், “விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் விழாவில் நீதிபதி சேகர் குமார் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த விவரங்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

அதே போல நீதிபதி சேகர் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்ற மாநிலங்கள வையில் 55 எம்.பி.க்கள் அவை செயலாளரிடம் தீர்மான மனு அளித்தனர். இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் விடுத்துள்ள உத்தரவில், “அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் பேசியதை ஏற்க முடியாது. அதனால் டிசம்பர் 17ஆம் தேதி நீதிபதி சேகர் குமார் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் முன் ஆஜராக வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்