பெங்களூருவில் டவுன் ஹால் எதிரே கடந்த சில தினங்களுக்கு முன் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகரும், கன்னட எழுத்தாளரு மான கிரீஷ் கர்னாட், சாகித்ய அகாதெமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் மரளுசித்தப்பா உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனையாளர்கள் பங் கேற்றனர். அப்போது போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் மாட் டிறைச்சி பிரியாணி மற்றும் வறுவலை சாப்பிட்டனர். பொது மக்களுக்கும் வழங்கினர்.

இதற்கு பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளும், பல்வேறு கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பொது இடத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டு, இந்துக்களின் மனதை புண்படுத்திய கிரீஷ் கர்னாட், மரளுசித்தப்பா ஆகியோர் மீது வழக்கு தொடரப் போவதாக மிரட்டியுள்ளன.

இந்நிலையில் பாஜக முன் னாள் சட்ட அமைச்சர் சுரேஷ் குமார், “கிரீஷ் கர்னாட் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் பாஜகவின் அடுத்தக்கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்போம்'' என்றார். இதுகுறித்து கிரீஷ் கர்னாட்,

`தி இந்து'விடம் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது நகைப்புக்குரியது. தற்போது அதே சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. பாஜக அரசின் இந்த செயல்பாடுகளால் மாட் டிறைச்சி உண்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாட் டிறைச்சி உண்பது தனி நபரின் உரிமை. அதை அரசே தடுப்பது ஜனநாய கத்துக்கு எதிரானது. பொதுமக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு எப்படி தீர்மானிக்க முடியும்? பெங்களூருவில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாஜகவின் எதிர்ப்புக்கும், மிரட்டலுக்கும் பயந்து மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப் படாது” என்றார்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது, “சுதந்திர நாட்டில் ஒருவருக்கு விருப்பமான உணவை உண்பதற்கு முழு உரிமை உள்ளது. சைவம், அசைவம் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதில் அரசு தலையிட முடியாது” என்றார்.

Pin It