உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்து கிருட்டிணன் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிரப்பக் கூடிய இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நீட்  தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்ச் 19 பகல் 12 மணியளவில் நடந்தது. மத்திய கைலாஷ் அருகே மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டபோது காவல்துறை கைது  செய்தது. பாரி சிவக்குமார் தலைமையில் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தக்கலையில்  : குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. கழக மாவட்டச் செயலாளர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். நீதி அரசர் (தலைவர்.பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,), போஸ் (சமூக ஆர்வலர்), முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்), இரமேஸ், இராஜேஸ் குமார், இராதாகிருஷ்ணன், (ஆஊருஞ(ஐ), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் உரையாற்றினர். மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது.

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, கோவைத் தோழர் பாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை ஏற்க, ம.தி.மு.க.நகரச் செயலாளர் நா.ஜோதிபாசு,   சி.பி.ஐ . எஸ். மணிமாறன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பாலகிருஷ்னன் ஆகியோரது கண்டன உரையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,  மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி, ஈரோடு மாவட்ட செயவாளர் வேணுகோபால் மற்றும் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் கண்டன உரையாற்றினர்.

திருப்பூர் தோழர் சங்கீதா நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர்.

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

இஸ்லாம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை தி.வி.க. தோழர்  பரூக் ,  ஈரோடு மாவட்டம் (தெற்கு) சார்பாக 19.03.2017 அன்று மாலை 7 மணிக்கு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ப.குமார் தலைமை ஏற்க, மறைந்த தோழருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காவை இளவரசன், கோபி வேலுச்சாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர். தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் :   

நாள் : 10.5.2017 முதல் 14.5.2017  (5 நாள்கள்)      இடம் : பெங்களூர் .

கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை, கட்டுரை புனைதல், அறிவியல் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள்.

10 வயது முதல் 15 வயது வரை. குறைந்த பட்ச பங்களிப்பு : குழந்தை 1-க்கு : ரூ.1500/- ரூ.1500/= செலுத்த இயலாதவர்கள் ரூ.1000/-= செலுத்தலாம்.

முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய

எண் : 98424 48175

மதுரையில் இரயில் மறியல்

தமிழகத்தை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை நிறுத்தக் கோரியும் சிங்கள அரசின் தமிழக மீனவர் படுகொலையைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் இரயில் மறியல் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா. மணி கண்டன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இதில் எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் அபுதாகிர், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் காசு.நாகராசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிட்டு ராசா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், கோபால் ராமகிருஷ்ணன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

பெரியார் நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆளும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறே இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 22 தோழர்கள் காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டனர். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Pin It