2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம்.

ஜனவரி: கல்வி - வேலை வாய்ப்பில் - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் - தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர்.

பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் கழகத் தோழர்கள் போராட்டங்களை நடத்தினர். காஞ்சிபுரம் சங்கரமடம் முற்றுகைப் போராட்டத்தில் சென்னை மற்றும் காஞ்சி மாவட்டக் கழகத் தோழர்கள் பங்கேற்று கைதானார்கள். திருப்பூர்-புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ இதழுக்காக தனிக் கடை ஒன்றை திருப்பூர் கழகத் தோழர்கள் எடுத்து, கழக ஏடுகளை - நூல்களை மக்களிடம் கொண்டு சென்றனர்.

பிப்ரவரி: சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் பா.ஜ.க.வின் ‘மதவாத ரத யாத்திரை’ அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து பல்கலைக்கழக வளாகம் அருகே கறுப்புக் கொடி காட்டி கழகத் தோழர்கள் கைதா னார்கள்.

தமிழகத்திலிருந்து உயர் மருத்துவப் பட்டப் படிப்பு படிக்கச் செல்லும் மாணவர்கள் மர்மமான முறையில் மரணிப்பது குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மார்ச்: கோவையில் மதவெறிக்கு பலியான கழகத் தோழர் பாரூக் நினைவு நாளில் குருதிக் கொடை முகாமும் மதவெறிக்கு எதிரான கருத்தரங்கமும் கோவையில் கழகம் நடத்தி யது.

திருப்பூரில் மகளிர் தினத்தையொட்டி மாவட்டக் கழக சார்பில் மகளிர் மாநாடும் பேரணியும் எழுச்சியுடன் நடந்தது.

திரிபுராவில் லெனின் சிலையை பா.ஜ.க. மதவெறியர்கள் தகர்த்ததுபோல் தமிழ்நாட் டிலும் பெரியார் சிலையைத் தகர்க்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட பார்ப்பனர் எச். ராஜாவை எதிர்த்து கழகம் கொதித்தெழுந்தது. கன்னியாகுமரி, ஆனை மலை, சென்னை, மயிலாடுதுறை, நாமக்கல், பேராவூரணி, சேலம், சங்கராபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் எச்.ராஜாவின் உருவப் பொம்மையை எரித்து கழக சார்பில் பேராட்டங்கள் நடத்தப்பட்டன. குடியாத்தம், புதுக்கோட்டையில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து, மயிலாப் பூரில் பார்ப்பனர்கள் பூணூலை அறுத்து சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் காவல்துறையில் சரணடைந்தனர். நங்கவள்ளி கழகத் தோழர்கள் கிருஷ்ணன், மனோஜ் குமார், ராசேந்திரன் , கோபி சங்கரமடத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாடு துறையில் கழகத் தோழர்கள் இராம ரதத்தை எதிர்த்து ‘இராமன்’ படத்தை செருப்பால் அடித்து கைது செய்யப்பட்டனர். திருப்பூர், தூத்துக்குடியில் எச். ராஜாவைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, எச். ராஜாவின் கருத்து - தமிழக பா.ஜ.க.வின் கருத்து அல்ல என்று கூறினார். கடைசியில் தனக்குத் தெரியாமலேயே தனது முகநூலை நிர்வகிப்பவரால் அப்படி பதிவிடப்பட்டது என்று எச்.ராஜா பின் வாங்கினார்.

வடமாநிலத்திலிருந்து அயோத்தியில் இராமன் கோயிலைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இராமன் ரதயாத்திரை, தமிழகத்துக்குள் செங்கோட்டை வழியாக நுழைய விருக்கும் சேதி அறிந்து ‘காவி பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பு’ ஒன்று உருவாக்கப்பட்டு கழகமும் அதில் இடம் பெற்றது. செங்கோட்டையில் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர்களுடன் கழகத் தோழர்களும் ரதயாத்திரையை மறிக்கச் சென்றபோது கைதானார்கள்.

மத்திய - மாநில அரசுப் பதவிகளை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே வழங்கக் கோரி சென்னையில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

பறிபோகும் தமிழக உரிமைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் பரப்புரை இயக்கம் நடத்தப்பட்டது.

ஏப்ரல் : காவிரிப் பிரச்சினையில் நடுவண் அரசு, தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதை எதிர்த்து தமிழகம் முழுதும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின. சென்னையில் வருமான வரித் துறை அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தி கழகத் தோழர்கள் கைதானார்கள். சென்னையில் நடக்கத் திட்டமிட்ட அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி நடந்த போராட்டத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மந்தைவெளி தொடர்வண்டி நிலையத்தை தோழர்கள் முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்ட கழகத் தோழர்கள் அஞ்சலகத்தை முற்றுகை யிட்டனர். கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை, பொள்ளாச்சி, திருப்பூரில் இரயில் மறியல் செய்து தோழர்கள் கைதானார்கள். நங்கவள்ளியில் தோழர்கள் ‘தினமலர்’ பார்ப்பன நாளேட்டுக்கு தீ வைத்தனர்.

காவிரியில் நடுவண் அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நடத்திய நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் பங்கேற்று கைதானார்கள்.

கோபி மற்றும் சென்னையில் கழக சார்பில் மகளிர் மாநாடுகள் எழுச்சியுடன் நடந்தன.

சென்னையில் தமிழர் தன்னுரிமை-தன்மான மீட்பு மாநாடு, ‘நிலம் பாழ்; நீர் மறுப்பு; நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் சென்னை மண்டல மாநாடாக எழுச்சியுடன் நடந்தது.

காஷ்மீரில் இஸ்லாமிய பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ‘ஆசிஃபா’ என்ற சிறுமியை மதவெறியர்கள் பாலுறவு சித்திர வதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததைக் கண்டித்து, சென்னை, மயிலாடுதுறை, பள்ளிப் பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

மே : கல்வி - வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமை கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, சென்னையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

‘பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி’ மே 9ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் - பரப்புரை இயக்கத்தை கழகம் நடத்தியது. மே 12இல் கூடுவாஞ் சேரியில் பயண நிறைவு விழா மாநாடு சிறப்புடன் நடந்தது.

பெண் ஊடகவியலாளர்களை ஒழுக்கக் கேடானவர்கள் என்று முகநூலில் பதிவிட்ட பா.ஜ.க. பார்ப்பன நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிராக அவரைக் கைது செய்யக் கோரி சென்னை மாநகர ஆணையகத்தை முற்றுகை யிடச் சென்ற சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, சென்னை, பள்ளிப் பாளையம், பேராவூரணி, மார்த்தாண்டம் உள்ளிட்ட ஊர்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

விழுப்புரம் மாவட்டம் கடுவனூரில் குழந்தைகளுக்கான பழகுமுகாம் நடத்தப் பட்டது.

ஜூன் : ஏற்காட்டில் கழக சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் தலித் மக்கள் மீது கொலை வன்முறைத் தாக்குதல் நடந்தது. கோபி மற்றும் நாமக்கல் மாவட்டக் கழகத் தோழர்கள் கச்சநத்தம் கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஜூலை : வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த உச்சநீதி மன்றத் தீர்ப்பைக் கண்டித்து கூட்டமைப்பு சார்பில் நடந்த இரயில் மறியல் போராட் டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது.

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் காஞ்சி மக்கள் மன்றத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாமும் பொள்ளாச்சியில் கழக சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாமும் நடந்தது.

ஆகஸ்ட் : கழக சார்பில் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் ஆக. 20இல் தொடங்கியது. 6 பரப்புரைக் குழுக்கள் - 6 முனைகளிலிருந்து 140 ஊர்களில் 7 நாட்கள் பரப்புரை செய்தன. ஆக. 26இல் பெரம்பலூரில் பயண நிறைவு விழா மாநாடு எழுச்சியுடன் நடந்தது.

செப்டம்பர் : விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு பதிலடியாக பெரியார் கைத்தடி ஊர்வலங்களை சென்னை - ஈரோட்டில் நடத்தி தோழர்கள் கைதானார்கள்.

அக்டோபர் : அக்.13இல் திருப்பூரில் கழகத் தலைமைக் குழுவும், அடுத்த நாள் அக்.14இல் திருப்பூரில் கழக செயலவையும் கூடியது. கழகத்தில் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் கழக ஏடுகளுக்கு சந்தா திரட்டும் இயக்கங்கள் மாவட்டந்தோறும் கலந்துரையாடல் கூட்டங் களுக்கு திட்டமிடப்பட்டன. மாவட்டந்தோறும் கலந்துரையாடல் கூட்டங்களும் - புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் சந்தா சேர்ப்பு இயக்கங்களும் நடந்து வருகின்றன. கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டதற்கு காவலாண்டியூர் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமிர் பேசிய அதிகாரி, பின்னர் பணிந்து இனி ஆயுத பூஜ போட மாட்டோம் என எழுத்து மூலம் தெரிவித்தார்.

திருப்பூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘இந்துத்துவா’ பயிற்சிக்கு அனுமதித்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி திருப்பூரில் தடையை மீறி போராட்டம் நடத்தி கழகத்தினர் கைதானார்கள்.

நவம்பர் : கொளத்தூர் அருகே புலியூரிலும், சென்னையிலும் மாவீரர் நாள் நினைவு கூறப்பட்டது.

டிசம்பர் : டிசம்பர் 23இல் வரலாறு படைத்த 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்ற கருஞ்சட்டைப் பேரணியில் பல்லாயிரக்கணக் கில் கழகத் தோழர்கள் தனிப் பேருந்துகளில் திரண்டு வந்து பங்கேற்று தனி முத்திரை பதித்தனர்.

Pin It