ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கான கீழ்க்கண்ட பரிசுகளைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வழங்கி வருகிறது. 2009-ஆம் ஆண்டுக்கான பரிசுகளுக்கான பரிசீலனைக்கு நூல்கள் / குறுந்தகடுகளை வரவேற்கிறோம். ஒவ்வொரு புத்தகமும் நான்கு பிரதிகள் அனுப்ப வேண்டுகிறோம்- பரிசு பெறாத நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. குறுந்தகடுகள் சி.டி. அல்லது டி.வி.டி. வடிவில் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒருவரே எத்தனை நூல்கள் / தகடுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது. முடிவுகள் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30-4-2010.

அனுப்ப வேண்டிய முகவரி :
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், மாநிலக்குழு,
28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை, சென்னை - 600 018


1. நாவலாசிரியர் கு.சின்னப்பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி - குப்பண்ணன் நினைவுப்பரிசு - சிறந்த நாவலுக்காக ரூ.5000/-
2. புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு - சிறந்த சிறுகதை நூலுக்கு ரூ.4,000/-
3. குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கு - ரூ.4000/-
4. அமரர் சேதுராமன் - அகிலா நினைவுப்பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ.2,500/-
5. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு - ரூ.2000/-
6. அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு சிறந்த கவிதை நூலுக்கு ரூ.2000/-
7. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது- சிறந்த இரு குறும்படங்கள் மற்றும் சிறந்த இரு ஆவணப்படங்களுக்கு தலா ரூ.2,500/-
8. அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு - ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு (கதை, கவிதை, நாவல், ஆய்வு, கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்) - ரூ.10,000/-


அன்புடன்,
ச.தமிழ்ச்செல்வன்
பொதுச் செயலாளர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு

Pin It