? இந்தியாவில் ஜாதியம், வகுப்புவாதத்துக்கு இடமில்லை. - மோடி ‘சுதந்திர’ நாள் பேச்சு

!அப்போ, ஜாதியை ஆதரிக்கும் அமித்ஷாவையும் குருமூர்த்தியையும் நாடு கடத்தப் போறீங்களா?

? ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்றார் பாரதியார். - ஜெயலலிதா பேச்சு

!மேடம், இது பாரதியார் பாட்டு அல்ல; ‘கருப்புப் பணம்’ சினிமாவுல கண்ணதாசன் எழுதி நடிச்ச பாட்டு!

? மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அம்மனை ஊஞ்சலில் ஆட்டி, அர்ச்சகர் தாலாட்டு பாடினார். - ‘தினமணி’ செய்தி

!அம்மனுக்கு காது கேட்காதுங்குற துணிச்சல்... தாலாட்டுப் பாட அர்ச்சகர்கள் எல்லாம் கிளம்பீட்டீங்க.

?தில்லை நடராஜன் கோபுரத்தில் தீட்சதர்கள் தேசியக் கொடி ஏற்றினர். - செய்தி

!பரவாயில்லையே! ‘சிவபெருமானால்’ நேரடியாக பூமியில் குதிச்சதா, உச்சநீதிமன்றத்துல மனு போட்டவங்க, இப்ப இந்தியாவின் ‘குடிமகனாக’ மாறிட்டீங்களா?

? வெளியுறவுத் துறையில் சமஸ்கிருதத்துக்கு தனி அதிகாரி. – செய்தி

!அப்பாடா! இனிமே ‘லலித்மோடி’ பிரச்சினைகள் வராது. சமஸ்கிருதத்துலேயே வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு கடிதம் எழுதிட்டா, எவனுக்கு, எது புரியப் போவுது?

? பொதுத் துறை நிறுவனமான ‘பி.எஸ்.என்.எல்.’ கடந்த நிதியாண்டில் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. - செய்தி

!மிச்சம் மீதியிருக்கும் வாடிக்கையாளர்களையும் விரட்டி அடிக்கும் இலக்கை எட்டும் வரை, பி.எஸ்.என்எல். சேவையை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது!

? கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு உதவிட ஜெர்மன் ஆஸ்திரேலியா விருப்பம். - செய்தி

!‘புனித’ கங்கையைக் காப்பாற்ற ஏன் கிறிஸ்தவர்களை அழைக்கிறீங்க; இது ‘இந்து’ தர்மத்துக்கே இழுக்கு இல்லையா?

? சுதந்திர தின உரையை மோடி இந்தியில் பேசினார். – செய்தி

!இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்த பேச்செல்லாம் தேவையில்லைன்னு அவரே ‘தேசபக்தியோடு’ நல்ல முடிவுக்கு வந்துட்டாரு போல!

Pin It