சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இந்தியா தொடர்ந்து தந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதே சிதம்பரம், கடந்த பிப்.15 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் பேசியது மறந்துவிட்டதா?

“விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கீழே போடட்டும்; பிறகு வேண்டுமானால் போர் நிறுத்தம் செய்ய முயற்சிக்கலாம்” - என்று ஆணவத்தோடு பேசியவர் இதே சிதம்பரம் தான். இப்போது - ‘காக்காய் உட்கார பணம் பழம்’ விழுந்ததைப்போல் உலக நாடுகள் நிர்ப்பந்தத்துக்கு ராஜபக்சே நடத்த முன் வந்துள்ள நாடகத்தை, தமது சாதனையாக்கி, வாக்காளர்களை ஏமாற்றத் துடிக்கிறார்.

இந்தியாவின் துரோகத்தை தமிழர்களிடம் மறைக்க முடியாது!

 

Dr. V. Pandian
2009-04-21 06:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அரசியலின் முதல் பலி உண்மை. யாரை நம்புவது? மெத்தப் படித்தவர். டெல்லியிலும் வேட்டி கட்டி தனது தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக்காப்பவர். தமிழ்ப் பண்பாட்டின் முதன்மையான அங்கம் உண்மை ஆயிற்றே! அது தெரியாதா இவருக்கு?

சொந்த தொழிலில்லாமல் அரசியலில் ஈடுபட்டால் நேர்மையாக இருக்க முடியாது என்று, காமராசர் ஆட்சியைப்பற்றிப் பேசும்போது, இவரிடம் கொஞ்சம் நேர்மை இருக்கும் என்றிருந்தேன்.

எப்படிப் பேசுகின்றனர்! தன்மானத்தை இழந்து இவர்கள் பெறுவது என்ன?

எதற்காக இவர்களுக்கு பணமும் பதிவியும்? எவ்வளவு சேர்க்கப்போகிறார்கள்?

மிருகங்கள் கூட, பசியாறியபின், அருகில் விளையாடும் மான் குட்டிகளையும் ஒன்றும் செய்வதில்லை. தேவைக்குமேல் ஆசைகொள்விதுமில்லை, தேவையின்றி யாரையும் துன்பிப்பதுமில்லை.

பரிணாம வளர்ச்சியடைந்த மனிதன் எப்படி இருக்க வேண்டும்?

ஏன் இந்த அளவற்ற ஆசை?

சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு 'எதிர்கால அச்சம்'. அதைப் போக்க மாற்று வழிகளுண்டே! மலையளவு சேர்ப்பது அச்சத்தை மிகைப்படுத்தாதா? இது பகுத்தறிவா?

அச்சங்களையும், துன்பங்களையும், இன்பங்களையும் பகிர்ந்து வாழும், இலகுவான பொது உடைமை வாழ்க்கை இவர்களின் பகுத்தறிவுக்கு அற்பாற்பட்டதா?

ஏழைகளின் கோபம் இவர்களுக்கு 'தற்கால அச்சமாகத்' தெரியவில்லை! அதனால் தான் 'எதிர்கால அச்சத்திற்காக' இவர்கள் 'பேயாய்' அலைகிறார்கள்.

Pin It