வெளிநாடுகளில் மிகத் தீவிரமாக இயேசு கிறிஸ்துவை ஆராதித்த சமுதாயங்கள் தேவ மனிதர்கள் ஆலயங்களை விட்டு அவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டு தேவன் இல்லை என்று மறுதலிக்கிற ஒரு கூட்டமாக பெருமளவு பெருகிக் கொண்டிருக் கிறார்கள். வெளிநாடுகளில் அநேக தேவாலயங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அநேக தேவாலயங்கள் பரிதாப நிலையிலே மாறியிருக்கிறது. 

நம்முடைய தேசத்திலே நாம் தேவாலயங்களை கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெளிநாடுகளிலே விசேசமாய் மேற்கத்திய நாடுகளில் ஆலயங்கள் மூடப்பட்டிருக்கிற நிலை அதிகரித்துள்ளது.

Spain என்கிற நாட்டில் The Church of santa Barbara என்கிற ஒரு ஆலயம் மிக பிரம்மாண்டமாய் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இன்றைக்கு அந்த ஆலயம் மூடப்பட்டது மட்டுமல்ல அதே ஆலயம் இன்றைக்கு 'ஸ்கேட்டிங்' நடத்தும் அரங்கமாக ஆக மாறியுள்ளது. ஆலயத்துக்குள்ளேயே ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அதற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள்.

ஸ்காட்லாந்திலே கெல்வின்சைட் பெரிஷ் சர்ச் என்று ஒரு சபை மூடப்பட்டு இன்று அது நிகழ்ச்சி அரங்கமாகவும் இரவு விடுதியாகவும் மாறியிருக்கிறது. அதே ஆலயத்துக்குள்ளே குத்துச் சண்டை நிகழ்ச்சிகளை ஆலயத்துக்குள்ளேயே நடத்துகிறார்கள். சபைக்கு ஆட்கள் வருவதில்லை. 

இதே போல இங்கிலாந்து தேசத்தில் புனித நிக்கோலஸ் சர்ச் என்று சொல்லப்படுகிற ஒரு ஆலயம் மிக பிரம்மாண்டமாய் கட்டப்பட்டது. ஆனால் இந்த ஆலயத்துக்கு மக்கள் வராமல், அவர்கள் சபைக்கு வராமல் போய், சபையை நடத்த முடியாமல் கடைசியிலே ஒரு தனி நபர் அதனை வாங்கி தனது சொந்த வீடாக மாற்றி விட்டார். 

நெதர்லாந்து நாட்டில் டொமினிக்கள் என்ற ஆலயம் எழுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆலயம் மூடப்பட்டு அது புத்தகம் விற்கக்கூடிய கடையாக மாற்றப்பட் டுள்ளது.புத்தகம் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

பெனிசில்வேனியாவிலே புனித ஜான் பாப்டிஸ்ட் என்ற ஆலயம் கட்டப்பட்டது.  இன்றைக்கு இது மதுபானக் கடையாக மாறியுள்ளது. அதே ஆலயத்திற்குள்ளே மது பானத்தை விற்கிறார்கள்.

1960 ஆண்டு முதல் இங்கிலாந்து தேசத்திலே மாத்திரம் 10,000 திருச்சபைகள் மூடப்பட்டிருக்கிறதாம்.

 2020ஆம் ஆண்டு அடுத்த ஆண்டிற்குள்ளாக இன்னும் 4000 திருச்சபைகள் மூடப்படுமாம்.

இந்தியாவில் மட்டும்தான் இராமன் கோயில், கிருஷ்ணன் கோயில் என்று கட்டிக் கொண்டு அதை அரசியல் முதலீடாக்கி வருகிறார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It