சமீப காலமாக தில்லி அரசு  ‘பச்சை வேட்டை போர்ச் செயல்’ என்னும் ஒரு நடவடிக்கையை மேற் கொண்டு தண்டகாருண்யம் பகுதி மலையின மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதும், மாவோயிஸ்டுகள் எனப்படு வோர் இத்தாக்குதலை எதிர்த்து பதிலடி கொடுத்து வருவது மான செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதைப் படிக்கும் பலரும் பொதுவில் இது எங்கோ நடக்கும் ஒரு தாக்குதல், சண்டை என்பதாகக் கருதி அதை பல்வேறு செய்திகளுடன் ஒரு செய்தியாகப்  பாவிக்கும் நிலையே இருந்து வருகிறது இந் நிலையில் இந்த மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார்? அவர்கள் ஏன் அரசு இயந்திரத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்?  தில்லி அரசு ஏன்  அவர்களைத் தாக்கு கிறது அவர்கள் மீது இராணுவ நடவடிக் கைகளை மேற்கொள் கிறது இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி ஓரளவேனும் தெரி ந்திருக்க வேண்டியது மனித நேயப் பற்றாளர் களது கடமையாகிறது.

இப் புவிக்கோ ளின்  வளம் முழுவதும் வாழும் மக்கள் அனை வருக்கும் பொதுவாக இருந்தவரை பெரும் பாலும் மக்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை எந்த மோதலும் இல்லை  ஆனால் தனி யுடைமை தோன்றி இது எனது அது உனது என்கிற பாகுபாடு தோன்றி யதி லிருந்துதான் மக்க ளுக்குள் பிரச்சனை மோதல் எல்லாமும். இதையட்டி ஆதிக்க சக்திகளின் நலன்காக்க உருவானது  உருவாக்கப் பட்டதுதான் அரசும் அது சார்ந்த பொறியமை வுகளும். இப் பொறியமைவுகள் மக்களை அடக்கியாள முயல, இந்த அடக்கு முறையை எதிர்த்து மக்களும் போராடத் தொடங் கினார்கள். இப்படி ஆதிக்க அடக்கு முறைகளும் அதை எதிர்த்த மக்கள் போராட்டங்களுமே உலகெங்கும் வரலாறானது. அல்லது வரலாறு என்பதே இப்படிப்பட்ட போராட்டங்களின் பதிவுகளாயின இப்படிப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதிதான் தில்லி அரசின் ‘பச்சை வேட்டை போர்ச் செயலும்’ மாவோயிஸ்டுகளின் பதில் நடவடிக்கையும்.

இந்தியத் துனைக் கண்டத்தின் நடுப் பகுதில் பரவியுள்ள அடர் வனம் ‘தாண்ட காருண்யம்.’  ராமாயண இதிகாசத்தில் ராமன் 14 ஆண்டு காலம் வனவாசம் புரிந்ததாகக் குறிப்பிடப்படும் இடம் இது. ஆந்திரப் பிரதேசம், ஒரிசா. மத்தியப் பிரதேசம்,  சத்திஷ்கர் மகாராட்டிரம்  ஆகிய ஐந்து மாநிலப் பகுதிகளிலும் சுமார் 80,000 சதுர கி.மீ. பரப்பளவில் அடர்ந்து படர்ந்து விரிந்து அளப்பரிய இயற்கை கனிம வளங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் அற்புத பூமி இது. இந்தப் பகுதிகளில் காலம் காலமாக பல்வேறு பழங்குடி மலையின மக்கள்  இயற்கையோடு ஒன்றிய விவசாயத்தில் ஈடுபட்டும் மலைபடு பொருள்களைச் சேகரித்தும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  =

ஆனால் நாடுகளைப் பிடிக்கும், மண்ணையும் மக்களையும் ஆட்கொள்ளும், அடக்கியாளும் வெறியோடு படையெடுப்புகளை நடத்தி வந்த ஆதிக்க சக்திகள்  இம் மலை யினப் பகுதி மக்களையும் விட்டு வைக்கவில்லை அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வன வளங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். காலம் காலமாக இந்த மண்ணின் மைந்தர்களாய் வாழ்ந்து வந்த மலையின மக்கள் இக் கொள்ளையை எதிர்த்து போர்க்குரல் எழுப்பி யதோடு, பல தீரமிகு போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். பிற மன்னராட்சி, மற்றும் வெள்ளையாட்சிக் காலம் தொட்டே இப்படிப்பட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்ததற்கு வரலாற்றில் பல சான்றுகள் நிலவுகின்றன..

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாடெங்கும் வெடித்தெழுந்த போராட்டம் அதையட்டி பெறப்பட்டதாகச் சொல்லபபடும் ‘இந்திய சுதந்திரம்’  தங்கள் உரிமைக்காகப் போராடி வந்த மலையின மக்களை விடுவித்து மீட்டு, அவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்கு மாறாக, வெள்ளையன் விட்டுச் சென்ற கொள்ளையை இந்திய ஆளும் வர்க்கங்கள்  தொடரும் நோக்கில், வெள்ளையன் இருந்த ஆதிக்க இடத்தில் இந்திய ஆளும் வர்க்கங்கள்  அமரவே வழி வகுத்தது.  வெள்ளையன் மேற்கொண்ட அதே ஆதிக்க அடக்குமுறை நடவடிக்கைகளையே இவர்களும் மேற்கொண்டார்கள்.

ஆதிக்க சக்திகளுக்கு வனப் பகுதிகளின் மேல் நாட்டம் செல்வது ஏன்? வனப் பகுதிகளில் சால், தேக்கு, மூங்கில் முதலான மதிப்பு மிக்க மரங்கள் இருக்கின்றன. நவீன தொழில் கொள்ளையர்களுக்கு உகந்த இரும்பு, மங்கனீசு, நிலக்கரி, பாக்சைட், தங்கம், வைரம், டாலாமைட்ஸ், குவார்ட்ஸ் முதலான உலோக வளங்கள் உள்ளன. வேட்டையாடி ருசிக்க விதம் விதமான பறவைகள் விலங்குகள் இருக்கின்றன. உழைப்புச் சுரண்டலுக்கு அப்பாவி மக்கள் இருக்கிறார்கள்.பாலுறவுப் பசிக்கு இளம் பெண்கள் இருக்கிறார்கள்.எனவே இவ்வளங்களைச் சூறையாடவும் உல்லாச வாழ்க்கை வாழவுமே ஆதிக்க சக்திகள் இதன் மீது கண் வைக்கின்றன. இதற்கு அவ்வப் பகுதி மலையின மக்களும் தடையாயிருக்கவே அம் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. அவர்களை அடக்கி ஒடுக்கி அடிபணிய வைக்க முயல்கின்றன. அல்லது அம் மக்களை அப்பகுதியை விட்டே துரத்த முயல்கின்றன. இப்படிப்பட்ட முயற்சிகளின் விளைவு தான் தில்லி அரசின் பச்சை வேட்டை போர்ச் செயல். இவற்றை எதிர்த்த மக்கள் போராட்டங் களின் நடவடிக்கைகள் தான் மாவோயிஸ்டுகளின் தாக் குதல்கள்.மலையின மக்கள் மீதான ஆதிக்க சக்திக ளின் கொள்ளை முதன்முதலில் நாகரிகம்,முன்னேற்றம் என் பதன் பேரால், மைய நீரோட்ட வாழ்க்கைக்கு அவர்களைக் கொண்டு வருவது என்பதன் பேரால் நிகழ்த்தப் பெற்றது.

நகர்ப் புறங்களிலிருந்து இவ்வனப் பகுதிகளுக்கு  தார்ச்சாலைகள், இருப்புப் பாதைகள் அமைக்கப் பட்டன. இப்பகுதியின் ஆறுகளில் அணைக் கட்டுகள் கட்டப் பட்டன. காடுகளை அழித்து தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ‘வளர்ச்சித் திட் டங்கள்’ மற்றும் இது சார்ந்த செயல்பாடுகள்  மூலமே மலையின மக்கள் மீதான தாக்குதல் தொடுக்கப்படுகின்றன.

பொதுவாக வனப் பகுதி மக்கள் மீதான, கொள் ளைகள், தாக்குதல்களை கீழ்க்கண்டவாறு வகைப் படுத்தலாம்.

1. வனப்பகுதி விளைபொருள்களை வணிகர்கள் அடிமாட்டு விலைக்கு மலிவாக வாங்கிச் செல்லுதல்.

2. வனப்பகுதி மரங்களை அப்பகுதி மக்களை வைத்தே மிகக்குறைவான கூலியைத்  தந்து விருப்பம் போல் வெட்டிச் செல்லுதல்.

3. தொழிற்சாலைகளோ, அணைக்கட்டுகளோ கட்டுவதன் பேரால் லட்சக் கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தல் அவர்களது வாழிடங்கள் ஆக்கிரமித்தல்.

4. இயற்கைக் கனிம வளங்களை வெட்டியெடுக்க சுரங்கங்கள் அமைத்து மக்களை முற்றாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்துதல்.

5. வனப் பகுதிகளில் மக்களுக்குள்ள பாரம்பரிய உரிமைகளை அப்பகுதியிலான அவர்களது சுதந்திரத்தை மறுத்தல். மக்களின் ஒவ்வொரு அசைவையும்   கண்காணித்தல். கட்டுப்படுத்தல். அவற்றைக் குற்றச் செயலாக்குதல்

6. மக்களின் முன்னேற்றத்துக்கு நிதியுதவி அளிப்பதாக கடன் தந்து கந்து வட்டி, லேவா தேவிக்காரர் கள் கொள்ளையடித்தல்.

7. நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதாக வரும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் முடிந்த மட்டும் வாய்ப்புள்ள வழிகளிலெல்லாம்  சுரண்டுதல்.

8.  ஆதிக்க சக்திகளுடன் கூட்டு சேர்ந்து அதற்குத் துணைபோய் சொந்த இன மக்களையே காட்டிக் கொடுக் கும் உள்ளூர் தலைமைகள், நாட்டாமைகள் செய்யும் அடாவடிகள்.

9.  இவை அனைத்திலுமே மக்களுக்கு எதிராகவும், ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் காவல் துறையின் நடவடிக்கைகள். அதன் அத்து மீறல்கள்.

10. எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது பயங்கரவாதத்தை, வன்முறையை ஒடுக்குகிறோம்  என்கிற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிறப்புக்  காவல் மற்றும் துணை ராணுவப் படைகளின் வன்முறைகள்.

இவ்வனைத்துக் கொடுமைகளுக்கும் மத்தியிலேயே  தண்டகாருண்ய வனப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

இக்கொடுமைகளில் பல சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்கள் மீதும் தொடுக்கப்படுபவை. அம்மக்களும் அனுபவித்து  வருபவை தான் என்றாலும், சமவெளிப் பகுதி களில் போக்கு வரத்து வசதிகள், தகவல் தொடர்பு மற்றும் ஊடக வசதிகள், உடனுக்குடன் செய்திகளை உலகறியச் செய்யும் வாய்ப்போடு இருப்பதால், இப் பகுதிகளின் இதன் தன்மை குறைவு, அளவும் குறைவு. ஆனால் இப்படிப்பட்ட வசதிகள் எதுவும்  அற்ற வனப்பகுதிகளில்,அதுவும் போர்க்களமாகவே மாற்றப்பட்டுவிட்ட மலைப் பகுதிகளில்  என்ன நடைபெறுகிறது என்றே வெளியுலகு அறிய முடியாத சூழலில்  பகுதி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இப்படிப் பட்ட கொடுமைகள் எந்த அளவுக்கு கேட்பாரற்று நிகழும் என்பதை எண்ணிப் பார்க்க இது விளங்கும்.  இப்படிப்பட்ட பின்னணியில்தான் அம்மக்களைக் காக்கும்  ஒரே போர்ப்படையாக மாவோயிஸ்டுகள் இருந்து வருகின்றனர்.

இவ் வனப்பகுதி மக்களின் உரிமைப் போராட்டம் பல நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தீரமிகு தொடர் போராட்டமே என்ற போதிலும் தற்போது, இதன் மீதான அரசின் அடக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதன் ஒரே காரணம். இப்பகுதிகளில் பல்லாண்டுகளுக்குக் கிடைக்கக் கூடிய இலட்சக் கணக்கான டன் பாக்சைட், டாலமைட், வெள்ளீய, இரும்புத் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவ்வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு தில்லி அரசு வடநாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகளோடு சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதுதான்.அந்தப் புரிந் துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் தொழில் நிறுவனங்கள் இவ்வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லவும் இவ்வனப்பகுதி மக்கள் தடையாயிருக்கிறார்கள் என்பதுதான். எனவே இப்பகுதி மக்களை இங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்பதற்காகவே தில்லி அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.வெறுங்கையோடு உள்ள மக்களானால் உள்ளூர் காவல் படையை வைத்து விரட்டி விடலாம் இங்கு  மக்கள் ஆயுதம் ஏந்திய போராளி களாய் இருப்பதனால் அரசு ராணுவ நடவடிக்கையை மேற் கொண்டுள்ளது.அதாவது சொந்தக்குடிமக்கள் மீதே போர் தொடுத்துள்ளது

இங்கே சிலருக்கு ஒரு கேள்வி எழலாம் நாடு, முன்னேற்றம் வளர்ச்சி என்று வந்தால் சிலவற்றை இழக் கத்தான் வேண்டியிருக்கும்! இதற்கு அவ்வனப்பகுதி மக்கள் ஒத்துழைப்பதுதானே நியாயம் எனலாம்.

ஆனால் இது நியாயம் அல்ல! அநியாயம் என்பதைப் புரிந்து கொள்ள நாம் வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். முதலாவதாக நாடு, முன்னேற்றம் வளர்ச்சி என்பதெல்லாம் உண்மையில் யாருக்கு, அந்த மக்களுக்கா. அல்லது அம்மக்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கா என்பதை, இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு என்ன பலன் என்பதை நாம் யோசிக்க வேண்டும். பலன் எதுவுமில்லை என்பது மட்டுமல்ல. பாதங்கள் பல. யாரோ சிலர் பலன் பெற இந்த மக்கள் ஏன் இந்த பாதங்களை அனுபவிக்க வேண்டும்.

அடுத்து காலம் காலமாக அம் மலைப்பகுதியில் வனப்பகுதிகளில் வாழும் தொன்மை மிக்க அப்பழங்குடி மக்களை. அவ்வப்போது மாறும் ஆதிக்கம், அதிகாரம் இவற்றுக்கு உட்பட்டு. அவர்கள் சொல்படி, அவர்கள் கட் டுப்பாட்டின் கீழ்தான் வாழ வேண்டும் என்பது என்ன நியாயம்? அவர்களது சுதந்திரத்தை உரிமைகளை, உடைமை களைப் பறிக்க மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அந்த அதிகாரத்தை மற்றவர்களுக்கு யார் தந்தது.அவ்வப் போது மாறும் அதிகாரங்களுக்கெல்லாம் உட்பட்டு அந்தந்த கால ஆதிக்க சக்திகளின் விருப்பத்துக்கு இவர்கள் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஏதோ ஒரு சிறு பகுதியில், சிறுபான்மை மக்களுக்குத் தான் பாதிப்பு என்றால் - அது கூடத்தவறுதான் என்றாலும்-  பரவாயில்லை கொஞ்சப் பேர்தானே என்று அவர்களுக்கு மட்டும்  மறுவாழ்வுக்கு வாய்ப்பளித்து அத்திட்டங்களை ஏற்க வைக்கலாம் ஆனால் அரசின், பெரு முதலாளிகளின் மாத்  திட்டங்கள், அதாவது மெகாத் திட்டங்களால் ஆயி ரக் கணக்கான ஹெக்டேர் காட்டு நிலங்கள் அழிக்கப் பட்டு பல இலட்சக் கணக்கான மக்கள் அனாதைகள் ஆக்கப்படு வார்கள் இந்தக் கொடுமையும் இந்த ஒரு தலைமுறை யினரோடு போவதல்ல வன வளங்கள் அழிக்கப்படுவதும் தொழிற்சாலைகள் சுரங்கங்கள் நிறுவப்படுவதும் முற்றாக சுற்றுச் சூழலையே நாசப்படுத்தி பகுதியே வேதியல் கழிவு கள் மயமாக ஆக்கப்படுவதுடன் அம்மக்களது வாழ்க்கை பண்பாடு பழக்க வழக்கம் இவை அனைன்ததுமே முற்றறாக அழிக்கப்பட்டு நவீன நடுத்தட்டு மேல்தட்டு  மக்களின் ஆதிக்கத்திற்கு அவர்களை அடிமைப்படுத்தி விடும்.

இதில் யாரோ  சிலபேர் கொழுக்க இத்தனை கொடு மைகளையும் இம்மக்கள் ஏன் அனுபவிக்க வேண்டும் அவர்கள் ஏன் இந்தக் கொடுமைகளை ஏற்க வேண்டும்  என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்வியிலிருந்து எழுந்ததே இவ்வனப் பகுதி மக்களின் போராட்டம்.

ஆனால் இவ்வனப் பகுதி மக்களின் நியாயமான போராட்டத்தை ஏற்க மறுக்கும் அரசு இதை ஒடுக்கமூர்க்கத் தனமான பல்வேறு வழிகளிலும் முயன்று வருகிறது உள்ளு£ர் காவல் துறையைக் கொண்டு அவர்களை அடக்க முடியாது. என்பதை உணர்ந்து மத்திய ரிசர்வ் காவல் படையை, துணை இராணுவப் படையைக் கொண்டு அவர்களை ஒடுக்க முயன்று வருகிது. இத்துடன் மலைவாழ் பகுதி மக்களி லேயே ஆதிக்கத்துக்கு தொண்டு புரியும் அடி வருடிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கொண்டே ‘ஜன் ஜாக்ரண்’ ‘சல்வா ஜுடும்’ போன்ற கூலிப் படைகளை உருவாக்கி போராடும் மக்களை அடையாளம் கண்டு ஒடுக்கவும் கொன்று குவிக்கவும், அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவவும் பயன்படுத்தி வருகிறது. போராளிகளை ஒடுக்க விமானத்தாக்குதல் நடத்த அரசு கட்டளையிட்டு அப்படி தாக்குதல் நடத்தினால் அப்பாவி  மக்கள் பலர் பலியாக நேரிடும் என்று விமானப் படை அதிகாரிகள் சொல்ல. சொந்த நாட்டுக்கு மக்களே அழிந்தாலும் பரவாயல்லை அம்  மக்களை வேரறுத்து அப் பகுதியையே வசப்படுத்தவும் சூறையாடவும் விமானத் தாக்குதல் நடத்த வற்புறுத்தி வருகிறது. போராளிகள் மீதான வேட்டை என்கிற பெயரில் அப்£வி மக்களைக் கொன்றழிக்கத் திட்டம் தீட்டி பொது மக்களிடம் அதற்கான சாதகமான மனநிலையைக் கட்ட மைக்க அனைத்து வழிகளையம் கையாண்டு வருகிறது. இதற் காக ‘மாவோ யிஸ்டுகள்தான்’ உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்’ என்று பொய்யுரை   பரப்பி வருகிறது.

உண்மையில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் டாடா, பிர்லா, அம்பானி, ருய்யா வகையறாக்களே இவர்கள் தான் தங்கள் ஆதிக்க நலனுக்காக நாட்டு மக்களையும்  நாட்டு வளங்களையும் சூறையாட முயன்று  வருகின்றனர். இயற்கை வளங்களைக் கொள்ளை யடித்து மாசுபடுத்தி அப்பகுதியை சுடுகாடாக்க முயன்று வருகின்றனர் இப்படி நாட்டு மக்களுக்கும் நாட்டு வளத் துக்கும் இவர்கள் தான் பெரும் அச்சுறுத்தலாய் இருந்து வருகின்றனர்.

எனவே  இந்தச் சூறையாடலை எதிர்த்து நாட்டு மக்களையும் நாட்டு வளங்களையும் பாதுகாக்கத்தான் மாவேயிஸ்டுகள் மக்கள் ஆதரவுடன் போராடி வருகின் றனர் நிஜத்தில் சொன்னால் உண்மையான நாட்டுப்பற்றா ளர்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பாளர்கள் மாவோயிஸ் டுகளே. இந்தப் பற்றின் காரணமாகத்தான். இந்த மண் ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கா கத்தான் அவர்களை தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகிறார்கள். இதனால் தான் தங்களுக்கான ஒரே பாதுகாப்பாக, தங்களுக்காக உயிரையும் தரச் சித்தமாக இருப்பவர்கள் மாவோயிஸ்டுகள் ஒருவர் மட்டுமே என்ப தனால்தான் மக்களும் பல்வேறு அடக்கு முறை களுக்கும் மத்தியில் அவர்களுக்கு ஆதரளிவளித்து வருகிறார்கள்.

மாவோயிஸ்டுகள் என்பவர்கள் ஏதோ ஆகாயத்தி லிருந்து குதித்து வந்த அன்னிய தேசத்தவர்களோ அலலது அதிசயப் பிறவிகளோஅல்லர். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.இந்த மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்தவர்கள் மக்கள் வேறு மாவோயிஸ்டுகள் வேறு அல்ல இதனால் தான் இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க அவர்கள் போராடி வருகிறார்கள்.

எனவே இது எங்கோ நடக்கும் போராட்டம் தானே என்று நாம் வாளாயிருந்து விடமுடியாது. அம் மக்களின் போராட்டத்தையும் அதன் நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். சொந்த நாட்டு வளங்களையே உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்த்து சொந்த நாட்டு மக்களையே பலியாக்கும், கொன்றொழிக்க முயலும் தில்லி அரசையும் அதன் ஆதிக்க நடவடிக்கையையும் அம்பலப்படுத்த வேண்டும்.

இந்த உரிமைப் போராட்டம் இன்று எங்கோ வட மாநிலங்களில் தண்டகாருண்ய வனப்பகுதியில் நிகழலாம்நாளைத் தமிழக மக்கள் விழித்தெழும் போது, தமிழகத்திலும் இது போன்ற உரிமைப் போராட்டங்கள் எழலாம். தில்லி அரசும் தமிழக அரசும் அப்போராட்டங்களின் மீது அடக்கு முறையை ஏவலாம். நேற்றைய பஞ்சாப் போல, இன்றைய காஷமீர் போல நாளை தமிழகத்தையும் ஆக்க முயலலாம்

இவற்றைச் சந்திக்க. எதிர் கொள்ள நாம் இப்போது முதலே விழிப்போடு இருக்கவேண்டும். உரிமைப் போராட்டம் எங்கே நடந்தாலும் அதை ஆதரிக்கவும், அடக்கு முறை எங்கே எந்த வடிவில் நிலவினாலும் அதை எதிர்க்கவும்  நாம் அணியமாக வேண்டும்.

இறுதியாக ஒன்று. எல்லாம் சரிதான் ஆனால் மாவோயிஸ்டுகள் என்பவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்களே, குண்டு வைத்தும் தண்டவாளங்களைத் தகர்த்தும் அப்பாவி மக்கள் பலரைக் கொன்று வருகிறார் களே இதெல்லாம் நியாயமா என்று சிலர் கேட்கலாம்.

நிச்சயமாக நியாயமில்லைதான். புரட்சியின் பேராலோ, போராட்டத்தின் பேராலோ, அல்லது வேறு எந்த கொள்கை கோட்பாட்டின் பேராலோ அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அது யார் கொன்றாலும், ஏற்க முடியாது. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது  உறுதி யோடு எதிர்க்கவேண்டியது. என்றாலும் இத்துடன் நாம் வேறு சிலவற்றையும் சேர்த்து சிந்திக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் சிலவற்றுள் தங்களுக்குப் பங்கில்லை என மாவோயிஸ்டுகள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.சிலவற்றுக்கு விளக்கம் தந்திருக் கிறார்கள்.என்ன விளக்கம் தந்தாலும் அப்பாவி மக்கள் உயிர்ப் பலியாவது என்பதை எந்த சூழலிலும் ஏற்க முடியாது. ஆனால் அதே வேளை ஆட்சியாளர்களின் சூழ்ச் சிகளையும் நாம் புறக்கணித்து விட முடியாது.ஆதிக்கங்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள எப்படிப்பட்ட கொடிய  வஞ்சகமும் சூழ்ச்சியும் மிக்க காரியங்களிலும் இறங்க வழிகாட்டும் அர்த்த சாஸ்திர வழி வந்த தில்லி ஆட்சியாளர்கள், மாவோயிஸ்டுகள் பற்றி மக்கள் மத்தியில் அவப் பெயரை ஏற்படுத்த எப்படிப்பட்ட இழி செயலிலும் இறங்குவார்கள் என்பதையும் நாம் கவனத் தில் கொள்ள வேண்டும். எனவே இச்சம்பவங்களில் ஆதிக் கங்களில் சூழ்ச்சி எதாவது இருக்கிறதா என்கிற கோணத் திலும் நாம் ஆராய வேண்டும்.

மாவோயிஸ்களைப் பொறுத்த மட்டில் இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுகிறார்கள் அவர் களுக்காக உயிரையும் விடச் சித்தமாயிருக்கிறார்கள் என்பது மகத்தான பாராட்டிற்குரியது.போற்றி வணங்கத் தக்கது,  என்றாலும் இதில் மக்களுக்கான பாதுகாப்பு தாங்கள் மட்டுமே என்கிற மமதையிலோ, அல்லது கையில் ஆயுதமும் அதிகாரமும் இருக்கிற அகங்காரத்திலோ எந்தத் தருணத் திலாவது மக்களது விருப்பங்களுக்கு எதிராகப் போவதோ, மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதோ, சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்வதோ, எதையும் எப்படிப்பட்ட பின்னணியிலும் ஏற்க முடியாது  என்கிற எச்சரிக்கையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காரணம் புரட்சியின் வரலாறும் புரட்சிகர இயக்கங்களின் வரலாறும் நமக்குப் பல படிப்பினைகளைக் கற்றுத் தந்திருக்கிறது. அந்த படிப்பினைகளிலிருந்து நாம் பாடம் பெறவேண்டும். எந்த மக்களுக்கும் சோறு போடுவதினாலேயே அவர்கள்மீது சர்வாதிகாரம் செய்ய எவருக்கும் அதிகாரம் கிடையாது. சோற்றை விடவும் சனநாயகம் மிகவும் முக்கியம் மாவோயிஸ்டுகளின் புரட்சி மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கும் அதேவேளை மக்களுக்கான சன நாயகத்தையும் பாது காக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை ஆதரிக்க வேண்டும் 

மலையின மக்களும் போராட்டங்களும்

பொதுவில் தண்டகாரண்ய வன வாழ் மக்கள் ‘கோண்டு’ இன மக்கள் என அழைக்கப்பட்டாலும் அவர்கள் ராஜ்கோண்ட், பைகா, மாதியா, முறியா, துருவா, பர்ஜா, பக்ரா, ஹால்பா, டுர்க் கோண்ட், டோர்லர் எனப் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றனர்.

இவர்களின் வனவாழ் உரிமைக்கான போராட்ட வரலாறு கிட்டத்தட்ட 14 ஆம் நு£ற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது எனலாம். ஆந்திரப் பகுதியை ஆண்ட காகேசிய மன்னர்கள் காலந் தொட்டு பிரித்தானிய காலனிய ஆட்சி மற்றும் தற்போதைய இந்திய சுதந்திர ஆட்சி வரை இவர்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வந்துள்ளனர்.அதே வேளை அச்சுரண்டலை எதிர்த்த போராட்டமும் தொடர்ந்து வந்துள்ளது.

இப்படிப்பட்ட போராட்டங்களில் குறிப்பிட்டு அறியப்படுவன:

1. ஹால்பா போராட்டம் [1774 - 1779] 2.பரால்கோட் போராட்டம் [1825] 3. தாராப்பூர் போராட்டம் 4. மாரியா போராட்டம் [1842-1863] 5. முறியா போராட்டம்[ 1876]6. பூம்கல் போராட்டம் [1910] இவை யனைத்துமே மலையின மக்கள் தாங்கள் வாழும் நிலத்தையும் வன வளத்தையும் பாது காப்பதற்கா நடத்திய போராட்டங்களே. தற்போது நடைபெற்று வரும் போராட்டமும் இத்தகையதே. 

இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களும் மாமவோயிஸ்டுகளும்

ருஷ்யாவில் 1917இல் நடைபெற்ற அக்டோபர் புரட் சியின் வெற்றி  பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் தாக்கத்தை உலகெங்கும்  ஏற்படுத்தியது, அந்தந்த நாடுகளிலும் இப் பொது வுடைமை நோக்கிலான புரட்சிகர அமைப்புகளைக் கட்டும் பணி தூண்டுதல் பெற்றது. இதனடிப்படையில் ருஷ்யா வின் வழிகாட்டுதலில் இந்தியப் பொதுவுடைமைச் சிந்தனை யாளர்கள் 1920இல்ருஷ்யநாட்டின்தாஷ்கண்ட் நகரில் ஒன்று கூடி இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தைத் தோற்றுவித்தனர். இதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 1925 இல் இந்தியாவில் கான்பூரில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. என்றாலும்  கட்சிக்கான கொள் கைத் திட்டம்  1951 இலேயே வெளியிடப்பட்டது. எனினும் இந்தத் திடடமும், நடைமுறைக்கு பொருந்தி வரவில்லை என அத்திட்டம் கிடப்பில் போடப்பட, சரியான திட்ட உருவாக் கத்திற்காகவே கட்சிக்குள் உள்கட்சிப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் இணக்கம் காண இயலாத நிலையிலேயே கட்சி இரண்டாகப் பிளவுபட்டு இ.பொ.க விலிருந்து இ.பொ.க. மார்க்சிஸ்ட் உருவானது. இவ்விரண்டு கட்சிகளுமே 1964 ஆம் ஆண்டு இ.பொ.க மும்பையிலும் இ.க.க.மா கல்காத்தாவிலும் மாநாடுகள் நடத்தி, இரு அமைப்புகள், இருவேறு திட்டங்கள் கொண்டவையாக செயல்படத் தொடங்கின.

இதில் 1967 இல் இ.பொ.க.மா மேற்கு வங்கத்தில் இடது சாரிக் கட்சிகளின் கூட்டுடன் ஆட்சியைப் பிடித்தது. எனில் அது முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது. ‘நிலச்சீர்தீருத்தம்’ ‘உழுபவனுக்கே நிலம்’ போன்ற பிரச்சனைகளில் சட்டம் ஒழுங்கைக்  காரணம் காட்டி நிலப் பிரப்புகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக இயக்கத்தின் ஒரு பகுதியினர் கருதியதால், இ.பொ.க.மா விலிருந்து ஒரு பகுதியினர்  வெளியேறித் தனித்துச் செயல்படத் தொடங்கினர். சாருமஜூம்தர், கனு சன்யால், ஜங்கல் சந்தால் ஆகிய தோழர்கள் இதன் முன்னோடிகளாக விளங்கினர். இவர்கள் இந்தியா முழுக்கப் பயனம் செய்து புரட்சிகர சக்திகளை ஒருங் கிணைத்து பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழுவை உருவாக்கினர்  [All India Co-ordination Committee of Communist Revolutionaries - AICCCR] இது சிலகாலம் அகில இந்திய அளவில் செயல் பட் டாலும், நடைமுறையில்  அது சாத்தியமற்ற நிலையில்,  ஆங்காங்கே  மாநில அளவில் பிரிந்து தனித் தனியே செயல் படத் தொடங்கியது? கொள்கைப் பிணக்கு, செயல் திட்டம் மற் றும்  உடனடித்திட்ட இலக்குகளில் முரண்பாடு, தனிநபர் முனைப்பு   வாதம் உட்கட்சி சனநாயகமற்ற சர்வாதிகாரப் போக்கு, ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி, கொடுமையான அடக்குமுறை ஆகிய பல்வேறு சிக்கல்கள் காரணமாக . இவ் வமைப்புகள் சிறு சிறு குழுக்களாக உடைந்து தனித்தனியே செயல்படத் தொடங்கின.

எனினும் இவற்றுள் ஆந்திராவில் இ.பொ.க.(மா-லெ) மக்கள் யுத்தக்குழு C.P.I.M.L Peoples War Group மற்றும் மாவோயிஸ்டுகளின் பொதுவுடைமை மையம் Maoist Communist Centre  ஆகிய அமைப்புகள் மட்டுமே கட்டுக் கோப்புடனும் வலுவோடும் செயல்பட்டு வந்தன. இவ்விரு அமைப்புகளுமே சமயத்தில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்ட போதிலும் இவற் றுள் இணக்கம் காணவும் இணைந்து ஒரே அமைப்பாகச் செயல் படவும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இவ்விரு அமைப்புகளின் தலைவர் களும் ஒன்று கூடி  2004  செப்டம்பர்  21 இல்   இ,பொ க மா வோயிஸ்டு C.P.I Maoist என்னும் அமைப்பை உருவாக்கி அக்டோபர் 14 ஆம் நான் அதை வெளியுலகுக்கு அறிவித்தனர். அன்று முதல் ‘இந்திய அரசைத் தூக்கியெறிந்து அங்கு தொழிலாளி வர்க்க அரசை நிறுவுவதே தங்கள் இலட்சியம்’என பிரகடனப் படுத்திக்கொண்டு இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.இதன் தொடர் நடவடிக்கைகள் இந்திய அரசுக்கு அச்சமூட்ட தில்லி அரசு 2009 ஜுன்  22 ஆம் நாள் இவ்வமைப்பைத் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் 1967 இன் கீழ் தடை செய்தது. தற்போது 13 மாநிலங்களில் 156 மாவட்டங்களில் இம் மாவோயிஸ்டு அமைப்பு உயிர்ப்போடு இயங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. 

மாவோயிஸ்டு - நக்சலைட்

நக்சல்பாரிகள் என்பது அமைப்பின் அதிகாராப் பூர்வ பெயர் அல்ல மேற்கு வங்கம் சிலிகுரி மாவட்டம் நக்சல்பாரி என்னுமிடத்தில் 1967 ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் இடது சாரி அரசின் நடவடிக்கைக்கு எதிராக இப்போராட்டம் வெடித்ததில் இப்போராளிகளுக்கும் அவ்வியக்கத்தினருக்கும் நக்சல்பாரிகள் என்னும் பெயர் உருவாக ஊடகங்களும் இதை அப்படியே வளர்த்து நிலைப்படுத்தி விட்டன உண்மையில் இவ்வமைப்பின் அதிகார பூர்வ பெயர் இ.பொ.க (மா.லெ) என்பதுதான்.தற்போது MCC இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு எனப்படும் அமைப்பின் அதிகாரபூர்வ பெயரும் இ.பொ.க. மாவோயிஸ்டு என்பதுதான்.

மார்க்ஸ் லெனின் சிந்தனைகளை வழிகாட்டுதலாகக் கொண்டவர்களாகப் பிரகடனம் செய்யும் முதல் பிரிவினரும் மாவோவின் சிந்தனைகளை வழிகாட்டுதலாக் கொண்ட வர்களாகப் பிரகடனம் செய்து கொள்ளும் இரண்டாவது  பிரிவினரும் இணைந்து மார்க்ஸ், லெனின், மாசேதுங் சிந்தனைகள் வழி நடக்க ஒப்புக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் தற்போது பேசப்பட்டு வரும் மாவோயிஸ்டு                                         அமைப்பு. இதில் மக்கள் யுத்தக் குழுவின் இன் ஆயுதப்படை Peoples Guerilla Army – PGA MCC இன்  யுத்தப்படை Peoples Liberation Guerilla Army PLGA தற்போது இவ்விரண்டும் ஒன்றிணைந்துதான்  இரண்டாவது படையின்  பெயரிலேயே அதாவது PLGA என்கிற பெயரிலேய 2004 திசம்பர் 2 ஆம் நாள் முதல் இயங்கி வருகிறது.

(மண்மொழி இதழில் வெளியான கட்டுரை)

Pin It