•              தமிழ்நாட்டில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு சமூக அமைதியைக் குலைக்க முயலும் ஜாதித் தலைவர்களைக் கண்டித்தும் -

•              தீண்டாமைக் குற்றங்களை இழைப்போர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தியும் -

•              ஜாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் -

•              சட்டப்படி வயது வந்தோர் தங்கள் விருப்பப்படி செய்து கொள்ளும் திருமண வாழ்வுரிமையில் குறுக்கிட்டு அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை கோரியும் -

•              பிப்ரவரி 6 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்;

திராவிடர் விடுதலைக் கழகத்துடன் சாதி எதிர்ப்பு இயக்கங்களை இணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கோருகிறோம்!

குறிப்பு: கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு முறையான அனுமதி கோரி உடனடியாக காவல் துறையிடம் விண்ணப்பிப்பதோடு உடன்பாடுள்ள அமைப்புகளோடு தொடர்பு கொண்டு செயலாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

•              சமூகத்தில் இருவேறு பிரிவினருக்கிடையே பகைமை மோதலை உருவாக்க திட்டமிட்டு செயல்படுவோர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கழக சார்பில் கோரிக்கை மனுக்களாக அளிக்குமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

- கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It