இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை:

19. இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ், எந்தக் குற்றமும் குறிப்பிடாது ஒருவரை 18 மாதம் காவலில் வைக்க முடியும். அதற்குப் பிறகு, அவர் விடுதலை செய்யப்பட் டால், அவரது நடமாட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடக்க முடியும். இந்த நடவடிக்கைகளை கேள்வி கேட்கவோ அல்லது நீதிமன்றம் தலையிடவோ உரிமையில்லை என்று பயங்கரவாத தடுப்புச் சட்டம் கூறுகிறது. கைதுக்கான ஆணை இல்லாமலே போலீஸ் கைது செய்யலாம். 72 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கைது சட்டப்படி சரியானதுதானா என்று கேள்வி கேட்கும் உரிமை நீதிபதிக்குக் கிடையாது. வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க, நீதிபதி உத்தரவிடுவதைத் தவிர, அவருக்கு வேறு உரிமை இல்லை. இப்படி கைது செய்யப்பட்டு குற்றச் சாட்டுகள் ஏதும் கூறப் படாமலேயே ஆண்டுக்கணக்கில் ஏராளமான வர்கள் சிறையில் அடைபட்டுள்ளனர். 15 ஆண்டு களாக தண்டனை ஏதும் வழங்கப்படாமலேயே சிறையில் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக அனுராதபுரம் சிறையில் இந்த சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள 63 பேரில், 23 பேர் மீது மட்டும், குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஏனை யோர் குற்றம் சாட்டப்படாமலேயே 6 ஆண்டு கள் வரை சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலி என்ற சந்தேகத்தில் திருமகள் சித்திரனேசன் ராபர்ட் என்ற பெண், கொழும்பில் 1996, செப். 8 இல் கைது செய்யப்பட்டார். அவரது தாய் நீதிமன்றத்தை அணுகினார், பயனில்லை. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அய்.நா.வின் குழு (முறை கேடான தடுப்புக் காவல் கண்காணிப்புக் குழு) இதேபோல் 12 பேர் சட்டவிரோத காவலில் இருப்பதை அறிந்து, பெயர்களைக் குறிப்பிட்டு அறிக்கை விடுத்தது. இனப்பாகுபாட்டின் அடிப் படையில் தமிழர்கள் என்ற காரணத்தால், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை பிரகடனத்துக்கு, இது எதிரானது என்றும் அய்.நா.வின் குழு அறிவித்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் இலங்கையில் 1979 இல் கொண்டு வரப்பட்டது. 1982 ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு அந்தச் சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டுவிட்டது. அவசர நிலை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் காவலில் வைக்க முடியும். அவர்களின் காவல் கெடு முடியும்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றப்பட்டு விடுவார்கள். குற்றச்சாட்டுகள் எதுவும் குறிப்பிடப் படாமலே அவசர நிலை சட்டத்தின் கீழ் ஒருவரை ஓராண்டு காவலில் வைக்கலாம். ஓராண்டு காவல் முடியும்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றிவிட்டால், மேலும் கூடுதலாக 18 மாதங்கள் காவலில் வைக்கலாம். அதுவும் முடிந்தபிறகு நீதிபதி முன் கொண்டு போய் நிறுத்தி நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டு விடுவார்கள். குற்றச்சாட்டு - குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்ய வேண்டாம். அதை நீதிபதிகளும் ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு விசாரணை முடியவில்லை என்று கூறி, காலவறை யின்றி சிறையில் வைத்து விடலாம். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், காவல் துறை அதிகாரிகளிடம் தரும் வாக்கு மூலத்தை நீதிமன்றம் அப்படியே அச்சுறுத்தி, சித்திரவதை செய்து, ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக நீதிமன்றத்தில் கூற முடியாது. அந்தப் புகாரை நீதிமன்றமும் ஏற்காது.

• பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிற வர்களில் தமிழர்களே அதிகம். கைதான அனை வருமே சித்திரவதைக்குள்ளாவது நிச்சயம். விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக சில சிங்கள போலீசாரும் ராணுவத்தினரும்கூட கைது செய்யப்பட்டு, அவர்களும் சித்திரவதைக் குள்ளாக்கப்படுகிறார்கள். ஊடகங் களில் இவர்களுக்கு எதிரான பரப்புரை செய்யப்பட்டு, சிங்கள சமூகத்தி லிருந்து தனிமைப் படுத்தப் படுகிறார்கள்.

•       (போருக்குப் பிறகு) சண்டை நடந்த பகுதிகள் மட்டு மல்லாது, இலங்கை முழுதும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றச் சாட்டுகள் ஏதுமில்லா மல் முறைகேடாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள். இறுதி கட்டப் போரில் வன்னியைவிட்டு உயிர் பிழைக்க வெளியேறிய தமிழர்கள், பிற இலங்கை யர்களைவிட மிக மோசமாக நடத்தப்படு கிறார்கள். அவர்கள் ஒட்டு மொத்தமாக தற்காலிக முகாம்களிலேயே அடைக்கப்படு கிறார்கள். அவர்கள் அனைவருமே நாட்டுக்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய பிரிவினராகக் கருதப்படு கிறார்கள். இவர்கள் ஒரே பிரிவினராகக் கருதப் படுவதால் தனி மனித உரிமைகள் முற்றாக பறிக்கப்படுகின்றன. வழக்கமான நீதித் துறை அமைப்புகளின சேவைகளைப் பயன்படுத்த முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ, பிணை கேட்டு மனு செய்யவோ மறுக்கப்படு கிறது. பல மாதங்களாக காவலில் வைக்கப்பட் டுள்ளனர்.

• இராணுவம், போலீஸ், துணை ராணுவப் படை (காட்டிக் கொடுக்கும் கூலிப்படை) இந்தத் தமிழர்களைக் கைது செய்யவும், அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவும், பயன்படுத்தப் படுகிறது. மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினரும் இணைந்து செயல்பட பாதுகாப்பு அமைச்சகம் அனுமதித்துள்ளது. இராணுவம், போலீஸ் மற்றும் துணை இராணுவப் படையினர் சந்தேகப்படுவோரை (தமிழர்களை) தனித் தனியே மாறி மாறி இரகசிய இடங்களில் வைத்து துன்புறுத்தி, சித்திரவதை செய்கிறார்கள். இதனால் இந்த விசாரணை நீண்டகாலம் இழுத்தடிக்கப்படுகிறது.

• போரின் இறுதி நாட்களில் வன்னியிலிருந்து வெளியேறி ஓடியவர்கள் முல்லைத் தீவில் ராணு வத்தை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டு என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்கள் சித்திரவதை செய்து விசாரிக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டு என்று ஒப்புக் கொண்டவர்கள் விசாரணைக்கு உடன்பட மறுத்தவாகள் அனைவரும் ‘கடும் போக்கு’ உடையவர்கள் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களாக கருதப் பட்டு, “மறுவாழ்வு” மய்யங்களில் வைக்கப் பட்டனர். வவுனியாவில் ‘மறுவாழ்வு மய்யம்’ என்று கூறப்படும் பகுதிக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்யப்பட்டார்கள். அங்கிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டு, இலங்கை இரகசிய போலீஸ் பிரிவால் மேலும் “விசாரணைக்கு” உள்ளாக்கப்பட்டனர். ‘பயங்கரவாத விசாரணைத் துறை’ என்ற ஒரு தனி அமைப்பு, இலங்கையில் செயல்படுகிறது. இந்தத் துறையில் விசாரணைக்கு உள்ளா வோருக்கு தனியாக தடுப்புக் காவல் முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பூசா சிறைச் சாலைக் குள்ளேயே தனிப் பகுதியில் ஆயிரக்கணக்கில் இந்தத் துறையால் விசாரணை நடத்தப் பட்டவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவு சிறைத் துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் பயங்கரவாத விசார;ணைத் துறை யின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கில் இப்படி அடைக்கப்பட் டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமலே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

• இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்தும், (மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழி லாளர்கள் வாழும் பகுதி) 50 பேரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்படத் தயாராக இருந்தவர்கள் என்று கூறி இந்தத் துறை கைது செய்துள்ளது. தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை செய்யும் 6 இளைஞர்கள் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2008-லிருந்து 2010 வரை கைது செய்யப்பட்ட இவர்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

• கொழும்பிலுள்ள சி.அய்.டி. போலீஸ் தலைமை யகத்தில் சித்திரவதை மிக மோசமாக நடக்கிறது. இப்படி சித்திரவதைக்குள்ளான ஒரு தமிழர் கூறுகிறார்:

“கொழும்புக்கு கொண்டு வரப்பட்டால் அவ்வளவுதான். மிக மிகக் கடுமையான சொல்லவியலாத சித்திரவதை... உடல் முழுதும் முழுமையான சித்திரவதை... அங்கே ஒரு மின்சார நாற்காலி உண்டு. நினைத்தாலே நடுங்குகிறது. விசாரணையில் பேசப்படும் சொற்கள் கொடூரம். இரண்டாவது தளத்தில் விசாரணை நடக்கும்.... நான்காவது தளம் சித்திரவதைகளோடு விசாரணை நடக்கும்... 6வது தளத்தில் நடக்கும் சித்திரவதைக்குப் பிறகு, உயிருடன் மீளவே முடியாது.”

• கொழும்பு சி.அய்.டி. அலுவலகத்தில் மட்டு மல்ல, பூசா சிறையில் தனியாக வைக்கப் பட்டுள்ள முகாம்களிலும் சித்திரவதைகள் நடத்தப்படு கின்றன. இந்த சித்திரவதைளை செய்வதற்காக அதில் கைதேர்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். காவலில் வைக்கப்பட்ட குடும்பத்தினரிட மிருந்து லஞ்சம் பெற்றுத் தருமாறு கேட்டுத்தான், தொடர்ந்து மேலும் மேலும் கூடுதல் சித்திரவதைகள் செய்யப்படுகின்றன.

2012 ஆம் ஆண்டு காவலிலிருந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியிடம் 2012 ஜனவரியில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பேட்டிக் கண்டது. அய்.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு சிறப்பு அதிகாயின் பதிவேட்டிலும் இது இடம் பெற்றுள்ளது.

இலங்கை அமைச்சர் ஒருவர் கொலையில் தொடர்புபடுத்தி, இலட்சுமண் கூரே என்ற காவல்துறை அதிகாரி, 2009 ஆகஸ்டில் காவலில் வைக்கப்பட்டார். 17 மாத காவலுக்குப் பிறகு, 2011 பிப். 7 இல் கொழும்பு உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அவரை சிறைக் கைதியாக சிறைக்குத்தான் அனுப்ப வேண்டும். அனால், நீதி மன்றமே இலங்கையில் தண்டனைச் சட்டத்துக்கு நேர்மாறாக “பயங்கரவாத விசாரணைத் துறை” கட்டுப்பாட்டில் உள்ள தடுப்புக் காவல் மய்யத்துக்கே திருப்பி அனுப்ப ஒப்புக் கொண்டது. அங்கே அவர் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவார் என்று வழக்கறிஞர் கூறியதை ஏற்க கொழும்பு உயாநீதிமன்றம் தயராக இல்லை. இத்தனைக்கும் இவர் உயர் பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரி, ஜுலை 2011இல் கூரே, இலங்கை உச்சநீதிமன்றத்தில் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் காவலில் வைத்துள்ளது சட்ட விரோதம் என்பதையும் சித்திரவதை நடத்தப்பட்டதையும் ஒப்புக் கொண்டதோடு, அதில் தொடர்புடைய புலனாய்வு அதிகாரிகள் பெயரையும் வெளியிட்டது.

பயங்கரவாத விhசரணைத் துறை பொறுப்பு அதிகாரி பிரசன்னா டி.அல்விஸ், இலங்கை காவலதுறை தலைமை ஆய்வாளர், பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இந்த சட்ட விரோத காவலுக்கு துணையாக இருந்ததாக இலங்கை உச்சநீதிமன்றம் கூறியது. கூரே விசாரணையின்போது எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார் என்ற விரிவான செய்திகளை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டன. அவரது தலையில் புத்தகங்களை அடுக்கி, அதன் மீது கற்களாலும் தடிகளாலும் தலையில் அடிக்கப்பட்டார். மேசை மீது படுக்க வைத்து உள்ளங்காலில் தடிகளால் அடிக்கப்பட்டார். ஆறு அடி ஒரு அங்குல உயரமுள்ள அந்த அதிகாரியை 6 அடி உயரமுள்ள குறுகிய கூண்டுக்குள் திணித்து அடைத்து வைத்தார்கள். உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் கொன்று விடுவதாகவும், அவரது மனைவியை கைது செய்யப் போவதாகவும் மிரட்டினர். போலீசார் கூறுவதை அப்படி எழுதித் தர முடியாது என்று அவர் மறுத்ததால், அவரை ஒரு அறைக்குக் கொண்டு சென்று விரல்களிலும் கைகளிலும் உடல்களிலும் சிகரெட்டு புகை நெருப்பால் சுட்டனர், என்று ஊடகங்கள் எழுதின.

- தொடரும்

Pin It