மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ் - மன்மோகன் கூட்டணியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத் தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல் லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மினசாரத் துறையிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்ப தாலும், மிகச் சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க வேண்டி நம்மிடம் பணம் வசூலித்தது போதாதென்று, அவர்களுக்காகத் தங்குதடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக நம் உடைமையையும், உயிரையும், நிலத்தையும், சந்ததி களையும் அழிக்கவல்ல கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் போன்ற மின் நிலையங்களை அமைப்பதற்கும் இந்த வாரியமும், அதனை அமைத்த மத்திய அரசும் முழு முயற்சி செய்து வருகின்றன.

2010 ஆம் ஆண்டில் மென்பொருள் நிறுவனங் களுக்கு (சாஃப்டுவோ நிறுவனங்கள்) யூனிட் ஒன்றுக்கு 2.50 ரூபாய் சலுகையை இந்த வாரியம் அளித்தது. இவ்வாறு குறிப்பிட்ட சில துறைகளுக் கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கியே நம் மாநிலத்தின் மின்சாரத் துறையை அது மீளாக் கடனில் தள்ளியுள்ளது. உலகமயமாக் கல், தனியார் மயம், தொழில்துறையில் 10ரூ வளர்ச்சி என்று பேசி பேசியே இன்று பிறரின் சுமையை இந்த வாரியம் நம் தலையில் ஏற்றி வைத்துள்ளது.

இந்த வாரியத்தை அமைத்த மத்திய அரசோ, கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையங்களை நம் தலைமுறையை அவை அழிக்கும் என்று தெரிந்தே தனியாருக்கு மின்சாரம் வழங்க வேண்டு மென்பதற்காக நம் மீது திணிக்கின்றது. அணு மின்சார உற்பத்தி விலை அதிகமானது. அதனை சரி செய்ய வேண்டுமென்றால் இந்தக் கட்டண உயர்வு செய்யப்பட்டேயாக வேண்டும். இது கற்றறிந்தோரின் அறிவுரை. அவர்களின் அறிவுரை நியாயமானது, உண்மையானது.

இதையெல்லாம் எதிர்த்து நாம் விளக்கங் களையும், கேள்விகளையும கேட்க வேண்டாமா?

அடுத்த சில மாதங்களிலேயே வீடுகள், சிறு கடைகள், சிறு வணிகங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயரவிருக்கிறது. இதன் மூலம் நமது வருமானம் சுரண்டப்படுவதும் நமது தொழில் முடங்குவதும், விலைவாசி ஏறுவதும் நடக்கும். மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் சலுகை விலையில் அளித்து அவர்களின் உற்பத்தியை அதிகரித்து நமது தொழிலை முடக்கப் போகிறார்கள். மின்சார கட்டணத்தைக் கட்ட இயலாமல் ஏழைகள் மின் தொடர்பை துண்டிக்கும் நிலை வெகு விரைவில் வர உள்ளது. இதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் கல்வியும் பாழ்படப் போகும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.

தற்போது ஹூண்டாய் மோட்டர், போர்டு, நோக்கியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்காக நம்மிடம் மின்சாரத் தடையை அமல்படுத்தி வருகிறார்கள். இனிவரும் காலங்களில், மின்சாரக் கட்டணம் பயங்கரமாக ஏறப் போகிறது. அப்போது மின்சாரக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் நமது மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை உருவாகும். துண்டிக்கப்பட்ட நம் இணைப்புகளில் இருந்து கிடைக்கும் உபரி மின்சாரத்தை சேமித்து, அதனைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மகிழ்ச்சியாக வழங்கப் போகிறார்கள். இப்படியாக நம் எதிர்காலம் விடிய இருக்கிறது. ஆகவே, விழிப்புடன் இருப்பதற்கான தருணம் இது!

‘கீற்று’ இணையதளத்திலிருந்து

Pin It