ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கூடுதல் சுமைகளை திணிக்கும் நட வடிக்கைகள் தான் நாட்டின் பொருளா தாரத்தைக் காப்பாற்றுவதற்கு அல்லது சீரமைப்பதற்கு சரியான வழி என்ற கொள்கைகளையே ஆளும் மத்திய ஆட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இப்போதும் பிரதமர் மன்மோகன் சிங், அதே பல்லவியைப் பாடுகிறார். டீசல் விலை உயர்த்தியதற்கும், சில்லறை வர்த்தகங்களில் நேரடி அன்னிய மூலதனத்தை அனுமதித்த தற்கும் நாட்டின் பொருளாதார நிலையை ஒழுங்குப்படுத்து வதற்கான நடவடிக்கைளே என்று சாதிக்கிறார். சர்வதேச நாடுகளிலிருந்து பெரும் தொழில் ‘முதலைகள்’ - இந்தியாவில் முதலீடு செய்வது மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்கிறார்கள். இந்தப் பொருளாதார மேதைகள்! இதற்காக பல லட்சம் கோடி வரிச் சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன.

நடப்பு ஆண்டு சராசரி தனி மனித உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதம் உயர்ந்து, இந்தியா உலக நாடுகளோடு போட்டிப் போடத் தொடங்கிவிட்டதாக இந்த நிபுணர்கள் கூறினார்கள். இதே கால கட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. இதன் அர்த்தமென்ன? நாட்டின் உற்பத்தி வளர்ச்சியின் பயன் அந்த மக்களுக்குப் போய்ச் சேராமல், நாட்டின் வளங்களை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக திருப்பிவிடுகிறார்கள் என்பதுதான்!

எப்போது வி.பி.சிங் மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தத் தொடங்கினாரோ அப்போதே ஆளும் பார்ப்பன வர்க்கம் திட்டமிட்டு காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் அதிகாரத்தை ஆட்டிப் படைத்து வந்த பார்ப்பனர்கள், தங்கள் ஆதிக்கக் கோட்டை சரியத் தொடங்கிவிட்டதாகவே அலறி வீதிக்கு வந்து போராடிப் பார்த்தனர்.

பார்ப்பனரல்லாத வெகுமக்கள் சக்தியிடம் தோல்வி கண்டவர்கள் ‘உலகமய மாக்கல்’ கொள்கையை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவின் அதிகாரக் கட்டமைப்பை தகர்க்கத் தொடங்கினார்கள்.

பொதுத் துறை நிறுவனங்கள் படிப் படியாக மூடப்பட்டு தனியார் துறைகள் வளர்க்கப்பட்டன. இடஒதுக்கீடு கொள்கைகள் நீர்த்துப் போகச் செய்யப் பட்டன. விவசாயத் துறை நசுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டனர். பலர் வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கல்வி மற்றும் மருத்துவத் துறையில் அரசு, தனது கடமைகளைக் கைகழுவி விட்டது. இப்போது பார்ப்பனரல்லாத சமூகத்தினரிடம் உள்ள வணிக நிறுவனங்களையும் முற்றாக ஒழிக்க பன்னாட்டு வணிக நிறுவனங்களை அழைத்து வந்து விட்டனர். இந்த நிலையில் பார்ப்பன பன்னாட்டு-பனியாக்களிடம் மண்டியிட்டுக் கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சத்தை சுருட்டிக் கொண்டு, நாட்டை ஆளும் கட்சிகள் மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றன.

இந்த பார்ப்பன தேச விரோதிகள்தான் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இயக் கங்களை தேச விரோதிகள் என்கின்றனர்.
- இதுவே இன்று நாட்டில் நடக்கும் அரசியல், பொருளாதாரம் எல்லாமுமே!

Pin It