பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா பொதுக் கூட்டம் 22.1.2011 அன்று பல்லடம் வட்டம் சுக்கம்பாளையத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை திருப்பூர் தியாகு தலைமையில் நடைபெற்றன. மாவட்ட தலைவர் துரைசாமி அனைவருக்கும் பொங்கல் வழங்கினார். மாலை 6 மணிக்குபொதுக் கூட்டம் க. ஆறுமுகம் தலைமையில் நடந்தது. சு.வடிவேல் வரவேற்புரையாற்ற, நீலவேந்தன் (ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்), கா.சு. நாகராசு (கோவை மாவட்ட கழக செயலாளர்), கோபி. வேலுச்சாமி உரையைத் தொடர்ந்து சிற்பி ராசனின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது.

 

பொதுக் கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்று பழமைவாதியான கிராம நிர்வாக அதிகாரி, துணை அதிகாரி மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களும் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறை அதிகாரிகள் பல்லடம் கழகத் தோழர் சி. விசயன் அவர்களிடம் அனுமதி மறுத்தது. ஆனால் கழகத் தோழர்கள் தடையை மீறி கூட்டம் நடத்தியே தீர்வோaம் என்று கூறவே, கடும் வாக்கு வாதம் நடந்தது. இறுதியில் கடவுள் இல்லை என்றும் பேசக் கூடாது; சாதியில்லை என்றும் பேசக்கூடாது என்று காவல்துறை அதிகாரி நிபந்தனை விதித்தார். நாங்கள் பேசுவதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது என்று தோழர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். கூட்டத்தில் சாதி ஒழிப்பும், கடவுள் மறுப்பும் அதிகமாகப் பேசப்பட்டது.

 

பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டவர் களுக்கு பரிசாக 50 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மா. திருமூர்த்தி, சி. விசயன், கோ. ஜெகதீசு, சூரி, இராவணன், சூலூர் தமிழ்ச் செல்வி, வீரமணி, கலங்கல் வேலு, அகில் குமரவேலு, திருப்பூர் துரைசாமி, முகில்ராசு, மணிகண்டன், திருவள்ளுவர் தாய்த்தமிழ்ப் பள்ளி, வான்மதி வேலுச்சாமி, ராஜேசுக் கண்ணா, பொன்னுச்சாமி, சிவக்குமார், லட்சுமி மில்ஸ் முத்துக்குமார், பொன்னுச்சாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் மணிகண்டன் நன்றி கூறினார்.

 

திருப்பூரில் 

15.1.2011 அன்று திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தமிழர் திருநாள் விழா விளையாட்டுப் போட்டிகளுடன் சிறப்பாக கழக சார்பில் நடைபெற்றது. அமுதம் மூட்டைக் கடை தோழர் கணேசன் தலைமையில் ஆடிட்டர் இரவி (எ) பழனிச்சாமி, முத்து. மூர்த்தி, கார்த்திக் முன்னிலையில் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, மடத்துக்குளம்மோகன் சிறப்புரையாற்றினர். மாநகர செயலாளர் முகில்ராசு, க. அகிலன், பாடகர் தியாகு, ஆசிரியர் சிவகாமி, செந்தில், சண். பாண்டியநாதன், சம்பூகன், தமிழ்ச் செல்வன், இராசசிங்கம் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

 

23.1.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கழக சார்பாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. து. சுசீலா பொங்கல் வழங்கி துவக்கி வைத்தார். சிறுவர்களுக்கும், சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் என அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சமர்பா குழுவினர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். தோழர்கள் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, மாநகர செயலாளர் முகில்ராசு, பல்லடம் விசயன், ஆசிரியர் சிவகாமி, தியாகு, திருப்பூர் இராவணன், கோபிநாத், நீதிராசன், ஜீவா நகர் குமார், கிளாகுளம் செந்தில் குமார், மணிகண்டன் மற்றும் திருப்பூர் பகுதி தோழர்கள், மாஸ்கோ நகர் பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியை தோழர்கள் அகிலன், சம்பூகன், மாஸ்கோ நகர் புதிய தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

ஜோத்தம்பட்டியில்

 

15.1.2011 சனி அன்று திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், ஜோத்தம்பட்டி கிராமத்தில் கழகம் சார்பில் பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாலையில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

 

காலை 10 மணிக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. முன்னதாக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கென குழு அமைக்கப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் மா. மோகன்குமார், காரத்தொழுவு அமைப்பாளர் மயில்சாமி, உடுமலை நகர துணை செயலாளர் சிவசங்கர், உடுமலை ஒன்றிய செயலாளர் கோ. விசுவநாதன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சு. சிவானந்தம், கணியூர் வெங்கடாசலம், தியாகு உள்ளிட்ட குழுவினர் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பணியை மேற்கொண்டனர்.

 

மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டம் தொடங்கியது. மடத்துக்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் மா.மோகன் குமார் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, “இன்று நம்மைப் போன்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியில் முன்னேற்றமடைந்ததற்கு பெரியார்தான் காரணம்” என்று விளக்கிப் பேசினார். அவருக்குப் பின் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பொள்ளாச்சி இரா. மனோகரன், சமூகத்தில் நிலவக் கூடிய மூட நம்பிக்கைகளை விளக்கிப் பேசினார். அவரின் பேச்சை மக்கள் ஆர்வத்துடன் கேட்டுத் தெளிவு பெற்றனர். கழகப் பொதுச்செயலாளர் கோவைஇராமகிருட்டிணன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் ஆற்றிய உரையை மக்கள் அமைதியுடனும், ஆர்வத்துடனும் கேட்டனர். கோவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தினார்.

 

நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட செயலாளர் கரு. கருமலையப்பன், பொள்ளாச்சி ந. பிரகாசு, உடுமலை நகரத் தலைவர் யாழ். நடராசன், உடுமலை நகரப் பொருளாளர் வேல் முருகன், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்ந.ப. கதிரவன், கடத்தூர் கிளை செயலாளர் அய்யப்பன், மணிகண்டன், சரவணன், கணியூர்வெங்கடாசலம், தமிழ்ச் செல்வன், உடுமலை தியாகு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Pin It