பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவான ‘தமிழ்நாடு மாணவர் கழகம்’ தமிழகம் முழுதும் பள்ளி கல்லூரி வாயில்களில் கல்வி உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் வழியாக மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் பரப்புரை இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

மாணவர்கள் பெரும் திரளாகத் திரண்டு, கருத்துகளைக் கேட்டு வருகிறார்கள். கழக வெளியீடு களும் விற்பனை செய்யப்படுகின்றன. எழுச்சி நடைபோட்டு வரும் பரப்புரை இயக்கத்தின் முதல் கட்டப் பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு:

18.07.2011 பகல் 12 மணி அளவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துவங்கியது. சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த செய்தியை பேராசிரியர்கள், மாணவர்கள் தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். பெருந்திரளாக மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணியளவில் தில்லை நந்தனார் மேல் நிலைப் பள்ளி வாயிலில் பரப்புரை நடைபெற்றது. மாணவர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். இரண்டு இடங்களிலும் காவை. இளவரசன், புதியவன் உரையாற்றினர். 17 ஆம் தேதி இரவு, தோழர்கள் தங்குவதற்கும், 18 ஆம் தேதி காலை உணவும் முதுபெரும் சுயமரியாதை வீரர் சிதம்பரம் கு. கிருட்டிணசாமி பேரன் சித்தார்த்தன் ஏற்பாடு செய்தார். மதிய உணவு சீர்காழி நகர செயலாளர் பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார். சிதம்பரம் பயணம் முடிந்து இரவு மயிலாடுதுறையில் கழகத் தோழர் விஜியின் புத்தக சோலையில் தங்கினர்.

19.07.2011 மதியம் 12 மணியளவில் பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் பரப்புரை நடைபெற்றது. மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பகல் 1.30 மணியளவில் ஏ.வி.சி. கலைக் கல்லூரியில் பரப்புரை நடைபெற்றது. மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற மாணவர்கள் முகவரிகளை பதிவு செய்தனர்.

மாலை 4.30 மணியளவில் மயிலாடுதுறை நகராட்சி மேனிலைப் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயண செலவுக்காக தோழர்கள் உண்டியல் ஏந்தி மக்களிடையே சென்றபோது தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் தான் சிறப்பாக செயல்படுகிற அமைப்பு என்று பாராட் டினர். இரண்டு நாள் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தோழர்கள் மகேஷ் (மாவட்ட செயலாளர்), இளையராசா (மாவட்ட அமைப்பாளர்), ரமேஷ் (மாவட்ட இணை செயலாளர்), அன்பரசன், சங்கர் (நகரசெயலாளர்), பிரபாகரன் (சீர்காழி நகரத் தலைவர்), தமிழ்நாடு மாணவர் கழகத்தைச் சேர்ந்த செயராஜ், நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை தோழர்கள் உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

குடந்தை - தஞ்சையில்


20.07.2011 காலை 8.30 மணியளவில் குடந்தை அரசு கலைக் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். சில மாணவர்கள் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்தனர். கழக நூல்கள் விற்பனை யாயின. கழக ஆதரவாளர் வினோத் ரூ.900 நன்கொடை வழங்கினார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சோலை மாரியப்பன் கலந்து கொண்டார்.

பகல் 1 மணியளவில் மன்னர் சரபோஜி கலைக் கல்லூரி வாயிலில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாலை 4.30 மணியளவில் கரந்தை உமாமகேசுவரனார் தமிழ் கல்லூரி வாயிலில் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தனித் தனியாக மாலை 6.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். தஞ்சை நகரத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்விலும் தமிழ்நாடு மாணவர் கழகத்தைச் சேர்ந்த ராமர், ஆனந்தகுமார் மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சோலை. மாரியப்பன், மே.க. கிட்டு ஆகியோர் பங்கேற்றனர்.

திருச்சியில்

21.07.2011 காலை 8 மணியளவில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு தோழர்கள் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை விளக்கிய துண்டறிக்கை களை வழங்கினர். 10 மணியளவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாயிலில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் மாநில பொறுப்பாளர் துரை. சித்தார்த்தன் வாழ்த்துரை வழங்கினார். பொது மக்களும் பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பகல் 1 மணிக்கு பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி முன்பு பரப்புரை கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் சட்டக் கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கை வழங்கினர். மாலை 5 மணியளவில் ஜமால் முகமது கலைக் கல்லூரி வாயிலில் பரப்புரை நடைபெற்றது. பொது மக்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இரவு தோழர் குமார் இல்லத்தில் அனைவருக்கும் உணவு வழங்கினார். அனைத்து நிகழ்வுகளிலும் ஆறுமுகம், குமார் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் கணிகாசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

22.07.2011 காலை 8.30 மணிக்கு திருவரங்கம் அரசு மேனிலைப் பள்ளியில் பரப்புரை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.முத்து வாழ்த்துரை வழங்கினார். திருவரங்க நகர செயலாளர் கலந்து கொண்டார். அசோக் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்.

பகல் 1 மணியளவில் காட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரப்புரை நடைபெற்றது. மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி அனைவருக்கும் உணவு வழங்கினார். இரண்டு நாள் இரவும் கழக ஆதரவாளர் ரெ.சு. மணியின் லட்சுமி மழையர் பள்ளியில் தோழர்கள் தங்கினர்.

அனைத்து இடங்களிலும் புதியவன் உரையாற்றினார். காவை. இளவரசன் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகளின் வழியாக உரையாற்றினார்.

கலந்து கொண்ட தோழர்கள்: காவை. இளவரசன், புதியவன், அவினாசி செந்தில், திருச்சி ஆறுமுகம், பல்லடம் பகுதி மாணவர்கள் செந்தில், இராகவன், சரவணன், ஆனந்த், செல்ல முத்து, விஜய பிரசாத், பழனி கார்த்திக், காவை கணிகாசெல்வன்.

மாணவர் கழக கோரிக்கைகள்

• சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலிருந்தே அமுல்படுத்து.

• 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை

(rte 2009) உடனடியாக முழுமையாக அமுல்படுத்து!

• தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையத்தை (ncher) இழுத்து மூடு!

• பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை படிப்புகளுக்கு அகில இந்திய அளவிலோ மாநில அளவிலோ பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தாதே!

• சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வை ரத்து செய்!

• மேல்நிலைக் கல்வியில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமான பொதுப் பாடத் திட்டம் என்ற பெயரில் இந்தி - பார்ப்பனர் - வடவர் ஆதிக்கங்களை நிலைநிறுத்தத் திட்டமிடாதே!

• தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தும் பொதுப்பள்ளி முறையை (Common School
System ) அமுல்படுத்து! அதற்கு முன்னோடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்து!

• மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமை பெறுவதைத் தடை செய்யும் க்ரீமிலேயர் முறையை ரத்து செய்!

• பொதுப் போட்டியில் வென்று வரும் sc, st, Mbc, obc மாணவர்களின் எண்ணிக்கையை இடஒதுக்கீட்டுக் கணக்கில் சேர்க்காதே!

• கல்வி அமைப்புகளை மதத்திலிருந்து விடுவித்து மதச் சார்பற்ற சூழலில் இயங்கச் செய்!

- இக்கோரிக்கைகள் அடங்கிய விரிவான துண்டறிக்கையை கழக மாணவர்கள் - பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாடு மாணவர் கழக 2 ஆம் கட்ட பரப்புரை இயக்கம்: பொள்ளாச்சியில் தொடங்கியது

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இரண்டாம் கட்ட பரப்புரை இயக்கம் ஜூலை 25 ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கியது. பயணத்துக்கு தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். மடத்துக்குளம் மோகன் - மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்துகிறார். தோழர்கள் கா.சு. நாகராசு, வெள்ளமடை நாகராசு கல்வி உரிமை கோரிக்ககளை வலியுறுத்தி பேசுகிறார்கள். பயணத் திட்டம்:


25.07.2011 - திங்கள்

பொள்ளாச்சி - தொடக்கம்

ஆனைமலை

ந.மூ. சுங்கம்

பொள்ளாச்சி - தங்கல்

26.07.11 - செவ்வாய்

உடுமலை - தொடக்கம்

மடத்துக்குளம்

காரத்தொழுவு, தாராபுரம்

திருப்பூர் - தங்கல்

27.07.11 புதன்

திருப்பூர் - தொடக்கம்

காங்கயம்

பொங்கலூர்

பல்லடம் - தங்கல்

28.07.11 - வியாழன்

பல்லடம் - தொடக்கம்

சூலூர்

கோவை தங்கல்

29.07.11 வெள்ளி

கோவை - தொடக்கம்

கோவை - தங்கல்

01.08.11 - திங்கள்

கோவை - தொடக்கம்

துடியலுர்,

பெரியநாயக்கம்பாளையம்

மேட்டுப்பாளையம் -தங்கல்

02.08.11 - செவ்வாய்

மேட்டுப்பாளையம் -தொடக்கம்

அன்னூர், அவனாசி

கோபி - தங்கல்

03.08.11 - புதன்

கோபி - தொடக்கம்

அத்தாணி, அந்தியூர்

மேட்டூர் - தங்கல்

04.08.11 - வியாழன்

மேட்டூர் - தொடக்கம்

அம்மாபேட்டை,

பவானி

ஈரோடு - தங்கல்

05.08.11 - வெள்ளி

ஈரோடு - தொடக்கம்

பெருந்துறை, சித்தோடு

திருச்செங்கோடு - தங்கல்

06.08.11 - சனி

நாமக்கல் -தொடக்கம்

ராசிபுரம், சேலம் -முடிவு.


ஆக.6-ல் சேலத்தில் கல்வி உரிமை மீட்பு மாநாடு


தமிழ்நாடு மாணவர் கழகத்தின் பரப்புரை இயக்கம் சேலத்தில் நிறைவு பெறுகிறது.

6.8.2011 அன்று தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கில் கல்வி உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மாநாட்டை பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தொடங்கி வைக்கிறார். மாணவ மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த, பிரபா கல்விமணி சிறப்புரையாற்றுகிறார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றுகிறார்.

பிற்பகல் 2 மணியளவில் மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மாணவர் மாணவிகள் உரையாற்றுகிறார்கள். ஹென்றி டிபன் (மக்கள் கண்காணிப்பகம்) சிறப்புரையாற்ற, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றுகிறார்.

Pin It