வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் சிந்தனை சிற்பி ம.பெ. சிங்காரவேலர் 151 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையிலுள்ள பாடி யாதவர் தெருவில் 19.2.2011 சனிக்கிழமை மாலை வழக்காடு மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மு.கனகராஜன் தலைமை வகித்தார். கழகத் தோழர்கள் சு. ஜெயசங்கர், பா.கர்ணன், திருமலை ஆகியோர் முன்னிலை வகிக்க மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசுபவர்கள் குற்றவாளிகள் என்று கழக பேச்சாளர் திண்டுக்கல் துரை. சம்பத் வழக்கு தொடுத்தார். தனது வழக்குரையில் சேது சமுத்திர திட்டம் மூடநம்பிக்கைகளால் தடைப்பட்டு கிடப் பதையும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகளைப் பட்டியலிட்டு அதனை எப்படி அறிவியல் ஆக்குகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். வழக்கினை மறுத்த கழக வழக்கறிஞர் சு. குமாரதேவன், மூடநம்பிக்கைகளை அறிவியல் ஆக்குவதின் பின்னணியில் இருக்கும் சக்திகள் யார் யார் என்று விளக்கி, அவர்களும் குற்றவாளிகளே என்று வழக்கினை மறுத்தார்.

 

இறுதியாக தீர்ப்பளித்த கழக துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், புராண கதாபாத்திரங்களின் ஆபாசம், அதை இன்றைக்கு அரசியல் என்று எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதை விளக்கி மூடநம்பிக்கை களுக்கு அறிவியல் முலாம் பூசுபவர்கள் குற்றவாளிகள் என்பதோடு, அதை ஊக்குவிப்பவர்களும் குற்றவாளி களே என்று தீர்ப்பளித்தார். இரா. பரத் நன்றியுரை யாற்றினார். பெருமளவில் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் தோழர் கள் சி. அருள்தாஸ், நாத்திகன், டேவிட் பெரியார் ஆகியோர், கே. திலீபன் இசைக்கேற்ப பகுத்தறிவு இன எழுச்சிப் பாடல்களை பாடினர். நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகில் வி. ஜனார்த்தனன், அறிவியல் விளக்கக் கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.  

Pin It