12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கிவிட்டன; 10 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன; முதல் தலைமுறையாக படிக்க வந்து தேர்வுக்கு தயாராகும் தங்கைகளும், தம்பிகளும் பாடப் புத்தகத்தைப் படிக்க உட்கார்ந்தால் மின்சார வெட்டு!

 

ஆனால், கோடி கோடியாக தமிழ்நாடு வளத்தையும், பணத்தையும் வாரிச் சுருட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கோ, 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம்!

 

தேர்வுக் காலம் முடியும் வரையிலாவது - இந்த மின் தடையை, தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்கக் கூடாதா?

 

பாதிக்கப்படும் ஏழை எளிய சமூகத்து மாணவச் செல்வங்களின் கல்வியை விட, பன்னாட்டு நிறுவனங்களின் நலன்தான், இந்த அரசுக்கு முக்கியமாகி விட்டதா?

 

தமிழக அரசே!

 

              பள்ளித் தேர்வுகள் முடியும் வரையிலாவது மின் தடையை அமுல் படுத்தாதே!

              இரவு 10 மணிக்கு மேல் கோயில் பண்டிகைகளில் ஒலி பெருக்கிகளை அலற வைத்து, மாணவர் படிப்பைக் கெடுத்து விடாதே! இது நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிரானது!

நியாயமான இந்த சமூகநீதிப் போராட்டத்துக்கு, மாணவர்களே! பெற்றோர்களே ஆதரவு தாரீர்!

 

மார்ச் 5 - மின்வாரியங்கள் முன் போராட்டம்!

மாணவச் செல்வங்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றும் போராட்டம்!

ஆதரவு தருவீர்! போராட்டத்தில் பங்கேற்பீர்!

- பெரியார் திராவிடர் கழகம்

Pin It