சென்னையில் நூல் வெளியீட்டு விழா
தமிழிசைக்கு பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு


தமிழர் இசை மற்றும் கலையில், பிற பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து பெரியார் இயக்கம் போராடிய வரலாற்றை மறைத்து, பெரியாரை தமிழுக்கு எதிரானவராக சிலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இது குறித்து 1943 - 44 ‘குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்த செய்திகள், பெரியார் மற்றும் தமிழ்ச் சான் றோர்களின் கட்டுரை களைத் தொகுத்து “கலை எனப்படுவது இனக் கொலை என்றால்...” எனும் தலைப்பில் ‘சாளரம்’ பதிப்பகம் 304 பக்கங்களில்  நூலாக வெளியிட்டுள்ளது. தோழர் எஸ்.வி. ராஜ துரை, இந்த நூலைத் தொகுத்து, ஒரு நீண்ட முன்னுரையையும் எழுதி யுள்ளார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 31.3.2011 அன்று மாலை சென்னை ‘இக்சா’ மய்யத் தில் நிகழ்ந்தது. இரா. எட்வின் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட, திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு நூலைப் பெற்றுக் கொண் டார். இவர்களோடு எழுத்தாளர் பாமரன், எஸ்.வி. இராசதுரை ஆகியோரும், நூலின் உள்ளடக்கம் பற்றி, விரிவாகப் பேசினர். முத்து வேல் நன்றி கூறினார்.
தோழர் எஸ்.வி. இராஜதுரை எழுதிய முன்னுரையில் நிறைவாக குறிப்பிட்டுள்ள கருத்து:
“கல்வி, பாட நூல்கள், பண்டைத் தமிழ் இலக்கியம், தனித் தமிழ் இயக் கம், வடமொழி ஆதிக்க எதிர்ப்பு, பண்டைத் தமிழ் இலக்கியங்களைத் திறனாய்வு செய்தல், கல்விக் கூடங் களில் சாதிப் பாகுபாடு, தமிழர்களின் இழிநிலைக்குக் காரணமாக உள்ள சாத்திரங்கள், நம்பிக்கைகள் ஆகிய பல்வேறு விடயங்களில் கவனஞ் செலுத்தியும் தக்கத் திறனாய்வுகள் செய்தும் பிற தமிழறிஞர்களும் தமிழ்த் தேசியர்களும் காண விரும்பிய ‘தமிழ’ருக்கு முற்றிலும் மாறான சுயமரியாதை திராவிட ‘தமிழரை’ உருவாக்க முனைந்தார் பெரியார். அவராலோ, ‘திராவிடர்’ என்னும் குறிப்புச் சொல்லாலோ தமிழரின் அடையாளம் மறைக்கப் படவில்லை; மாறாக, அந்த அடை யாளம் துலங்கப் பெற்றது. தமிழ் மக்களால் தமிழர் தலைவராக ஏற்கப்பட்டு வந்த ஒரே தலைவராக இருநதவர் பெரியார் தான் என்பதற்குச் சான்று பகரும் கட்டுரை கள் இங்குள்ளன. தமிழர் களை இழிவுபடுத்தும் ‘வருஷப் பிறப்பு’ கதைகளைப் பெரியார் 1944 இல் எடுத்துச் சொன் னார். ஐம்பத் தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே, தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் பிறப்பதாக அரசாங்கம் அறி விக்கும் நிலை ஏற்பட்டது. ‘சூத்திரன்’, ‘பறையன்’ பட்டங்கள் நீங்கப் பெற்ற தமிழரைக் காண்பதுதான் பெரியாரின் கனவாக இருந்ததேயன்றி புற நானூற் றுத் தமிழரையோ, சிலப்பதிகாரத் தமிழரையோ, இராஜராஜன் காலத்துத் தமிழரையோ அல்ல”.

Pin It