சாதி தீண்டாமைக்கு எதிரான கருத்துகளை முன் வைத்து ஏப். 14 ஆம் தேதி போடியில் தொடங்கிய கழகத்தின் பரப்புரைப் பயணம் மே 10 ஆம் தேதி புதுவையில் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயணத்தின் தொடர்ச்சியாக கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகளை அறிவித்தார். 

•                     தமிழகம் முழுதும் கிராமங்களில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அமைப்புகள், கடைகள் பற்றிய பட்டியலை கழகத் தோழர்கள் தயாரிப்பார்கள்.

 •                     அந்தத் தீண்டாமைகளை அகற்றக் கோரும் பரப்புரைப் பயணம் இரண்டாவது கட்டமாக கழக சார்பில் நடத்தப்படும். 

•                     மற்றொரு நடவடிக்கையாக சட்டத்துக்கு எதிராக பின்பற்றப்பட்டுவரும் இந்தத் தீண்டாமைக்கு எதிரான பொது நலன் வழக்குகள் தீண்டாமையைத் தடுக்கத் தவறிய அமைப்புகள், அதிகாரிகள் மீது கழக சார்பில் வழக்குகள் தொடரப்படும். 

•                     தமிழ்நாட்டில் மய்யப் பகுதியான திருச்சியில் கிறித்தவர் களுக்கான கல்லறையில் ‘தீண்டப்படாத’ மக்களுக்காக குறுக்குச் சுவர் எழுப்பி தனிக் கல்லறை இருந்து வருவதை அரசின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இந்தியாவின் ‘சுதந்திர நாள்’ என்று கூறப்படும் ஆக. 15-க்குள் இந்தத் ‘தீண்டாமை’யைத் தடுக்கும் சுவரை இடிக்கா விட்டால், திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை கழகம் நடத்தும். 

- என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார். 

இந்தப் போராட்டங்களில் கட்சிகளைக் கடந்து, இந்த கோரிக்கையின் நியாயத்தை ஏற்போர் பங்கேற்க முன் வரவேண்டும். பங்கேற்க இயலாதவர்கள், தங்களது ஆதரவை வழங்க வேண்டும். அல்லது குறைந்தபட்சமாக சந்திக்கும் தோழர் களிடம் இது பற்றி எடுத்துக் கூறி, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்குவதிலாவது தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

Pin It