Buddhaசைவம் 6ஆம் நூற்றாண்டில் வேதமதத்தில் இருந்து தோன்றிய ஒரு பிரிவு. எனவே புத்தர் சைவர் என்பது தவறு. அவர் வேத மதத்தவர். பின்னாளில் சாதியை மறுத்துரைத்தவர். பிராமணர்களுடைய வேள்வியில் விலங்குகள் ஆகுதி ஆக்கப்படுவதைக் கண்டித்தவர்.

கடவுள் இல்லை, இருந்தால் உலகம் இந்தளவு அலங்கோலமாக இருக்காது என வாதிட்டவர். கடவுள் உலகைப் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார் என்ற கேள்வி எழும். புத்தர் ஆன்மா என்ற ஒரு பொருள் இருப்பதை மறுத்தவர்.

ஒவ்வொருவனும் தனது விடுதலையை தானே முயன்று பெற வேண்டும். மற்றவர்கள் உதவி செய்ய முடியாது. தான் ஒரு வழிகாட்டி, ஆசிரியர் என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.

- வேலுப்பிள்ளை தங்கவேலு

Pin It