கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

சிங்களச் சிறுக்கியும்
இந்தியப் பொறுக்கியும்
கூடி உலாவும்
கொடுமைப் பிறப்பே!

கலப்படமில்லா நஞ்சு நெஞ்சகனே!
கலப்படமுள்ள பிறவி வஞ்சகனே!
கொலைகாரனே! கொடூரனே!
இராசக்பசவே!

உன்னைப் பெற்றதால்
எம் இனத் தாய்க்குலம்
இழக்கலாம் வாழ்வை
இழக்குமா மாண்பை...

ஆழி சூழ்ந்து அழியட்டும்
உன் நிலம்...
தாழியாய் உடைந்து போகட்டும்
உன் குலம்!

உன் கொடுமைக்கு
விடையைக் காலம் சொல்லும்
எம் மக்களின்
விடுதலையைக் காலம் வெல்லும்...

வன்னி மரங்களில்
மின்னிடும் மாவீரர்கள்...
காற்றின் கதகதப்பில்
கனன்றிடும் உயிர்ப்புகள்...

வீழ்ச்சி களத்தில்...
கொள்கையில் இல்லை...
எழுச்சிப் புலிப்படைக்கு
தமிழீழமே எல்லை...